அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று 2006-ம் ஆண்டு தமிழகத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே அர்ச்சகர் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இரண்டாவதாக இன்னொருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் பெரிய சாதனையாக சிலாகிக்கும் வேளையில், “ `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று தமிழக அரசு அரசாணை நிறைவேற்றி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு பேர் மட்டும் அர்ச்சகராகியுள்ளனர். இது சாதனையா?’’ எனக் கொந்தளிக்கின்றனர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள்.

தி.மு.க ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. `அதில் பயின்று தேர்வு பெறுபவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர் பணி வழங்கப்படும்’ என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதி சிவாச்சாரியார் சங்கம், இந்த அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை இல்லை. ஆகமக் கோயில்களில், அந்தந்த ஆகமத்தின்படி அர்ச்சகர்களை நியமிக்கலாம்’ என்று 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2018-ல் மாரிச்சாமி என்பவர் மதுரை ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். தற்போது தியாகராஜன் என்பவர் நாகமலை பிள்ளையார் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன் நம்மிடம், “தமிழகத்தில் அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி மாணவர்கள் 206 பேர் உள்ளனர். அவர்களில் இருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். ஆனால், மற்றவர்களுக்கு எப்போது பணி கிடைக்கும்? மதுரை மீனாட்சியம்மன், பழநி, திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதர், மயிலை கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் அர்ச்சகர் பணி நியமனங்கள் ரகசியமாகவே உள்ளன.

பரம்பரைவழி அர்ச்சகர் உரிமை, சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்தின் பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். `ஆகமக் கோயில்களில் தீட்சை பெற்றவர்கள் அர்ச்சகராகப் பணியாற்றலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், தீட்சை பெற்ற எங்களை நியமிக்கச் சிலர் தடுக்கிறார்கள். இதையெல்லாம் பேசும் எங்களைச் சிலர் மிரட்டுகிறார்கள்’’ என்றார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சட்ட உதவி செய்துவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா, அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா என்பதில் தெளிவு இல்லை. திராவிடவழி வந்ததாகச் சொல்லும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்து சொல்லவில்லை. சைவ, வைணவ பொதுக் கோயில்களில் பல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அர்ச்சகர் காலி பணியிடங்களும் உள்ளன. ஆனாலும், அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயங்குகிறது. இனியாவது பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். `அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி’ என்பது வெறும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சட்டத்தில் கூறப்பட்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதி, தனிமனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது’’ என்றார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டோம், “கண்டிப்பாக அவர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அர்ச்சகராகப் பணியாற்ற சாதிப் பாகுபாடு இல்லை என்பதை நாங்கள் வெகு நாள்களாகக் கூறிவருகிறோம். பல இடங்களில் அது இயல்பாக நடந்துவருகிறது. சில அரசியல் கட்சிகள்தான் இதை அரசியலாக்குகின்றன. இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம்கூட சென்றிருக்கத் தேவையில்லை. தீட்சை பெற்ற அனைவருக்கும் அர்ச்சகர் பணி உடனே வழங்க நாங்கள் அரசை வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் விளக்கம் கேட்க அவருடைய அலைபேசிக்கு முயன்றோம். பிறகு தொடர்புகொள்வதாகச் சொன்னார். தொடர்ந்து குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்கும்பட்சத்தில் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.