Published:Updated:

பேருந்தில் நடந்த தகராறை விசாரித்தபோது எஸ்.ஐ மரணம்! - தங்கச்சிமடத்தில் நடந்த துயரச் சம்பவம்!

இதைப் பார்த்து, பேருந்துப் பயணிகளும், சக காவலரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரைத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேருந்தில் தகராறு செய்தவர்களிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கச்சிமடம் காவல் நிலையம்
தங்கச்சிமடம் காவல் நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவருகிறார் இந்திரன். நேற்று இரவு எஸ்.ஐ இந்திரன் காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது, பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நகரப் பேருந்தில் குடிபோதையில் இருவர் தகராறு செய்வதாக காவல் நிலைய வாசலில் பேருந்தை நிறுத்திப் புகார் கொடுத்தார் டிரைவர்.

உடனே கான்ஸ்டபிளுடன் வந்த எஸ்.ஐ இந்திரன், பேருந்தில் தகராறு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். சத்தமாக விசாரித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார்.

இப்படியும் ஒரு நடத்துனர்! - நெகிழ வைக்கும் குன்னூர்  பேருந்து பயணம்
எஸ்.ஐ.இந்திரன்
எஸ்.ஐ.இந்திரன்

இதைப் பார்த்து பேருந்துப் பயணிகளும், சக காவலரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரைத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் விழுந்தவுடனேயே மாரடைப்பால் அவர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.ஐ பணியின்போது மரணமடைந்த தகவல் உயரதிகாரிகளுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது.

தங்கச்சிமடம் காவல் நிலையம்
தங்கச்சிமடம் காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ இந்திரனுக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் மகனும் மகளும் உள்ளனர். நீண்டகாலமாக இங்கு பணியாற்றி வந்தநிலையில் சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, அதற்காகச் சிகிச்சை எடுத்துவந்திருக்கிறார். காவல் நிலையப் பணியில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது எஸ்.ஐ மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு