Published:Updated:

எப்படி இருக்கிறது பாப்பாபட்டி?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

அந்தக் காலகட்டத்தில் சி.பி.எம், புதிய தமிழகம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை நடத்த வேண்டுமெனப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தின.

எப்படி இருக்கிறது பாப்பாபட்டி?

அந்தக் காலகட்டத்தில் சி.பி.எம், புதிய தமிழகம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை நடத்த வேண்டுமெனப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தின.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

பாப்பாபட்டி, கீரிப்பட்டி தமிழக வரலாற்றில் மறக்க முடியாத கிராமங்கள். தலைவர் பதவியை பட்டியல் இனத்துக்கு ஒதுக்கிய பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் பல ஆண்டுகளாக ஊராட்சித் தேர்தலே நடக்க இயலாத சூழல். தப்பித்தவறி நடந்தாலும் தேர்தல் முடிந்த சில நாள்களில் ஊராட்சித் தலைவர் பதவி விலக வேண்டிய நிலை. இப்படிப்பட்ட சூழலில்தான் 2006 கருணாநிதி ஆட்சியில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பாப்பாபட்டி, கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றார் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவரும் ஸ்டாலின்தான். தேர்தலை நடத்திக்காட்டிய, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன், இப்போது ஸ்டாலினின் தனிச்செயலர். இத்தனை சிறப்புகளைக் கொண்ட பாப்பாபட்டி இப்போது எப்படி இருக்கிறது?

நம்மிடம் பேசிய அப்பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர், “நான்கு கிராமங்களை உள்ளடக்கிய பாப்பாபட்டி ஊராட்சியில் 30 சதவிகிதம் பட்டியல் சமூகத்தினர். 91-லிருந்து 2006 வரை அங்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது அரசுக்கு சவாலாக இருந்தது. வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டனர். அப்படியே தேர்தல் நடத்தினாலும், வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்ய மிரட்டப்பட்டனர்.

எப்படி இருக்கிறது பாப்பாபட்டி?

அந்தக் காலகட்டத்தில் சி.பி.எம், புதிய தமிழகம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை நடத்த வேண்டுமெனப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தின. 2006-ல் முதலமைச்சராக வந்த கலைஞரும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினும் தேர்தலை நடத்தியே ஆக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். அப்போது மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரனிடம் தேர்தல் நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் பலமுறை பாப்பாபட்டிக்கு வந்தார், ஊர்ப்பெரியவர்களிடம் இறங்கிப் பேசினார். அடம்பிடித்தவர்களிடம் அதிகாரமாகப் பேசினார். அதைத்தொடர்ந்து தேர்தல் நடந்து பெரியகருப்பன், முதல் பட்டியல் சமூக ஊராட்சித்தலைவரானார். ஆரம்பத்தில் சிலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் போகப்போக சரியாகிவிட்டது” என்றார்.

நம்மிடம் பேசிய பாப்பாபட்டி சசிகலா, “அப்பவும் சரி, இப்பவும் சரி, எங்க ஊர் மக்கள் சாதி வேறுபாடெல்லாம் பார்த்ததில்லை. நாங்க எதிர்பாக்குறது எங்க ஊருக்கு நல்ல திட்டங்கள்தான். எங்க ஊரு வானம் பார்த்த பூமியா இருக்கு, 58-ம் கால்வாய்ல தண்ணீர் விட்டாலே விவசாயம் நல்லாருக்கும். போலீஸ், ராணுவத்துக்குப் போகப் பயிற்சி எடுக்குற பசங்களுக்கு விளையாட்டுத் திடல், போட்டித்தேர்வு மையம் இதெல்லாம் வேணும், இதை முதலமைச்சர்கிட்டேயும் கோரிக்கை வச்சோம். அதவிட முக்கியமா சீர்மரபினரான எங்க மக்களோட இட ஒதுக்கீட்டை நிறைவேத்தித் தரணும். பஞ்சாயத்துத் தலைவர் நல்லா செயல்படுறாரு” என்றார். பலரிடம் பேசியபோது 15 ஆண்டுக்காலம் மக்களின் மனதில் ஏற்படுத்திய மாற்றத்தை நன்றாகவே உணரமுடிகிறது.

எப்படி இருக்கிறது பாப்பாபட்டி?

“ஊராட்சி நிர்வாகம் எப்படிப் போகிறது?” என்று பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் முருகானந்தத்திடம் பேசினேன். “ஊரிலுள்ள பிரச்னைகளை மக்கள் என்னிடம் நேரடியாக வந்து தெரிவிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுத்துத் தீர்த்து வைக்கிறேன். முன்புபோல் இல்லை, சுதந்திரமா செயல்படுறேன், எது சரி, எது சரியில்லை என்பதை நானே முடிவெடுக்கிறேன். முதலமைச்சர் எங்க ஊருக்கு வந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சி.”

ஜனநாயகத்துக்கும் சமூகநீதிக்கும் அடையாள மான பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு மறக்கமுடியாத, மகத்தான பாடம்.