Published:Updated:

சிரிக்க வைக்கும் போதை ஊசி... பொறிவைத்து பிடித்த போலீஸ்!

தங்கேஸ்வரன், சரவணக்குமார், ஜோனத்தன் மார்க், வினோதினி
பிரீமியம் ஸ்டோரி
தங்கேஸ்வரன், சரவணக்குமார், ஜோனத்தன் மார்க், வினோதினி

பொறியியல் பட்டதாரியான ஜோனத்தன் மார்க், ரியாத்தில் வேலை பார்த்தபோது மருந்துகளை போதைக்குப் பயன்படுத்தும் முறை பற்றி அறிந்திருக்கிறார்.

மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக விற்றுவந்த கும்பலைக் கூண்டோடு பிடித்திருக்கிறது தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் அமைத்த தனிப்படை.

இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “திருச்சி யிலிருந்து தேனிக்குச் செல்லும் நள்ளிரவுப் பேருந்துகளில் போதை மருந்துகள் அனுப்பப்படும் தகவலறிந்ததும், அதைக் கண்காணிக்கத் தொடங்கினோம். சின்னமனூரில் பஸ் டிரைவரிடம் அந்த பார்சலை வாங்கியவரைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தோம். அந்த பார்சலில் 10 மில்லி அளவில் ஒரு மருந்து இருந்தது. அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தக்கூடிய அந்த மயக்க மருந்தை, போதைக்குப் பயன்படுத்துவதற்காக அந்த நபர் வாங்கியது தெரியவந்தது.

தங்கேஸ்வரன், சரவணக்குமார், ஜோனத்தன் மார்க், வினோதினி
தங்கேஸ்வரன், சரவணக்குமார், ஜோனத்தன் மார்க், வினோதினி

இந்த மருந்திலிருந்து, ஒரு மில்லியை உடலில் செலுத்திக் கொண்டாலே, 12 மணி நேரம் வரை போதையை அனுபவிக்க முடியுமாம். மருந்தை ஏற்றிக்கொண்டவர்கள் சிரித்துக்கொண்டே கனவுலகில் சஞ்சரிப்பார்களாம். பசி எடுக்காதாம். அந்த மருந்தை சின்னமனூரைச் சேர்ந்த தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோர் திருச்சியைச் சேர்ந்த ஜோனத்தன் மார்க் என்பவரிடம் வாட்ஸ்அப்பில் ஆர்டர் கொடுத்து கூகுள் பே-யில் பணம் செலுத்தி வாங்கியது விசாரணையில் தெரியவந்தது” என்றனர்.

ஜோனத்தன் மார்க் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தார் என்று கேட்டோம். “பொறியியல் பட்டதாரியான ஜோனத்தன் மார்க், ரியாத்தில் வேலை பார்த்தபோது மருந்துகளை போதைக்குப் பயன்படுத்தும் முறை பற்றி அறிந்திருக்கிறார். சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், போலி ஆவணங்கள் மூலம் ‘பிஸ்லி பார்மா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இது போன்ற போதை மருந்தைகளை அனுப்பிவந்திருக்கிறார். இவருக்கு உதவியாக வினோதினி என்பவரும் இருந்திருக்கிறார். கிரீன், பிங்க், ஆரஞ்ச் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். பத்து மில்லி கொண்ட பாட்டிலை 180 ரூபாய்க்கு வாங்கி, 1,500 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இவரிடம் மருந்து வாங்கும் கேரளா, தெலங்கானா, புதுச்சேரி மாநில கும்பல்கள், ஒரு மில்லி மருந்தை 600 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில், தேனி மாவட்டப் பெண் உட்பட 28 பேரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.

தேனி அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் பேசியபோது, “இது போன்ற மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நரம்பு, மூளை, கல்லீரல் பாதிக்கப்படும். தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்” என்றார்.

சிரிக்க வைக்கும் போதை ஊசி... பொறிவைத்து பிடித்த போலீஸ்!

தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் பேசியபோது, “ஜோனத்தன் மார்க்குக்கு விற்பனை செய்த மதுரையைச் சேர்ந்த மொத்த வியாபாரி குணநாதனைக் கைது செய்திருக்கிறோம். தேனியில் பிடிபட்டவர்கள் சொன்ன தகவல் களைவைத்து அந்த நெட்வொர்க்கிலுள்ள மற்றவர்களையும் தேடிவருகிறோம்” என்றார்.