Election bannerElection banner
Published:Updated:

மன் கி பாத்: `சலூனில் நூலகம்; உங்களுக்கு பிடித்த நூல்?’ - தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முடித்திருத்தும் நிலையம் நடத்திவரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். மோடி, பொன் மாரியப்பனிடம் பேசுகையில். `வணக்கம் நல்லா இருக்கிறீங்களா?’ எனத் தமிழில் பேசினார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்றும் `மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் உரையாடிவருகிறார்.

அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணி அளவில் உரையாற்றினார் மோடி. நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளை இந்த ஆண்டு மிக எளிமையாகக் கொண்டாடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பண்டிகைக் கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``பண்டிகைக் காலங்களில் பொருள்கள் வாங்கும்போது உள்நாட்டுப் பொருள்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்நாட்டுப் பொருள்களுக்கு மக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முகக்கவசங்களை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. வரிசையாக பண்டிகைகள் வரவிருப்பதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்” என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முன்னதாக பிரதமர் மோடி தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்துவரும் பொன் மாரியப்பன் என்பவர் குறித்துப் பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில், முடித்திருத்தும் நிலையம் நடத்திவரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். மோடி, பொன் மாரியப்பனிடம் பேசுகையில். `வணக்கம் நல்லா இருக்கிறீங்களா?’ எனத் தமிழில் பேசினார். நூலகம் நடத்தும் யோசனை வந்தது குறித்தும், பிடித்த நூல் குறித்தும் கேள்விகள் கேட்டார். தனக்குப் பிடித்த நூல் திருக்குறள் என்று மாரியப்பன் தெரிவித்தார்.

`ரசிக்கவைக்கும் வில்லுப்பாட்டு; கதைசொல்லி வித்யா!' - `மன்-கி-பாத்' உரையில் பிரதமர் மோடி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு