சென்னையில், தண்ணீர்ப் பஞ்சம் முதல் காற்று மாசு வரை பிரச்னைகள் ஏராளம். இதற்கான தீர்வுகளில் ஒன்றாகத்தான் மரங்களை வளர்க்கச் சொல்கிறார்கள்; பசுமைப் பரப்பை அதிகரிக்கச் சொல்கிறார்கள். இதற்கு, நகர ஊரமைப்புச் சட்டத்திலேயே இடம் இருக்கிறது. புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும்போது ‘பொது ஒதுக்கீடு இடம்’ (ரிசர்வ் சைட்) ஒதுக்கி, அதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு தானமாக அளிக்க வேண்டும். அதன் பிறகே அந்த மனைப் பிரிவுக்கு திட்ட அனுமதி வழங் கப்படும். சென்னை மாநகராட்சி யின் பல்வேறு பூங்காக்கள் இப்படித்தான் அமைக்கப்பட்டன. ஆனால், இப்போது அவை எப்படி இருக்கின்றன?

விகடன் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சென்னையில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்ட தொகை மற்றும் பயன்படுத்தப்பட்ட தொகை, பூங்காக்களில் பணியாற்றும் ஊழியர் களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைக் கேட்டோம். நாம் தகவல் கேட்டு அனுப்பிய 15 மண்டலங்களில் 8 மண்டலங்களிலிருந்து பதில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு களமிறங்கினோம்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 50 பூங்காக்கள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க 112 ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பூங்கா பராமரிப்புக்காக 2010–19 இடையிலான ஆண்டுகளில் 10.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 6,74,40,534 ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளருக்கு 363 ரூபாய் மற்றும் காவல் ஊழியருக்கு 328 ரூபாய் ஒரு நாள் சம்பளம் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி ஒன்றரைக் கோடி ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

சிவன் பூங்கா, ஜீவா பூங்கா, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கலைஞர் பூங்கா, சி.ஐ.டி நகர் - நந்தனம் பூங்கா, நெசப்பாக்கம் - ஏரிக்கரை பூங்கா தவிர, வேறு எந்தப் பூங்காவும் பராமரிக்கப் படவேயில்லை. பணியாளர்களும் இல்லை. பூங்கா பராமரிப்பில் இருந்தவர்களிடம் பேசியபோது, அவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளமும் தரப்படுவதில்லை என்றனர்.

ஆலந்தூர் மண்டலத்தில் 57 பூங்காக்கள் இருக்கின்றன. அவற்றில் 37 பூங்காக்களுக்கு 2017-18 நிதியாண்டில் 90.68 லட்சம் ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. அங்கு 9 காவலாளிகள் மற்றும் 45 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால், இந்த மண்டலத்தில் பெரும்பாலான பூங்காக்கள் படுமோசமான நிலையில் இருப்பதை நேரில் பார்த்தபோது அறிய முடிந்தது.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 61 பூங்காக்கள் உள்ளன. தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்புப் பணிகளுக்காக 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 5,48,00,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 3,04,72,527 ரூபாய் செலவிடப்பட்டது. மணலி மண்டலத்தில் உள்ள 24 பூங்காக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 1,92,50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,13,39,474 ரூபாய் செலவிடப் பட்டிருக்கிறது. அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 58 பூங்காக்களைப் பராமரிக்க 2010-2019 வரை 75.12 லட்சம் ரூபாய் செலவிடப் பட்டிருக்கிறது.

நமக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த பதில்களுக்கும் நேரில் பார்த்த காட்சிகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள். பல இடங்களில் அறிவிப்புப் பலகை மட்டுமே இருக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, துருப்பிடித்துக் கிடக்கின்றன. அந்த இடங்களில் காலி மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. அவை குடி மையங்களாகப் பயன்படுத்தப் படுவது தெரிகிறது. பூங்காக்கள் பராமரிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மாநகராட்சி அதிகாரிகள் சுருட்டி விடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான 2016-17 நிதியாண்டுக்குப் பிறகு இந்த நிதி ஒதுக்கீடு பல மடங்கு கூடியிருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தரவுகளிலிருந்து அறிய முடிகிறது. அந்தத் தொகையில்தான் பெருமளவு மோசடி நடந்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “மண்டலங் களிலிருந்து ஆண்டுதோறும் பூங்கா பராமரிப் புக்கு என ஒரு தொகையை நிர்ணயித்து, அரசிடம் கேட்பார்கள். அந்தத் தொகையை நிதித்துறை வழங்கும். 2016-17க்குப் பிறகு இந்த நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது உண்மைதான்” என்றார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டோம். “சென்னையில் 669 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 80 சதவிகிதப் பூங்காக்களை ஒப்பந்ததாரர்களும், 10 சதவிகிதப் பூங்காக்களை மாநகராட்சியும், மீதம் உள்ள 10 சதவிகிதப் பூங்காக்களை தனியார் நிறுவனங்களும் பராமரிக்கின்றன. நீங்கள் சொல்வதுபோல் பூங்காக்கள் பராமரிப்பில் நிறைய புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, முந்தைய நடைமுறைகளை மாற்றத் திட்ட மிட்டிருக்கிறோம். சரிவர பராமரிக்கப்படாத பூங்காக்களின் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பழைய ஒப்பந்ததாரர்கள் நீக்கப்பட்டு, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுடன் மாதம்தோறும் கூட்டம் நடத்தி, தரமான பராமரிப்பை உறுதிப் படுத்துவோம். மாநகராட்சி அலுவலர்களும் பூங்காக்களின் பராமரிப்பை உறுதிசெய்து, தலைமை அலுவலகத்துக்கு மாதம்தோறும் அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது” என்றார்.

அந்தந்தப் பகுதி மக்களும் இதைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறைகளை கேள்வி கேட்க வேண்டும்!