Published:Updated:

பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை..! - சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவர ஆவணங்கள்

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மோடி குஜராத் காந்தி நகரிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலுள்ள தனது வங்கிக் கணக்கில் ரூ. 3,38,173 மற்றும் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1,60,28,939 வைத்திருக்கிறார்.

2020-ம் ஆண்டுக்கான பிரதமர் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள்களின் நிகர சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.36 லட்சம் உயர்ந்திருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 3.67 கோடி குறைந்திருக்கிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2.49 கோடியிலிருந்து ரூ. 2.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. மோடி தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்த வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தின் உயர்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மோடி குஜராத் காந்தி நகரிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலுள்ள தனது வங்கிக் கணக்கில் ரூ. 3,38,173 மற்றும் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1,60,28,939 வைத்திருக்கிறார்.

மோடி
மோடி

அதுமட்டுமல்லாமல் ரூ.8,43,124 மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1,50,957 மதிப்பிலான ஆயுள் காப்பிடுகளும், ரூ.20,000 மதிப்பிலான வரி சேமிப்பு பத்திரங்களும், ரூ.1.75 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் கணக்கில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு மூன்று பேருடனான கூட்டுரிமையின் ( 25% ) அடிப்படையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3,531சதுர அடி நிலம் ஒன்றை ரூ.1.3 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறார். அதன் தற்போதைய மதிப்பு ரூ.1.10 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். மேலும், இதுவரை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் வங்கிகளின் மூலம் கடன் எதுவும் பெற்றதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் மிகவும் செல்வாக்கான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த அமிஷ் ஷாவின் கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ. 32.3 கோடி. ஆனால், இந்த ஆண்டு சொத்து மதிப்பு அதிலிருந்து ரூ.28.63 கோடியாகக் குறைந்திருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வங்கிக் கணக்கில் 1.04 கோடி ரூபாயும், ரூ.44.47 லட்சம் மதிப்பிலான நகைகளும், அசையா சொத்துகளாக குஜராத்தில் 10 இடங்களும், தனது மனைவியின் பெயரில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்துகளையும் வைத்திருப்பதாகவும், இதன் நிகர மதிப்பு கடந்த ஆண்டைவிடக் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிற மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் :

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

அசையும் சொத்துகளின் மதிப்பு: ₹1.97 கோடி

அசையா சொத்துகளின் மதிப்பு: ₹2.97 கோடி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி:

அசையும் சொத்துகளின் மதிப்பு: ₹2.97 கோடி

அசையா சொத்துகளின் மதிப்பு: ₹15.98 கோடி

இவருக்குச் சொந்தமாக ஆறு வாகனங்கள் இருக்கின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:

ரூ.99.36 லட்சம் மதிப்பிலான குடியிருப்புப் பகுதியை நிர்மலா சீதாராமன் கணவருடன் இணைந்து சொந்தமாக வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விவசாய நிலங்களின் மதிப்பு: ரூ.16.02 லட்சம்.

ரூ.28,200 மதிப்பிலான பஜாஜ் சேட்டக் இரு சக்கர வாகனம் - 1.

ஸ்மிரிதி இராணி:

அசையும் சொத்துகளின் மதிப்பு: ₹1.77 கோடி

அசையா சொத்துகளின் மதிப்பு: ₹4.64 கோடி

ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல்:

அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு: ₹27.47 கோடி

அடுத்த கட்டுரைக்கு