Published:Updated:

லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்... தத்தளிக்கும் தனியார் வங்கிகள்!

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

சிக்கல்

லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்... தத்தளிக்கும் தனியார் வங்கிகள்!

சிக்கல்

Published:Updated:
வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

ந்தியப் பொருளாதாரத்தை உலுக்கிவரும் வாராக்கடன் பிரச்னை, பொதுத்துறை வங்கிகள் மட்டுமே சம்பந்தப்பட்டது போலவும் வாராக்கடன் பிரச்னைக்கு ஒரே தீர்வு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பதுபோலவும் அண்மைக்காலம் வரை பலரும் பேசிவந்தனர். ஆனால், தனியார் துறை வங்கிகளில் சமீபகாலமாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, வங்கி தனியார்மயத்தைத் தூக்கிப்பிடித்தவர்கள் வாயடைத்துப்போயிருக்கிறார்கள்.

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

தவிர, தனியார் வங்கிகளின் கடன் மேலாண்மை குறித்துப் பல கேள்விகளையும் எழுப்பி, இதற்கெல்லாம் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவருவது எப்போது என்று பலரும் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம், தனியார் வங்கிகளில் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் முறைகேடுகளால், அவற்றில் முதலீடு செய்துள்ள பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, அந்த வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் களும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டியிருக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

லஷ்மி விலாஸ் பேங்க்

2018-19-ம் ஆண்டிற்கான லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து மத்திய வங்கி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கடந்த 27.09.2019-ம் தேதி, அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்திற்குள் (Prompt Corrective Action) கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு வணிக வங்கியின் மூலதன விகிதாச்சாரம் (Capital to Risk-weighted Assets Ratio), வாராக்கடன் மற்றும் லாப விகிதம் ஆகிய முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகள், அபாய கட்டத்தைத் தாண்டும்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கியானது தனது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரும். தற்போதைய உத்தரவின்படி, லஷ்மி விலாஸ் பேங்கின் அன்றாட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை

என்றாலும், மேற்சொன்ன முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வரை, அந்த வங்கியால் பெரும் கடன்கள் எதையும் வழங்க முடியாது. மேலும், குறிப்பிட்ட துறைகளில் அதிகப்படி யாக வழங்கப்பட்டுள்ள கடன்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புதிய கிளைகளைத் துவக்கு வதற்கும் டிவிடெண்ட் வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெற வேண்டியிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கி
வங்கி

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தந்த அதிர்ச்சி விலகுவதற்குள், மற்றொரு திருப்ப மாக, டெல்லி காவல்துறையின் பொருளா தாரக் குற்றத் தடுப்புப்பிரிவு, லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தின் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. ரெலிகேர் குழுமத்தின் முன்னாள் தலைவர் களான மல்விந்தர் மற்றும் ஷிவிந்தர் சிங் சகோதரர்களுடன் கூட்டு சதியில் ஈடுபட்ட தாகவும் ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தின் வைப்புத்தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதாரக் குற்றப் பிரிவு பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கை ஆகியவை இந்த வங்கியானது இண்டியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணை வதில் சில பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகத் தற்போது பேச்சு கிளம்பியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த வங்கியின் உண்மையான நிதிநலன் குறித்த சந்தேகங்களும் பங்குச் சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (01.10.2019) அன்று இண்டியாபுல்ஸ் ஹவுஸிங் நிறுவனம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்க, லஷ்மி விலாஸ் பேங்கின் பங்குகளோ லோயர் சர்க்யுட் நிலையில் சிக்கிக்கொண்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனியார் வங்கி குறித்த வதந்திகள்

அக்டோபர் மாதத்தின் முதல் நாளில், இணையதளத்தின் வாயிலாக, பண்டிகை காலத்தை ஒட்டிய ஏராளமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றன. சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்...  தத்தளிக்கும் தனியார் வங்கிகள்!

யெஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் போன்ற வங்கிகள் இந்தப் பணப்பரிவர்த்தனை பிரச்னைகளுக்கு அதிகப்படியான பளு மற்றும் தொழிற்நுட்பக் கோளாறுகள்தான் காரணம் என்று விளக்கம் அளித்தாலும் ஏற்கெனவே பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி வாசலில் காத்திருக்கும் காணொளிகள் வைரலாகி வருவதால், தனியார் வங்கிகளின் பணப் பரிவர்த்தனையில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்தும் சந்தையில் வதந்திகள் பரவிட, யெஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், ஆர்.பி.எல் பேங்க் போன்ற தனியார் வங்கிகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சியடையத் தொடங்கின.

வாராக்கடன் உயர்வு, தலைமை மாற்றம், உள்ளாட்களின் பங்கு விற்பனை, அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளின் விற்பனை என ஏராளமான சிக்கல்களைச் சந்தித்து வரும் யெஸ் பேங்க் பங்கு பல வருடங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோல, ரியல் எஸ்டேட் கடன் குறித்த அச்சத்தின் காரண மாகவும் லஷ்மி விலாஸ் பேங்க் சிக்கல்களின் காரணமாகவும் வரலாறு காணாத அளவாக இண்டியாபுல்ஸ் நிறுவனம் 30.0.2019 அன்று ஒரே நாளில், தின வர்த்தகத்தின் ஊடே 38% வீழ்ச்சியடைந்தது.

ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள்

தனியார் வங்கிகள் குறித்து பொது வெளியில் வலம்வரும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி கடந்த 01.10.2019 அன்று பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ‘‘வங்கி வைப்புத்தொகையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை உண்டாக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வங்கிகளைப் பற்றிச் சில வதந்திகள் உலவி வருகின்றன. இந்திய வங்கித்துறை பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் குறிப்பிட்டது.

கூட்டுறவு வங்கித்துறை குறித்தும் இதே போல ஒரு அறிவிப்பைக் கடந்த 26.09.2019 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனமும் தனித்தனியே தமது நிலையை விளக்கும் பொது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூடீஸின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்...

‘ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிகவும் பலவீனமாக இருக்கின்றன இந்திய வங்கிகள்’ என்று எச்சரித்திருக்கிறது மூடீஸ் நிறுவனம். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகளில் உள்ள வங்கிகளின் நிதிநிலையை முழுமையாக ஆராய்ந்து பார்த்தபின்பு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது மூடீஸ் நிறுவனம். வங்கிகள் தரும் கடன் திரும்ப வராமல் போகும்போது, அதன்மூலதனம் கடுமையாகப் பாதிப்புள்ளா கிறது. இந்தியா, இந்தோனேஷியா இந்தச் சிக்கலைச் சந்திப்பதில் ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. இதற்கடுத்து சிங்கப்பூர், மலேசியா, சீனா வங்கிகள் இருப்பதாகச் சொல்கிறது மூடிஸ் நிறுவனம். ஒரு சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் தரப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். ஆனால், வாராக்கடன்களை இந்திய வங்கிகள் வேகமாக இனம் கண்டு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மூடிஸ் நிறுவனம் சொல்லியிருக்கிறது.

நம்பிக்கையை மீட்டெடுப்போம்

1969-ல் வணிக வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமாக, அப்போதைய தனியார் வணிக வங்கிகளில் சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்ததைத் தடுப்பதற்காகவே தேசியமயமாக்க முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மீண்டுமொரு முறை குறிப்பிட்ட சில தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், பெரு நிறுவனங்களுடன் கொண்டுள்ள தொடர்பு குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையைச் சீர்செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே, குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களை உடனடியாக ரிசர்வ் வங்கியின் முழுமையான தணிக்கைக்கு உட்படுத்தி, தவறுகள் ஏதேனும் இருந்தால் நிலைமையைச் சீர்செய்ய முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுக்க முடியும்.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே)

பி.எம்.சி வங்கி: வெளிச்சத்திற்கு வரும் ஊழல்!

பி.எம்.சி வங்கி வீழ்ச்சியின் பின்னணித் தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. பல போலியான கணக்குகளின் வாயிலாக சுமார் ரூ.4,355 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்...  தத்தளிக்கும் தனியார் வங்கிகள்!

இந்த வங்கியின் நிர்வாகத் தலைமை மற்றும் ஹவுஸிங் டெவலப்மென்ட் அண்டு இன்ஃப்ரா நிறுவனத்தின் (HDIL) மீது (ரிசர்வ் வங்கியின் குற்றச்சாட்டின் அடிப்படையில்) மும்பைக் காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பல பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்துள்ளது. ரூ.2,500 கோடி மதிப்புள்ள வாராக்கடன் சிக்கல் என முதலில் வெளியான தகவல்களுக்கு மாறாக, மிகப் பெரிய அளவிலான திட்டமிட்ட சதிச் செயல் நடந்திருப்ப தாகச் செய்திகள் வெளிவரத் துவங்கியிருப்பது, குறிப்பிட்ட வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இது, வாராக்கடன் அதிகமுள்ள மற்ற தனியார் வங்கிகள் மீதும் மோசடி குறித்த சந்தேகம் எழ வழிவகுத்துள்ளது!

தொடரும் ராஜினாமாக்கள்!

லஷ்மி விலாஸ் பேங்கின் சி.இ.ஓ பார்த்தசாரதி முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதக் கடைசியிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட, இந்த வங்கியின் இண்டிபெண்டன்ட் இயக்குநராக இருந்த சுப்ரியா பிரகாஷ் சென் கடந்த திங்கள் அன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக் கிறார். கடந்த ஜூன் மாதத்தில்தான் இவர் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். இதேபோல, யெஸ் வங்கியின் சீனியர் பிரசிடென்டாக இருந்த ரஜத் மோங்காவும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு முதலே இவர் இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியின் உயர்பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் இந்த வங்கியில் வைத்திருக்கும் பங்குகளையும் விற்றுவருகின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism