Published:Updated:

``2024-ல் 400 பாஜக எம்.பி-கள்; தமிழ்நாட்டிலிருந்து 25 பேர்” - அண்ணாமலை நம்பிக்கை

அண்ணாமலை ஆறுதல்

``2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 400 எம்.பி-க்கள் இருப்பார்கள். அவர்களில் 25 பேர் தமிழ்நாட்டிலிருந்து பாரதிய ஜனதா சார்பாக வென்றவர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

``2024-ல் 400 பாஜக எம்.பி-கள்; தமிழ்நாட்டிலிருந்து 25 பேர்” - அண்ணாமலை நம்பிக்கை

``2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 400 எம்.பி-க்கள் இருப்பார்கள். அவர்களில் 25 பேர் தமிழ்நாட்டிலிருந்து பாரதிய ஜனதா சார்பாக வென்றவர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

Published:Updated:
அண்ணாமலை ஆறுதல்

மோடி அரசின் எட்டு ஆண்டுச் சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம், செட்டிகுளம் பண்ணையூரில் நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க தலைவர் தயாசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டம்
அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டம்

அண்ணாமலை் பேசுகையில், ``22 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முதல்வராகவும், எட்டு ஆண்டுகள் பிரதமராகவும் இருப்பவர் மோடி. இதுபோல் இந்தியாவில் வேறு யாரும் மக்களின் அமோக ஆதரவுடனும், செல்வாக்குடனும் இருந்ததில்லை. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அதிகப்படுத்தியிருப்பவர் மோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2024-ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் 400 எம்.பி-கள் வெற்றிபெற வேண்டும். அவர்களில் 25 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார். அந்த அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருக்க வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாட்டின் அரசியலை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியலை நமக்குப் பிடிக்கவில்லை. ஊழல் நிறைந்த அரசியலாக உள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் கரன்ட்டிலும்கூட தி.மு.க-வினர் ஊழல் செய்கிறார்கள். ஊழல் பெருச்சாளிகளைக் கொண்டு தி.மு.க அரசு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 45 கோடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டதுடன், 45 கோடி மக்களின் ஜன்தன் கணக்கில் 22 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்தியில் எட்டு ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த 400 ஆண்டுகளில் இந்தியா இழந்ததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
அண்ணாமலை, பா.ஜ.க மாநிலத் தலைவர்

கடந்த எட்டு ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஓர் அமைச்சர் ஊழல் செய்தார் என்று சொல்ல முடியாத அளவுக்கு மோடி நேர்மையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த 400 ஆண்டுகளில் இந்தியா இழந்ததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வேலை தேடி வருவார்கள். அந்த அளவுக்கு அறவழியில் மத்தியில் ஆட்சி நடக்கிறது” என்று பேசினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வான எம்.ஆர்.காந்தி, மாநில துணைச் செயலாளர்கள் சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உயிரிழந்தவர்களின் படத்துக்கு மரியாதை செலுத்தும் அண்ணாமலை
உயிரிழந்தவர்களின் படத்துக்கு மரியாதை செலுத்தும் அண்ணாமலை

முன்னதாக, கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அண்ணாமலை, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism