Published:Updated:

நேற்று வரை குழப்பம்; இன்று அமைதியாக நடந்து முடிந்த மறைமுகத் தேர்தல்! - நெல்லை மாவட்ட நிலவரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்
தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை பெற்றபோதிலும் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர், யூனியன் சேர்மன் பொறுப்புகளுக்கு நேற்று வரை கடுமையான போட்டி நிலவியது. எனினும், இன்று அமைதியான முறையில் தலைவர் தேர்தல் நடந்தது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று (22-ம் தேதி) மாவட்ட ஊராட்சி மன்றம், ஒன்றியக்குழு ஆகியவற்றுக்கான தலைவர், துணைத் தலைவர்களையும் ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர்களையும் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்திலுள்ள ஒன்பது யூனியன் குழுக்களுக்கு தலைவர் தேர்தல் நடந்தது. அதில் வாக்களிக்கவிருந்த கவுன்சிலர்களை, தலைவருக்குப் போட்டியிட இருந்தவர்கள் சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்திருந்தனர். அதனால் தேர்தலின்போது தகராறு ஏற்படுவதைத் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டை, வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஒன்பது யூனியன் குழுக்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் தி.மு.க வெற்றிபெற்றது. மானூர் யூனியன் சேர்மனாக ஸ்ரீலேகா என்பவர் போட்டியின்றி தேர்வானார். மானூர் ஒன்றிய தி.மு.க செயலாளரான அன்பழகனின் மகளான ஸ்ரீலேகா 22 வயதே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற சேவியர் செல்வராஜா
சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற சேவியர் செல்வராஜா

பாளையங்கோட்டை யூனியன் தலைவராக தங்கப்பாண்டியன், வள்ளியூர்-சேவியர் செல்வராஜா, ராதாபுரம்-சௌமியா ஜெகதீஷ், நாங்குநேரி-சௌமியா ராகா, அம்பாசமுத்திரம்-பரணி சேகர், மானூர்-ஸ்ரீலேகா அன்பழகன், களக்காடு-இந்திரா ஜார்ஜ்கோசல், சேரன்மகாதேவி- பூங்கோதை சீவலமுத்து, பாப்பாக்குடி-பூங்கோதை சசிகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க-வுக்குள் போட்டி ஏற்படும் சூழல் நிலவியது. தி.மு.க-வைச் சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், செல்வலட்சுமி ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்படும் நிலை உருவானதால் கடைசியில் மேலிடத்தின் தலையீடு காரணமாக வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வானார்.

இளம் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன்
இளம் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன்

தி.மு.க-வைச் சேர்ந்த இரு கவுன்சிலர்களை ஜெகதீஷ் தரப்பினர் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவல் நிலவியது. இது தொடர்பாக மகேஸ்வரன் என்ற மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலரின் குடும்பத்தினர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருந்தனர். அதனால் இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில் அமைதியான முறையில் தலைவர் தேர்தல் முடிந்ததால் காவல்துறையினர் நிம்மதியடைந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு