Published:Updated:

குடிகாரர்கள் கொட்டத்தில் குடைவரை கோயில்! - மீட்குமா தொல்லியல் துறை?

குடைவரை கோயில்
பிரீமியம் ஸ்டோரி
குடைவரை கோயில்

பொதுவாக, குடைவரைக் கோயிலின் கால அமைப்பை கருங்கல் கட்டுமானத்தை வைத்துத்தான் கணிக்க முடியும்.

குடிகாரர்கள் கொட்டத்தில் குடைவரை கோயில்! - மீட்குமா தொல்லியல் துறை?

பொதுவாக, குடைவரைக் கோயிலின் கால அமைப்பை கருங்கல் கட்டுமானத்தை வைத்துத்தான் கணிக்க முடியும்.

Published:Updated:
குடைவரை கோயில்
பிரீமியம் ஸ்டோரி
குடைவரை கோயில்

‘‘சிவகாசி அருகே, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுண்ணாம்புப்பாறை குடைவரைக் கோயில், குடிகாரர்கள் கொட்டமடிக்கும் இடமாக மாறியிருக்கும் அவலத்தை அரசின் கவனத்துக்கு ஜூ.வி-தான் கொண்டு செல்ல வேண்டும்” என்ற வேண்டுகோளுடன் நமது அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது.

குடிகாரர்கள் கொட்டத்தில் குடைவரை கோயில்! - மீட்குமா தொல்லியல் துறை?

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி கிராமத்துக்குச் சென்றோம். அர்ச்சுனா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது அந்தக் கோயில். வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். முழுவதும் சுண்ணாம்புப் பாறையைக் குடைந்து கோயிலை அமைத்திருக்கிறார்கள். கோயிலின் முகப்பு மண்டபத்திலிருந்து இடதுபுறமாக பக்கவாட்டுக்குச் சென்றால், பாதாளச் சுரங்கமாக திருச்சுற்று பிரகாரம் ஆரம்பமாகி, வலதுபுற பக்கவாட்டின் வழியே மீண்டும் கோயிலின் முகப்பு மண்டபத்துக்கு வந்து முற்றுப்பெறுகிறது.

“எங்க தாத்தா காலத்துல இந்தக் கோயிலில் சாமி சிலை இருந்ததாகவும், கோயிலுக்குள்ளேயே இருந்த ஊற்றுத் தண்ணியைவெச்சுத்தான் கருவறை சாமிக்கு அபிஷேகம் நடக்கும்னும் சொல்வாங்க. இப்போ ஊர் மக்கள் யாரும் அந்தப் பக்கம் போறதே இல்லை. அதனால, குடிகாரங்க கோயிலுக்குள்ளேயே கும்மாளமடிச்சுட்டு பாட்டிலை வீசிட்டுப் போயிடுறாங்க. இந்தக் கோயிலை அரசு முறையா பராமரிச்சா நல்லது” என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

குடிகாரர்கள் கொட்டத்தில் குடைவரை கோயில்! - மீட்குமா தொல்லியல் துறை?

“பொதுவாக, குடைவரைக் கோயிலின் கால அமைப்பை கருங்கல் கட்டுமானத்தை வைத்துத்தான் கணிக்க முடியும். இது சுண்ணாம்புக் குன்றை குடைந்து அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு கல்வெட்டுகளோ, ஓவியங்களோ, சிற்பங்களோ இல்லை. எனவே, கோயிலின் உண்மையான காலத்தைக் கணிக்க முடியவில்லை. சங்ககாலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாக இருக்கும் என கணிக்க முடிகிறது. தமிழகத்தில் இருக்கும் சுமார் 163 குடைவரைக் கோயில்களில் இது தனித்துவமானது. மாமண்டூரில் இருக்கும் மூன்றாம் குடைவரை, மாமல்லபுரத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர் குடைவரை ஆகியவற்றில் திருச்சுற்று முற்றுப்பெறவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலேயே திருச்சுற்றுப் பிரகாரம் முற்றுப்பெறும் வகையில் இருக்கும் ஒரே குடைவரை இதுதான். எனவே, இதன்மீது அரசும் தொல்லியல்துறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார், இக்கோயிலில் ஆய்வு நடத்தி புத்தகம் வெளியிட்டிருக்கும் டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் கலைக்கோவன்.

தங்கம் தென்னர சு
தங்கம் தென்னர சு

இது குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னர சுவிடம் பேசினோம். “இந்தக் கோயில் குறித்து ஏற்கெனவே பலமுறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சிற்பங்கள் இல்லாத நிலையில் அது முற்கால பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மூலம், கோயில் இருக்கும் இடம் கையகப் படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். பின்னர் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் கொண்டுவரப்படும். அதைத் தொடர்ந்து அரசு சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோயிலைப் புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தார்.

பாரம்பர்யத்தைப் பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism