‘கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள எட்டு லட்சம் பேருக்கு, தினமும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது’ என்று மார்தட்டுகின்றனர் ஆளுங்கட்சியினர்.

ஆனால், ‘`அம்மா உணவகம் நடப்பதே எங்களுடைய வாரியத்தின் பணத்தில்தான்’’ என்று வெடிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னாள் தலைவருமான பொன்குமார்.

கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையில் கட்டப்படும் அனைத்துக் கட்டுமானங்களுக்கும் செஸ் கட்டணமாக ஒரு சதவிகிதத் தொகையை வாரியங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். இப்படி நாடு முழுவதும் வசூலான 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படாமல் இருக்கிறது. ஊரடங்கால் பாதித்துள்ள கட்டுமானத் தொழிலாளிகளுக்கு, இந்த நிதியிலிருந்து மாநில அரசுகள் உதவித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மாநிலச் சட்டத்தின்படி ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஒரு கட்டடம் கட்டினாலும், ஒரு சதவிகித செஸ் கட்ட வேண்டும். இதன்மூலம், 3,700 கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசும் `கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்’ என அறிவித்தது. ஆனால், ‘5,000 ரூபாய் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைப்பதோடு, ‘அம்மா உணவகம் இயங்குவதே எங்களின் பணத்தில்தான்’ என்று புதுத் தகவலையும் எடுத்துப் போட்டார் பொன்குமார்.

தொடர்ந்த பொன்குமார், ‘‘சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ‘கட்டுமானத் தொழிலாளிக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு அளிக்கப்படும்’ என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அரசாணையாக வரும்போது, ‘அதற்கான தொகை கட்டுமான நல வாரியத்தில் உள்ள வைப்புநிதியில் இருந்து வசூலித்துக் கொள்ளப்படும்’ என வந்தது. அதுவும் விற்பனை விலையில் அல்ல, தயாரிப்பு விலையில். அதாவது, அம்மா உணவகத்தில் ஓர் இட்லி ஒரு ரூபாய். ஆனால் கட்டுமானத் தொழிலாளிக்கு ஐந்து ரூபாய். நூறு பேர் சாப்பிட்டிருந்தால் ஆயிரம் பேர் சாப்பிட்டதாகக் கணக்குக்காட்டி, கட்டுமானத் தொழிலாளியின் வைப்புநிதியில் இருந்து பணத்தை வசூலித்து, அந்தப் பணத்தை வைத்து அம்மா உணவகத்தை நடத்தினார்கள்.

அதை எதிர்த்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நல வாரியத்தில் இருக்கும் 3,700 கோடி ரூபாய் பணத்தை, கட்டடத் தொழிலாளிகள் சிரமப்படும் இந்த நேரத்தில்கூட கொடுத்து உதவாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

டெல்லி அரசு 5,000 ரூபாய், பஞ்சாப் 6,000 ரூபாய், ஹரியானா 6,500 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிதியுதவி செய்துள்ளன. தமிழக அரசோ, 2,000 ரூபாய் அறிவித்துள்ளது. அதுவும் இன்னும் பலருக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. அதுமட்டுமல்ல, மொத்தமாக 33 லட்சம் பேர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதில், 12 லட்சம் பேர் மட்டுமே உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துள்ளனர். அதை காரணம் காட்டி, புதுப்பிக்காதவர்களுக்கு நல உதவி அளிக்க முடியாது என்கின்றனர்.

மற்ற பலன்களைப் பெறுவதற்கு பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும் என்று சொன்னால் பரவாயில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விதிகளைப் பேசுவது முறையல்ல. அதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலுக்கு, ஆறு மாதகாலம் ஜி.எஸ்.டி, டோல்வரி ஆகியவை ரத்துசெய்யப்பட வேண்டும். இதுகுறித்த மனுக்களை முதல்வருக்கும் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் பேசினோம். ‘‘கட்டுமானத் தொழிலாளி களுக்கு 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கிக் கொண்டிருக்கிறோம். 5,000 ரூபாய் நிதியுதவி கேட்டு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார்கள் என்றால், அதுகுறித்து முதல்வரே இறுதி முடிவு எடுப்பார். உறுப்பினராகப் புதுப்பித்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே நல வாரியத்தின் நிதியுதவிகள் வழங்க முடியும். நல வாரியத்துக்கு என சில விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படிதான் நடக்க முடியும்.

நல வாரியப் பணத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது என்பது தவறான தகவல். கடந்த ஒரு வருடத்துக்கு மொத்தமாகவே எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே நல வாரியத்திலிருந்து நிதி வசூலிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.