"பெட்ரோல், டீசல், தங்கம் இதுமாதிரி தமிழ்நாட்டுல எந்தெந்தப் பொருள் களோட விலை எல்லாம் அதிகரிக்காம இருந்தா நல்லா இருக்கும்..?” என நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் ஒரு கேள்வி கேட்டிருந் தோம். இதற்கு நம் வாசகர்கள் தங்கள் ஏக்கத்தையும் எதிர்பார்பையும் கலகல கமென்ட்டுகளாக மாற்றி, ரகளை செய்திருந்தனர். அவற்றில் சில இதோ...

பிரசன்ன நாராயணசாமி என்ற வாசகர், “கல்விக் கட்டணம், காஸ் சிலிண்டர், டோல் கட்டணம், தங்கம், வெள்ளி, வீட்டு வாடகை, புள்ளிங்கோ பாக்கெட் மணி, ஜி.எஸ்.டி கட்டணம்...” என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டிருந்தார். எல்லாம் ஓகே சார்... அதென்ன புள்ளிங்கோ பாக்கெட் மணி..? பாக்கெட் மணி கேட்டு பசங்க ரொம்ப டார்ச்சர் பண்றாங்களோ..!

“பூமர் (Boomer Chingam) விலை அதிகரிக்காம இருந்தா நல்லா இருக்கும்”னு கமென்ட் பண்ணிருக் காரு கங்கா விக்கி. 90’ஸ் கிட்ஸா சாமி நீயி!

“சமையல் எண்ணெய், டீத்தூள் விலை, பெட்ரோல், ஹோட்டல்களில் சைவ உணவு விலை, கட்டுமானப் பொருள்களான கம்பி, செங்கல்களின் விலை, எலெக்ட்ரிக் ஒயர்களின் விலை... இந்தப் பொருள்கள் எல்லாம் கடந்த சில வருடத்தில 40% விலை உயர்ந்திருக்கு. பொதுவா, காலத்துக்கு ஏற்றமுறையில் விலை உயர்வைத் தடுக்க முடியாது. ஆனா, நாற்பதில் இருந்து 60% என்பது கடுமையான விலை உயர்வு. இது நடுத்தர வர்க்கங் களை கடனில் தள்ளும்! ஆட்சி யாளர்களின் நிர்வாகத் திறமை யின்மையே இதற்குக் காரணம்”னு தன்னோட ஆதங்கத்தையும் கோபத்தையும் சேர்த்து பொங்கி, ஒரு பொங்கலே வச்சிருக்காரு மன்னர் மன்னன்! என்ன பண்றது சார்... நம்ம ஆட்சியாளர்களோட டிசைன் அப்படி!

“மொபைல் டேட்டா பேக் விலை, ஆட்டு இறைச்சியின் விலை, சினிமா டிக்கெட் விலை, தியேட்டர்ல விக்கிற பாப்கார்னோட விலை... இதெல்லாம் அதிகரிக்காம இருந்த நல்லா இருக்கும்”னு சொல்லிருக்காரு பிரகாஷ்! கொரோனா காலத்துல தியேட்டருக்குப் போறதோட, பாப்கார்னும் வாங்கிச் சாபிடுறீங்களா... பேஷ், பேஷ்!

“பாதாம், பிஸ்தா விலை அதிகரிக்கக் கூடாது”னு சொல்லிருக் காரு மகி. சமூகம் ரொம்ப பெரிய இடம் போல!

“ஏற்கெனவே நொந்து போயிருக்கோம். ஜாலியா பதில் கேக்குறீங்களா..?” என்று கண்கள் சிவக்க கமென்ட் பண்ணிருக்காரு செந்தில்குமார். ‘இந்த ரணகளத்துலே யும் உனக்குக் கிளுகிளுப்பு கேக்குதா..?’ - செந்தில்ஜி, இதுதானே உங்க மைண்ட் வாய்ஸ்..? ஹி ஹி!

“நாணயம் விகடன் ஆரம்பத்தில் இருந்த விலையிலே இருந்தா எல்லாரும் வாங்கிப் படிக்கலாம்”னு சொல்லிருக்காரு தில்லை மகேந்திரன். ஆஹா... அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எங்க தலையிலேயே கைவச்சிட்டீங்களே பாஸு... ஆனா, நாணயம் விகடன் வாங்க நீங்க தர்ற ரூ.25 செலவு இல்ல, புத்தி கொள்முதல்..! ஒண்ணுக்கு ரெண்டா திரும்பக் கிடைக்கும்!

“ஒரு கிலோ அரிசி ரூ.50, பொரியலுக்கு ரூ.50, சாம்பார் வைக்க ரூ.50, நைட்டுக்கு தோசை மாவு ரூ.30, சட்னி வைக்க ரூ.25..! ஆனா, என் சம்பளம் 500. என்னத்த சொல்ல... சம்பளம் கூடுனா நல்ல இருக்கும் சாமி!”ன்னு கேட்டுருக்காரு தேவ வர்ஷன். உன் குத்தமா... என் குத்தமா... யாரை நானும் குத்தம் சொல்ல..?

“சொன்னாப்புல மட்டும் எல்லாம் மாறிடுமா?”னு கேட்ருக்காரு அதிரூபன். என்னா தல பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட... சரி விடு!