உலக அளவில் யூடியூபில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ் வைத்திருக்கும் பிரபலங்களின் வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் வகிக்கிறார். உலகத் தலைவர்களில் யாருக்கும் இந்த எண்ணிக்கையில் யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைபர்ஸ் இல்லை என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்திருக்கிறது. மோடிக்கு அடுத்த வரிசையில் இரண்டாவதாக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனோரா இருக்கிறார். இவருடைய யூடியூப் சேனலை 36 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் இருக்கிறார். இவருடைய யூடியூப் சேனலை 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ நான்காவது இடத்தில் உள்ளார். இவரின் சேனலை 28.8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 7.03 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்கள் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யூடியூப் சேனலை 5.25 லட்சம் பேரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சேனலை 2.12 லட்சம் பேரும் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்.
சமீபத்தில் 'தி மார்னிங் கன்சல்ட்' உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் பிரதமர் மோடி, உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.