Published:Updated:

திடீர் பிரச்னைகளுக்கு எளிமையான தீர்வு... உயிர் காக்கும் முதலுதவி! - ஆன்லைனில் இலவச பயிற்சி

முதலுதவிப் பயிற்சி
முதலுதவிப் பயிற்சி

திடீர் மாரடைப்பு, ரப்பரையோ காசையோ குழந்தை விழுங்கிவிட்டது போன்ற இக்கட்டான சூழலில் என்ன செய்வது என்பது பற்றிய ‘உயிர் காக்கும் முதலுதவி’ பற்றிய ஆன்லைன் பயிற்சியை ஜூனியர் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து வழங்குகின்றன. இதில் பங்கேற்பதற்கு அனைவரும் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்.

நடுத்தர வயதினருக்கும் வயதானவர்களுக்கும்தான் மாரடைப்பு வரும் என்கிற காலம் மாறி, இன்றைக்கு இளைஞர்களும்கூட மாரடைப்பு ரிஸ்க் வளையத்துக்குள் வந்துவிட்டனர். தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு அபாயம் பரவலாக அதிகரித்துள்ளது. எனவே, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வது என்பது பற்றிய முதலுதவி பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே க்ளிக் செய்க... பதிவு க்ளிக் செய்க.... https://bit.ly/3lqHBLT

முதலுதவிப் பயிற்சி
முதலுதவிப் பயிற்சி

இதில், மாரடைப்பு சூழலில் உயிர் காப்பதற்கு உடனடியாக அளிக்கப்படக்கூடிய `சி.பி.ஆர்' (Cardiopulmonary resuscitation) எனப்படும் மிக முக்கியமான நடவடிக்கை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட மனித உருவம் கொண்ட பொம்மையைவைத்து, செயற்கையான இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளை விளக்குவதுடன் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். இந்த முறையில் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கங்கள் தரப்படும் என்பது இந்தப் பயிற்சியின் கூடுதல் சிறப்பு.

அதேபோல, சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு திடீரென்று ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் பதற்றமாகிவிடும். எனவே, கைக்குழந்தையையும் சிறு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வோம். ஆனாலும், அதையும் மீறி குழந்தை ஏதாவது ஒரு பொருளை விழுங்கிவிடும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே க்ளிக் செய்க... பதிவு க்ளிக் செய்க.... https://bit.ly/3lqHBLT

முதலுதவிப் பயிற்சி
முதலுதவிப் பயிற்சி

அது காசாக இருக்கலாம், ரப்பராக இருக்கலாம், ஹேர்பின், பாசி, கோலிக்குண்டு, நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி என எதுவாகவும் இருக்கலாம். அவற்றை விழுங்கிவிட்டு குழந்தை கதறியழும்போது, பதற்றத்தில் நமக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அப்படியான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய பயிற்சியையும் ஆலோசனைகளையும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியின் மூலமாக வழங்கவிருக்கிறோம்.

காஸ் சிலிண்டர் எந்த அளவுக்கு ஆபத்தானது, அதை எப்படிக் கையாள வேண்டும், ஏதாவது தீவிபத்து ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய பயிற்சியையும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் வழங்குகிறோம். ஜூனியர் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து வழங்கும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.

முதலுதவிப் பயிற்சி
முதலுதவிப் பயிற்சி

செப்டம்பர் 5-ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கி 5;00 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். பாதுகாப்புப் பயிற்சியில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்த பாதுகாப்பு நிபுணர் கே.ஜெகதீஷ் அடபா, இதற்கான பயிற்சியை அளிக்கிறார். இவர் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்துவருபவர்.

வீட்டுச்சூழலில் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஆபத்துகள் பற்றியும், அதில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், விபத்து ஏற்படும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஜூனியர் விகடன் வழங்கிய ஆன்லைன் நிகழ்ச்சியில் மிகச்சிறப்பாக பயிற்சியளித்தார் கே.ஜெகதீஷ் அடபா. செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் அனைவரும் இலவசமாகப் பங்கேற்கலாம்.

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே க்ளிக் செய்க... பதிவு க்ளிக் செய்க.... https://bit.ly/3lqHBLT

அடுத்த கட்டுரைக்கு