மதுரையில் அழகிரி கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஆரம்பித்த தொழில்களின் இன்றைய நிலவரம் என்ன என்று விசாரித்தோம்.

அழகிரியின் முதல் தொழில், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் ஆரம்பித்த ராயல் வீடியோ விஷன். அதன் அருகிலேயே மனைவி பெயரில் காந்தி சில்க்ஸ் என்ற துணிக்கடையை தொடங்கினார். பண்டிகை, திருவிழா இல்லாவிட்டாலும் அழகிரி மனதை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே கர்சீப் வாங்க கூட அடிக்கடி கடைக்கு வந்தார்கள் உடன்பிறப்புகள்.

அடுத்ததாக தயா டயக்னோஸ்டிக் சென்டரையும் ஆரம்பித்தார். டிவிஎஸ் நகரில் தயா திருமண மண்டபமும் பரபரப்பாக இயங்கியது. அதோடு மாட்டுத்தாவணியில் தயா சைபர் பார்க் என்ற வளாகத்தையும் உருவாக்கினார்.

இதற்கிடையே மகன் துரை தயாவை பங்குதாரராக்கி ஓலம்பஸ் என்ற கிரானைட் நிறுவனத்தையும் தொடங்கினார். பின்னர் சிவரக்கோட்டையில் தயா பொறியில் கல்லூரியைத் தொடங்கினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தபின் கல்லூரி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் கல்லூரியை வேறொரு நிறுவனத்திடம் கைமாற்றி விட்டார். இதேபோல் மிகப்பெரிய ஐ.டி சென்டராக உருவாக்கிய தயா சைபர் பார்க், தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதிலும், மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. கட்சியில் அழகிரியின் அதிகாரம் பறிக்கப்பட்ட பின்பு திருமண மண்டபத்தை எவரும் அணுகவில்லை. மகன் பங்குதாரராக இருந்த ஒலம்பஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறி விட்டாலும், அந்த நிறுவனம் மீது போடப்பட்ட வழக்குகள் மட்டும் நீடிக்கின்றன.

ராயல் வீடியோ, காந்தி சில்க்ஸ், டயக்னோஸ்டிக் சென்டர் ஆகியவை சில வருடங்களுக்கு முன்பே வேறு நபர்களுக்கு கைமாறி விட்ட நிலையில், தற்போது பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு விட்டதால் அந்த கடைகள் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விட்டன.

இப்படி ஒரு காலத்தில் மதுரையின் அடையாளமாக திகழ்ந்த மு.க.அழகிரி தொடங்கிய தொழில்கள் அடையாளம் இல்லாமல் போனது சோகமான வரலாறுதான்.