Published:Updated:

சிங்காரி சென்னை! - போலீஸ் துணையோடு பாலியல் தொழில்... லட்சங்களில் புரளும் புரோக்கர்கள்...

போலீஸ் துணையோடு பாலியல் தொழில்...
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் துணையோடு பாலியல் தொழில்...

விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றி நான் குறைசொல்லவில்லை. ‘ஒருவர் தானாக முன்வந்து செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல.

சிங்காரி சென்னை! - போலீஸ் துணையோடு பாலியல் தொழில்... லட்சங்களில் புரளும் புரோக்கர்கள்...

விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றி நான் குறைசொல்லவில்லை. ‘ஒருவர் தானாக முன்வந்து செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல.

Published:Updated:
போலீஸ் துணையோடு பாலியல் தொழில்...
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் துணையோடு பாலியல் தொழில்...

சிங்கார சென்னை, சிங்காரி சென்னை யாகிக்கொண்டிருக்கிறது. “மும்பை ரெட்லைட் ஏரியா, கொல்கத்தாவின் சோனாகச்சி போல பாலியல் தொழிலுக்காக அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்று ஒன்று ஒதுக்கப்படவில்லையே தவிர, காவல்துறையின் ஆசியோடு இங்கே அந்தத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்...

தலைநகர் சென்னையில் பாலியல் தொழில் செய்ததாக, பெண்களும் புரோக்கர்களும் கைது செய்யப்படும் செய்திகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. மூழ்கியிருக்கும் பிரமாண்ட பனிப் பாறையின் நுனி (The tip of the iceberg) கடலுக்கு மேல் தெரிவதைப் போன்றதுதான் இந்தச் செய்தி என்கிறார்கள் விவரமறிந்தோர்.

“விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றி நான் குறைசொல்லவில்லை. ‘ஒருவர் தானாக முன்வந்து செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. அதுவும் ஒரு புரொஃபஷன் தான்’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. ஆனால், இங்கே பணக்காரர்களின் கேளிக்கைக் காகவும், அரசியல்வாதிகளின் சம்பாத்தியத்துக் காகவும் பெண்களைக் கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித் திருப்பதே நம் கவலை. இதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லையென்றால், தலைநகரில் பெண் களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும்” என்கிறார் சமூக ஆர்வலர் தமிழ்வேந்தன்.

சிங்காரி சென்னை! - போலீஸ் துணையோடு பாலியல் தொழில்... லட்சங்களில் புரளும் புரோக்கர்கள்...

கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைச் சந்தித்தோம். “பேங்க் லோன் வாங்கி, இன்ஜினீயரிங் படித்த கிராமப்புற மாணவி நான். சென்னைக்குப் போனால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். சென்னைக்கு வந்து, சைதாப்பேட்டை ஹாஸ்டலில் தோழி யுடன் தங்கியிருந்தேன். வேலை கிடைக்க லேட் ஆனது. ‘பிடித்த வேலை கிடைக்கும் வரையில் கிடைத்த வேலையைச் செய்வதுதான் புத்திசாலித் தனம்’ என்றாள் அவள். ஆன்லைனில் வேலை தேடி, தி.நகரில் இருக்கும் ‘ஸ்பா’ ஒன்றின் வரவேற்பாளர் பணியில் சேர்ந்தேன். மாதம் 20,000 ரூபாய் சம்பளம்.

ஒருநாள், ‘மசாஜ் செய்யும் பெண் வரவில்லை. எனவே, நீ மசாஜ் செய்’ என்று சொல்லி அறைக்குள் போகச் சொன்னார் ஓனர். ‘எனக்கு மசாஜ் செய்யத் தெரியாது சார்...’ என்று சொன்னபோது, ‘இதென்ன பெரிய கம்ப சூத்திரமா... உள்ளே சென்றால் தானாகத் தெரிந்துவிடும்’ என்று கட்டாயப்படுத்தி அனுப்பினார். எனக்கு ‘நோ’ சொல்லத் தெரியவில்லை. அங்கிருந்த கஸ்டமர், ‘எனக்கு ஆயில் பாத்’ என்றார். ஒன்றும் புரியாமல் வெளியில் வந்தேன். ‘எண்ணெய் தேய்ச்சுவிடத் தெரியாதா?’ என்று அதட்டியபடி என்னை உள்ளே அனுப்பி கதவைப் பூட்டிவிட்டனர். நான் எண்ணெய் கிண்ணத்தைத்தான் கையில் எடுத்தேன். மற்றதையெல்லாம் அந்த கஸ்டமரே செய்துவிட்டார். அதன் பிறகு சம்பளம் போக ‘இன்சென்டிவ்’ என ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தனர். இப்படி என் வாழ்க்கையே தடம் மாறிவிட்டது. பிறகுதான் தெரிந்தது, அங்கே வேலை பார்த்த பெண்களில் பாதிப் பேர் இப்படி கட்டாயப்படுத்தி ‘தொழிலில்’ தள்ளப்பட்டவர்கள் என்று. ஒருநாள் போலீஸார் நடத்திய ரெய்டுக்குப் பிறகுதான், அங்கிருந்து நான் மீட்கப்பட்டேன். காப்பகத்தில் சேர்க்கப்பட்ட என்னை என் பெற்றோர் சொந்த ஊருக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். பலர் இந்தத் தொழிலிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்” என்றார்.

பாலியல் தொழிலால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி டிரைவர் கோபால கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். ‘பழ வியா பாரம்’ என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த ரஞ்சித், அவரை வேலைக்குச் சேர்த்து புரோக்கராக்கிவிட்டார். அதே பகுதியில் பாலியல் தொழில் செய்த சல்மானின் அறிமுகம் கோபாலகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது. நாளடைவில் கோபாலகிருஷ்ணன், தனியாகக் கடைபோட்டதால், சல்மானுக்கும் அவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒரு லாட்ஜில் தங்கியிருந்த கோபாலகிருஷ்ணனை கடந்த 4.7.2022-ம் தேதி சிலர் கடத்திச் சென்று சித்ரவதை செய்திருக்கிறார்கள். கடைசியில் கூடு வாஞ்சேரி போலீஸார் அவரை மீட்டிருக்கிறார்கள்.

தமிழ்வேந்தன்
தமிழ்வேந்தன்

இப்படி தாம்பரம், சேலையூர், கூடுவாஞ்சேரி, சிட்லபாக்கம், திருவான்மியூர், துரைப்பாக்கம், ஆவடி, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சாதாரணமாக பாலியல் தொழில் நடக்கிறது. காவல்துறையினரின் ஆசியோடு தொழில் நடப்பதால், கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களை மீட்க ஆளில்லை. இந்தக் கொடுமைகளைத் தடுக்க வேண்டிய விபசார தடுப்புப் பிரிவு போலீஸாரோ பணத்தில் புரள்கிறார்கள்.

இந்தப் புகார்கள் குறித்து விபசார தடுப்பு பிரிவு போலீஸாரிடம் விளக்கம் கேட்டோம். கடந்த 4 மாதங்களில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகளையும், போட்ட வழக்குகளையும் பட்டியலிட்ட அவர்கள், “விரைவில் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.

ஆனால், அதே பிரிவில் பணிபுரியும் நமக்கு நெருக்கமான அதிகாரியோ, “சின்னச் சின்ன புரோக்கர்கள், விபசார கும்பல்கள் மீது தயங்காமல் எங்களால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. ஆனால், பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு அரசியல் செல்வாக்கும், உயர் அதிகாரிகளின் சப்போர்ட் டும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு கும்பல், வட மாநிலங்களிலிருந்து இளம்பெண்கள், சீரியல் நடிகைகளை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்து தொழில் செய்கிறது. ஒருநாள் பேக்கேஜ் என்று அந்தப் பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு கஸ்டமர் என்று நட்சத்திர ஹோட்டல்களில் தொழில் நடக்கிறது. ஆனால், அரசியல் செல்வாக்கு, பண பலம் காரணமாக அவர்களை எங்களால் நெருங்கக்கூட முடியவில்லை” என்றார்.

‘கஞ்சா வேட்டை’ போல, ‘விபசார வேட்டை’யிலும் காவல்துறை இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டதுபோல!