Published:Updated:

ஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி!

ஊரடங்கை மீறி தொழுகை
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கை மீறி தொழுகை

தொழுகை நடக்கும் இடங்களுக்குச் சென்று கூட்டத்தைக் கலைக்க முற்படும் போலீஸாரிடம் தொழுகை நடத்துவோர் மல்லுக்கட்டும் சம்பவங்களும் தொடர்கின்றன.

ஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி!

தொழுகை நடக்கும் இடங்களுக்குச் சென்று கூட்டத்தைக் கலைக்க முற்படும் போலீஸாரிடம் தொழுகை நடத்துவோர் மல்லுக்கட்டும் சம்பவங்களும் தொடர்கின்றன.

Published:Updated:
ஊரடங்கை மீறி தொழுகை
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கை மீறி தொழுகை
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே அச்சத்தில் இருக்கிறது. தனித்து இருத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றின் மூலம்தான் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும் என்பதால், உலகின் பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்தியாவிலும் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.

அனைத்து வழிபாட்டுக்கூடங்களையும் மூடவேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருக் கிறது. ஆனால், கொஞ்சமும் சமூக அக்கறையின்றி பல இடங்களில் தொழுகையும் வழிபாடுகளும் நடத்தப்பட்டுவருவது வேதனையான விஷயம். தொழுகை நடக்கும் இடங்களுக்குச் சென்று கூட்டத்தைக் கலைக்க முற்படும் போலீஸாரிடம் தொழுகை நடத்துவோர் மல்லுக்கட்டும் சம்பவங்களும் தொடர்கின்றன.

ஊரடங்கை மீறி தொழுகை
ஊரடங்கை மீறி தொழுகை

ஏப்ரல் 3-ம் தேதி, தென்காசி, நடுப்பேட்டை மசூதியில் நடந்த தொழுகையை நிறுத்துவதற்காகச் சென்ற போலீஸாரிடம், அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தகராறு செய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார், “நாடு இப்போது இருக்கும் சூழலைப் புரிந்துகொள்ளாமல் மசூதியில் கூடி தொழுகை நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்க விஷயம். இஸ்லாமிய மக்களின் புனிதத்தலமான மெக்காவில் உள்ள மசூதியே மூடப்பட்டுவிட்ட நிலையில், தென்காசியில் 400 பேர் கூடி தொழுகை நடத்தியிருப்பதில் பல கேள்விகள் எழுகின்றன. மதக்கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால், அரசு அறிவிப்பை மதிக்காமல் தான்தோன்றித் தனமாகச் செயல்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தமிழகத்தில் ஏராளமா னோருக்கு கொரோனா நோய் தொற்றியிருக்கும் நிலையில், தொழுகைக்காகக் கூடுவதை, தற்செயலான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

ஊரடங்கை மீறி தொழுகை
ஊரடங்கை மீறி தொழுகை

தென்காசி மாவட்ட அரசு தலைமை காஜி முகைதீன் அப்துல்காதர் அன்சாரி ஹஜ்ரத்திடம் பேசினோம். ‘‘மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புக்கேற்ப, மார்ச் 21-ம் தேதி முதல் ஐந்து வேளை தொழுகையையும் வீட்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என அறிவித்திருக்கிறோம். அனைத்து மசூதி நிர்வாகத்தினரும் இதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதை மீறும் வகையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், தென்காசி நடுப்பேட்டை மசூதியில் தொழுகைக்காக மக்கள் கூடியது மிகப்பெரிய தவறு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை எடுத்த நடவடிக்கை சரியானது தான்.

‘கொடிய நோய்கள் ஏற்படும்போது ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது. கூட்டமாகச் சேரவோ பிறர் வீடுகளுக்குச் செல்லவோ கூடாது’ என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். ‘இஸ்லாமியர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்கள்’ என்ற நம்பிக்கை உண்டு. அதை மீறும் வகையில் கூட்டம் கூடி, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டனர்’’ என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டத் தலைவர் எஸ்.ஜலாலுதீன், ‘‘ஊரடங்கு உத்தரவை ஏற்று அனைத்து மசூதிகளிலும் தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழுகைக்கான பாங்கு ஒலித்ததும் வீடுகளிலிருந்து தொழுகை செய்தே அதற்கான பலனை அடையலாம். நடுப்பேட்டை மசூதியில் மக்கள் கூடி தொழுகை நடத்தியதை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில், போலீஸார் சமுதாயத் தலைவர்களை அழைத்துப் பேசாமல், பூட்ஸ் காலுடன் மசூதிக்குள் நுழைந்து ரத்தம் வரும் வரை மக்களை அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

தென்காசி டி.எஸ்.பி-யான கோகுல கிருஷ்ணனிடம் பேசியபோது, “பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தக் கூடாது என அனைத்து மசூதிகளுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்படியிருந்தும், நடுப்பேட்டை பள்ளிவாசலுக்குள் மக்கள் கூட்டமாகச் சென்றனர். அந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸாருடன் அங்கு சென்றோம். அப்போது, அந்தப் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத இளைஞர்கள் சிலர், சுவர் ஏறிக் குதித்து அங்கு இருந்த இமாமை மிரட்டி பள்ளிவாசல் சாவியைப் பறித்து கேட்டைத் திறந்துவிட்டது தெரியவந்தது.

ஜெயகுமார், முகைதீன் அப்துல்காதர் அன்சாரி
ஜெயகுமார், முகைதீன் அப்துல்காதர் அன்சாரி

நாங்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் இருந்து கூட்டத்தைக் கலைந்துபோகச் சொன்னோம். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் சிலர் செருப்பு, நாற்காலி உள்ளிட்டவற்றை வீசி எங்களைத் தாக்கினர். அதில் என்னுடன் வந்திருந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து நாங்கள் விரட்டியதால், குறுகிய பாதை வழியாக 400 பேர் ஓடினர். அதில் சிலர் தூக்கி வீசப்பட்ட நாற்காலிகளால் தடுக்கி விழுந்து காயமடைந்தனர். அனைவரையும் நாங்களே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். காயமடைந்த போலீஸாரும் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். தேவையில்லாமல் கூட்டத்தைச் சேர்த்துவிட்டு, கடமையைச் செய்த எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள்’’ என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர்; 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு, அசாதாரணமான சூழலில் சிக்கித்தவித்துவருகிறது. இத்தகைய நிலையில், உயிரைப் பணயம் வைத்து மருத்துவத் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை எனப் பல துறையினரும் பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யா மலாவது இருக்க வேண்டும். குறிப்பாக, காவல்துறையினரைத் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில், நாடு முழுக்கவிருந்து பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டுவரும் சூழலில், மேலும் மேலும் நிலைமையைச் சிக்கலாக்குவது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர் களுக்கே ஆபத்தானது. அத்துடன், தீராத பழிச்சொல்லுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.

தடையை மீறி ஜெபக்கூட்டம்!

கோவை கணபதி சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டில், ஏப்ரல் 5-ம் தேதி 15 பேர் கூடி ஜெபக்கூட்டம் நடத்தியுள்ள னர். இந்தத் தகவல் அறிந்த சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார், போலீஸாருடன் அந்த வீட்டுக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தார். பிரார்த்தனை நடத்திய பாதிரியார் ஜெபஸ்டின் அந்தோணிராஜ் உட்பட, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தொழுகை நடத்தியவர்கள்மீது வழக்கு!

கோவை உக்கடம் கோட்டைமேடு இதயத்துல்லா இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், மார்ச் 27-ம் தேதி 250 பேர் தடையை மீறித் தொழுகை செய்தனர். அங்கு சென்ற உக்கடம் போலீஸார், பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே பகுதியில் உள்ள சின்னப் பள்ளிவாசலிலும் 120 பேர் தடையை மீறித் தொழுகை செய்துள்ளனர். இதுகுறித்தும் வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளது.

- குருபிரசாத்

வைரலாகும் தொழுகை வீடியோ

ஏப்ரல் 3-ம் தேதி காரைக்குடி பள்ளிவாசலில் தொழுகைக்காக பலர் கூடியதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். ஏப்ரல் 5-ம் தேதி சிவகங்கை, இந்திரா நகரில் உள்ள பள்ளிவாசலில் 50-க்கும் மேற்பட்டோர் தொழுகைக்காகக் கூடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருவதால், சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகிறது.

- அருண் சின்னதுரை

திடீர் தொழுகை!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலத்திருப்பந்துருத்தியில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தி வருகின்றனர். நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரித்தும் அதை மதிக்காமல் திடீர் திடீரெனக் கூட்டம் கூடி தொழுகை நடத்துவதால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

- கு.ராமகிருஷ்ணன்