Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

டெல்லியின் மன்னர் புள்ளியை நாளுக்கு நாள் ஓரங்கட்டிவருகிறார் முதன்மையானவர். வெளியே இன்முகம் காட்டினாலும், உள்ளுக்குள் ‘உர்’ரென இருக்கிறாராம். மன்னர் புள்ளிக்கு எதிரான ‘சிவ’ புள்ளியை அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவரக் காரணமும் இந்த உள்ளடி உக்கிரம்தானாம். டெல்லியின் காவிக் கட்சித் தலைவர்களிடம் மன்னர் புள்ளி காட்டுகிற நெருக்கம்தான் முதன்மையானவரின் கவனத்தை முதலில் உறுத்தியதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு நடந்த விசாரணை விவரங்களும் மன்னர் புள்ளிக்கு எதிராக அமைய, முதன்மையானவரின் ஆக்ரோஷம் இன்னமும் அதிகமானதாம். #கூடா நட்பு... கேடாய் முடியும்!

கிசுகிசு

காவிக் கட்சியின் அத்தனை அமைச்சர்களையும் முக்கியப் புள்ளிகளையும் சந்தித்துப் பேசிய பிறகு, தமிழகத்தில் இருக்கும் பவன் புள்ளியின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என உறுதியாக நம்பினாராம் முதன்மையானவர். ஆனால், முன்பைவிட மிக மோசமாக பவன்காரரின் நடவடிக்கைகள் அமைய, அதன் பிறகுதான் அவரை மாற்றும் கோரிக்கையை டெல்லியில் உரக்க வலியுறுத்தச் சொன்னாராம். இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள் அணுகிப் பேசியபோது, ‘எனக்குச் சரியெனப் பட்டதை மட்டுமே செய்வேன்’ எனக் கறாராகச் சொன்னாராம் பவன்காரர். #முன்னாடி பயங்கர கோவமா இருந்தாரு... இப்போ கோபத்துல பயங்கரமா இருக்கிறாரு!

கிசுகிசு

இலங்கையில் நடக்கும் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு மத்தியில், கச்சத்தீவைத் திரும்பப் பெற நினைக்கிறதாம் டெல்லி தரப்பு. தமிழகத்தில் காவிக் கட்சியை வலுவாகக் கால் ஊன்றவைக்க, கச்சத்தீவு மீட்பை நிகழ்த்திக்காட்டுவதுதான் ஒரே வழி என எண்ணி, அதற்கான முன்னகர்வுகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்களாம். இந்த விஷயத்தை முன்கூட்டியே யூகித்திருக்கும் தமிழகத் தரப்பு, கச்சத்தீவு மீட்புக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்குக் கோரிக்கை வைக்கப்போகிறதாம். ‘தங்களால்தான் நடந்தது’ எனக் காட்டிக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடாம். #தீர்வைவெச்சு அரசியல் பண்ணலாம்... தீவைவெச்சு அரசியல் பண்ணலாமா?

கிசுகிசு

“அதிகாரம் கையில் அகப்படும்போதே, பலருடைய அடையாளங்கள் அச்சு அசலாக அறியப்படுகின்றன” - இப்படியொரு குறுந்தகவலைத் தனக்கு நெருக்கமான ஆட்களுக்குச் சமீபத்தில் அனுப்பிவைத்தாராம் உயரிய அதிகாரி. ‘யாரைக் குறிப்பிடுகிறார்?’ என இந்தக் குறுந்தகவலை வைத்துப் பெரிய பட்டிமன்றமே நடத்தத் தொடங்கிவிட்டார்கள் மற்ற அதிகாரிகள். தினமும் நற்சிந்தனைகளைப் பலருக்கும் காலை வணக்கத் தகவலாக அனுப்புவது உயரிய அதிகாரியின் வழக்கமாம். அதேபோல் அனுப்பப்பட்ட சிந்தனைதானாம் அது. ஆனால், அதற்குக் கண், காது, மூக்கு வைத்து, முக்கிய ஆட்கள் வரை அனுப்பிவிட்டார்களாம் சில உள்ளடி அதிகாரிகள். #கருத்து சொன்னா அனுபவிங்க... ஆராயாதீங்கப்பா!

கிசுகிசு

டெல்லியில் கட்சி அலுவலகத் திறப்புவிழாவுக்குப் பிறகு, தனது வீட்டில் முதல்வருக்கும், அவர் மனைவிக்கும் உணவு ஏற்பாடு செய்தாராம் மில்க் புள்ளி. நல்ல பசியிலிருந்த முதல்வர், பலருடைய அழைப்பையும் தவிர்த்துவிட்டு மில்க் புள்ளி வீட்டுக்குப் போனாராம். உணவு சாப்பிடத் தொடங்கியவர், ‘ரொம்ப சுமாரா இருக்கே…’ என வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். அவசரகதியில் வெளியே ஆர்டர் செய்து கொண்டுவரப்பட்ட உணவுகளைக் காத்திருந்து சாப்பிட்டு, அதன் பின்னரே கிளம்பினாராம். உணவு உபசரிப்பு மூலமாக முதல்வரிடம் சில விஷயங்களைச் சாதித்துக்கொள்ள நினைத்த மில்க் புள்ளிக்கு, இது பெரும் சறுக்கலாக அமைந்துவிட்டதாம். # வட போச்சே!

கிசுகிசு

சமீபத்தில் மாற்றமான துறைகள், மீண்டும் மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறதாம். ‘துறைகளைப் பிரித்துத் தொங்கலில் விட்டுட்டாங்க…’ என மீசை மினிஸ்டர் வெளியே புலம்பினாலும், உள்ளுக்குள் அறுவடையை அமோகமாக நடத்திக்கொண்டுதான் இருக்கிறாராம். அதனால், போக்கும் வரத்துமான துறையை அவருக்குக் கொடுத்துவிட்டு, மகனுக்கு மகுடம் சூட்ட அவர் துறையைப் பறிக்கப்போகிறார்களாம். ‘அப்படியெல்லாம் பண்ணினால், கட்சியைவிட்டே கிளம்பிடுவேன்’ என ஆவேசமானாராம் மீசை மினிஸ்டர். # ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism