Published:Updated:

ஒரே நாள்... 250 அமைப்புகள்... 25 லட்சம் பனை விதைகள்...

பனைப் புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
பனைப் புரட்சி

வாட்ஸ் அப்பில் வெடித்த பனைப் புரட்சி!

ஒரே நாள்... 250 அமைப்புகள்... 25 லட்சம் பனை விதைகள்...

வாட்ஸ் அப்பில் வெடித்த பனைப் புரட்சி!

Published:Updated:
பனைப் புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
பனைப் புரட்சி

‘தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யுங்கள்...’, ‘இந்தப் பதிவை 10 பேருக்கு ஃபார்வேர்டு செய்தால், நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்’ போன்ற செய்திகள் வாட்ஸ் அப் குழுக்களில் வலம்வருகின்றன. இந்த நிலையில், இதே வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான சாதனையை நிகழ்த்தி யிருக்கிறது வாட்ஸ் அப் குழு ஒன்று. ஆம், தமிழகம் முழுக்க ஒரே நாளில் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை விதைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது அந்தக் குழு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஈரோட்டைச் சேர்ந்த ‘அன்புடன் அறம் செய்’ அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சியைச் சேர்ந்த ‘மாரல் ஃபவுண்டேஷன் இந்தியா’ அமைப்பின் தலைவர் விவேகானந்தன் ஆகிய இருவரும்தான் இந்தப் பனை விதைப் புரட்சிக்கு ‘விதை’ போட்டவர்கள்.

ஒரே நாள்... 250 அமைப்புகள்... 
25 லட்சம் பனை விதைகள்...

விவேகானந்தனிடம் பேசினோம்.

“பனைமரங்களுக்கு அடியில் கிடைக்கும் ஊற்றுநீர்தான் கோடைக்காலத்தில் தென் தமிழகத்தில் பல கிராம மக்களின் தாகம் தணிக்கிறது என்றெல்லாம் படித்திருக்கிறோம். பனைமரத்தின் மகத்துவத்தை, சுனாமி பாதிப்பின்போதும் கஜா புயல் பாதிப்பின்போதும் கண்கூடாகப் பார்த்தோம். இரண்டு பேரிடர்களிலும் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களைவிட பனைமரங்கள் இருந்த இடங்களில் பாதிப்பு குறைவாகத்தான் இருந்தது. கஜா புயலின்போது டெல்டா மாவட்டங்களில் ஐம்பது நாள்கள் தங்கி நிவாரணப் பணிகள் செய்தோம். பிரமாண்டமான மரங்கள் எல்லாம் வீழ்ந்து கிடக்க, பனைமரங்கள் மட்டும் கம்பீரமாக நின்றன. அப்போதே தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி பனை விதைகளை விதைத்துவிட வேண்டும் என்று நானும் பாலகிருஷ்ணனும் முடிவுசெய்தோம்.

மிகப்பெரிய இந்தத் திட்டத்தை நாங்கள் மட்டுமே நிறைவேற்ற முடியாது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் தமிழகம் முழுவதும் உள்ள சூழலியல் ஆர்வலர்களை வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைக்கலாம் என்ற யோசனை தோன்றியது. தகவலை வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததும் ஏராளமானோர் ஆர்வத்துடன் முன்வந்தார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்புடன் நாங்களே எதிர்பார்க்காத வகையில் ஒரே நாளில் 25 லட்சம் பனை விதைகளை தமிழகம் முழுவதும் விதைத்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை இதை புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதில் பங்கெடுத்த அனைவரும் அக்டோபர் 20-ம் தேதி ஈரோட்டில் ஒன்றிணைந்து பனை விதை மாநாடு நடத்த இருக்கிறோம். அடுத்ததாக தமிழகம் முழுக்க 40,000 குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை கையிலெடுத்திருக்கிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே நாள்... 250 அமைப்புகள்... 
25 லட்சம் பனை விதைகள்...

அவரைத் தொடர்ந்து பேசினார் பாலகிருஷ்ணன்.

“மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் விதைகளை விதைக்கலாம் என நினைத்தோம். ஆனால், வாட்ஸ் அப் குழுவில் இணைந்த சூழல் ஆர்வலர்களின் கரங்கள், எங்கள் எதிர்பார்ப்பைவிட வலிமையானவை என நிரூபித்துவிட்டன. மொத்தம் 250 அமைப்புகள் இதற்கு ஆதரவு கொடுத்தன. ‘உலக சாதனை உறவுகள்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ அப் குழுவை ஆரம்பித்து, ‘பனை விதைப்பைப் பற்றிய விஷயங்களை அதிலேயே விவாதித்தோம். செப்டம்பர் 22-ம் தேதி காலை 7 மணியிலிருந்து தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த அமைப்புகள், பனை விதைகளை விதைக்கத் தொடங்கினர். இரண்டு லட்சம் என்ற இலக்குடன் ஆரம்பித்து இறுதியில் 25 லட்சத்துக்கு மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் விதைத்திருக்கிறோம்.”

பனை விதைகள் மட்டுமல்ல, இதுபோன்ற நல்லெண்ணங்களும் செழித்து வளர வேண்டும்!

யார், எவ்வளவு?

சென்னை காக்கை அறக்கட்டளையினர் 50,000 பனை விதைகளும், விழுப்புரம் சர் சி.வி.ராமன் அறக்கட்டளையினர் சுமார் ஒரு லட்சம் விதைகளும், சோலைவனம் அமைப்பினர் கரூர், திருச்சி, கும்பகோணம், அரியலூர் பகுதிகளில் மொத்தம் ஒரு லட்சம் விதைகளும், மதுரையில் நீர்நிலைப் பாதுகாப்பு இயக்கம், வைகை நதி பாதுகாப்பு இயக்கம், பனை ஓலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுமார் ஒரு லட்சம் விதைகளும், நாகையில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் இரண்டு லட்சம் விதைகளும், திருச்சியில் எம்.ஏ.எம் கல்விக் குழுமத்தினர் 75,000 விதைகளும், நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 40,000 விதைகளும் விதைத்துள்ளனர். இப்படி பல்வேறு மாவட்டங்களிலும் விதைத்த நிகழ்வை ‘ஜி.பி.எஸ் கேமரா’ மொபைல் ஆப் மூலம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இதன்படி 25 லட்சம் விதைகள் என்று கணக்கிட்டுள்ளனராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism