Published:Updated:

``கடனை கட்டிட்டு வேணா செத்துப் போங்க!" - விவசாயியை அதிரவைத்த தனியார் ஊழியரின் உரையாடல்

Call (Representational Image)
News
Call (Representational Image) ( Photo by Petr Macháček on Unsplash )

விவசாயக் கடனை பெற்றுத் திரும்பக் கட்ட முடியாமல் இன்னலுற்று வரும் விவசாயிடம், உச்சக்கட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைமுறை வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களையே திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன. விவசாயி ஒருவர், தான் விவசாயம் செய்வதற்கு வங்கியிலோ, தனியார் நிறுவனத்திலோ குறைவான கடன் பெற்று வறுமையால் கட்ட முடியாத சூழல் எழும்போது... அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு திரைப்படங்கள் விவரித்துள்ளன. அப்படியான ஒரு நிகழ்வுதான் விழுப்புரம் மாவட்ட விவசாயி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

``நீங்க செத்தாகூட சாவுங்க. ஆனா, கடனைக் கட்டிட்டு சாவுங்க" எனத் தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த ஆடியோ, கேட்போரின் மனங்களை கலங்கச் செய்திடும் வகையில் அமைந்துள்ளது.

 கடன்
கடன்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரகோத்தமன் (65). இவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகிறார் பெண் ஒருவர். அந்த உரையாடல் பின்வருமாறு...

பெண் ஊழியர்: நான் ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி-யில் இருந்து பேசுறேன். நீங்க இந்தியன் பேங்க்ல விவசாய கடன் வாங்கி இருக்கீங்க.

விவசாயி: நான் கடன் இந்தியன் பேங்கில்தானே வாங்கினேன். இதுல உங்களுக்கு என்ன... ஏம்மா!

ஊழியர்: ஏன் உங்க பேங்க்ல சொல்லலையா... ரிலையன்ஸ்க்கு ஃபார்வேர்ட் பண்ணிட்டாங்க, அந்த கேஸ்னு.

விவசாயி: நான் கடன் வாங்கியது இந்தியன் பேங்கிலதானே. அதை எப்படி உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணினாங்க. யாருமா கடன் கொடுக்கிறது? யாருமா அதை வசூலிக்கிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊழியர்: நீங்க வாங்கிய கடனை வருஷக்கணக்கா கட்டாம இருப்பீங்க. அவங்களே பாத்துக்கிட்டு இருப்பாங்களா..! அதை ரிலையன்ஸ் டேக் ஆன் பண்ணிட்டாங்க. இப்ப நீங்க ரிலையன்ஸுக்குதான் பதில் சொல்லி ஆகணும்.

விவசாயி: உங்ககிட்ட கடன் வாங்கினால்தானே உன்கிட்ட பதில் சொல்லணும்... ஏம்மா!

ஊழியர்: இந்த ரூல்ஸை எல்லாம் உங்க பேங்க்ல போய் பேசுங்க.

விவசாயி: நீ, ஏம்மா எனக்கு போன் பண்ணுற... வைம்மா.

ஊழியர்: யோவ்... நான்தான்யா கால் பண்ணனும். இந்த ரூல்ஸ் எல்லாம் பேசிகிட்டு இருக்காத. பேங்குக்கு கிளம்பி வா. லோன வாங்கிட்டு ரிலையன்ஸ்ல இருந்து எதுக்கு பேசுறாங்கன்னு கேக்குற... நீதானே லோன் வாங்கின..!

விவசாயி: `யோவ்...' என்றெல்லாம் பேசாத. நான் பேங்க் வாசல்ல வந்து படுத்துப்பேன். `யோவ்...' என்று சொல்லுற.

Money (Representational Image)
Money (Representational Image)

ஊழியர்: நீங்க கத்திக்கிட்டு இருக்கீங்க. நான் கேட்டுகிட்டு இருக்கணுமா... லோன் வாங்கிய நீதான் பதில் சொல்லணும்.

விவசாயி: உன்கிட்ட கடன் வாங்கலனுதானே சொன்னேன்..! நான் ஒண்ணும் கத்தல... ஒரு விவசாயியை மரியாதை இல்லாம எப்படி `யோவ்...'னு சொல்லலாம். நான் கலெக்டர்கிட்ட போய் போனை கொடுத்துட்டு வறேன்.

ஊழியர்: எங்க மேனேஜர்கிட்ட பேசு.. வா! என்கிட்ட கத்திக்கிட்டு இருக்காதே. கலெக்டர்கிட்ட போ.... என் பெயர் அஸ்வினிதான். சொல்லு போ...

விவசாயி: சரி, நீ பேசுனதை ரிக்கார்ட் பண்ணிதான் வச்சிருக்கேன்.

ஊழியர்: நீ ரிக்கார்ட் பண்ணி வச்சுக்கோ... எங்க சைடுலையும் ரிக்கார்டுலதான் இருக்கு. உங்கள் லோன் ஸ்டேட்டஸ, நீங்கதான் கேட்டு தெரிஞ்சிக்கணும். அது கூட தெரியாதா உங்களுக்கு. `உங்க கிட்டயா வாங்கினோம்'னு பேசிகிட்டு இருக்கீங்க. யாரு பேசுவாங்க அப்போ... பேங்க்ல இருந்து வந்துட்டு இருப்பாங்களா...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயி: உங்ககிட்டயாமா கடன் வாங்கினோம்

ஊழியர்: ஆமா, எங்ககிட்டதான் வாங்குனீங்க.

விவசாயி: உங்ககிட்ட வாங்கலையே! நாங்க கவர்மென்டுல கடன் வாங்கினோம்.

ஊழியர்: கவர்மென்ட்ல கொடுத்தாங்களா... அதனால கட்டாம விட்டுடுவீங்களா... ஏமாத்திடுவீங்களா..!

விவசாயி: வாங்கியதைக் கட்டாம வெளிநாடுக்கு போயிட்டானே அவனை என்ன பண்ணிட்டீங்க.

ஊழியர்: ஏன், அவன் கதையெல்லாம் உனக்கு வேணாம். அவங்க டாக்குமென்ட் கொடுத்து வாங்குனாங்க. கடனைக்கூட கட்டிட்டாரு தெரியுமா! ஊர் கதையை பேசுறத நிறுத்துங்க.. அவரு சாப்பிட்டாதான் நீங்க சாப்பிடுவீங்களா? அவர் செத்துட்டா நீங்க செத்துடுவீங்களா என்ன...

Farmer (Representational Image)
Farmer (Representational Image)

விவசாயி: உங்ககிட்ட கடன் வாங்கிட்டா... அப்படித்தான் சாவ சொல்றீங்களா..

ஊழியர்: நீங்க செத்தாக்கூட... கடனை கட்டிட்டு செத்துப்போங்க... பரவாயில்ல.

விவசாயி: ஹாஹா... வாயேன் நீங்கதான் வசூல் பண்ணிப்பீங்க.

ஊழியர்: அதாங்க, நீங்க செத்தாக்கூட கடன கட்டிட்டு சாவுங்க.

- என்ற படி முடிகிறது அந்த ஆடியோ

இந்த ஆடியோ தொடர்பாக விவசாயி ரகோத்தமனிடம் பேசினோம். ``நாங்க அண்ணன் தம்பி மூன்று பேரும் ஒத்துமையா இருந்தப்போ ஒரு 8 வருஷத்துக்கு முன்னாடி திருவெண்ணை நல்லூர் இந்தியன் பேங்க்ல 30,000 ரூபாய் கடன் வாங்கி விவசாயம் பார்த்தோம். அப்புறமா அவங்கவங்க நிலத்த பிரிச்சுகிட்டோம். எனக்கு ஒரு மூணு ஏக்கர் கலர் நிலம் மாதிரி பிரிச்சு கொடுத்தாங்க. அந்த நிலத்துல விவசாயம் பண்ணறதுக்கு சும்மாவே இருந்தாகூட ஏதோ கஞ்சி குடிக்கலாம் போல. அந்த இடத்தில் விவசாயம் பண்ணி பண்ணி கடன்தான் உருவாகுது. லாபம் ஏதும் கிடைக்கல. உற்பத்தி பண்ணுவதற்கு ஆகுற செலவ விட, விற்பனை பண்ணா குறைவாதான் கிடைக்குது. ஆள் கூலி எல்லாம் ஏறிப்போச்சு.

விவசாயி ரகோத்தமன்
விவசாயி ரகோத்தமன்

பொதுவா நெல்லுதான் பயிரிடுவேன். கவர்மென்டு எங்ககிட்ட நேரடியா நெல் கொள்முதல் பண்றது இல்ல. எங்களாலும் வண்டிக்கு வாடகை கொடுத்து ஏத்திக்கிட்டு போக முடியாம... இதுவரைக்கும் வெளி புரோக்கர்கிட்டதான் நெல் கொடுக்கிறோம். ஏக்கருக்கு 25,000 ரூபாய் செலவாகுது; அப்படினா... 21,000 ரூபாய்தான் கிடைக்குது. இருக்க இருக்க குடும்பம் கடன் பிரச்னையிலையே போய்க்கிட்டு இருக்குது. அதனாலதான் அந்தக் கடனைக்கட்ட முடியாம போச்சு. எனக்கு மூணும் பொண்ணுங்க... கடன உடன வாங்கிதான் அவங்களையும் கரை சேர்த்தேன். ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு வரேன்.

நேற்று முன்தினம் (03.01.2022) காலையில 10 மணிக்கு ஒரு பொண்ணு போன் பண்ணி, பேங்க்ல கடன் வாங்கி இருக்கீங்களானு கேட்டாங்க. தான் ரிலையன்ஸ்ல இருந்து பேசுறோம்ன்னு சொன்னாங்க. `நாங்க பேங்க்லதானே கடன் வாங்கினோம்' அப்படின்னு நான் சொல்ல... அவங்களுக்கு உடனே வேகம் வந்துருச்சு. ``யோவ்..." அப்படின்னு மரியாதை இல்லாம பேசிட்டாங்க. அப்புறமா ``கடனைக் கட்டிட்டு சாவு" அப்படின்னு கேக்குறாங்க. எனக்கு மனசு ஒரே உளைச்சலா ஆகிடுச்சு. வங்கிக் கடனை மோடி அவங்க தள்ளுபடி பண்ணினா நல்லா இருக்கும். ரிலையன்ஸ்கிட்ட கொடுத்திட்டா எப்படி? அவங்க வரி பாக்கி எல்லாம் ஒழுங்கா கட்டிட்டாங்களா என்ன? சாதாரணமா, இல்லாதவங்க ஏதோ கடன் வாங்கினா... மத்திய கவர்மென்ட், இப்படி அடியாட்களை விட்டு மிரட்டுது.

Phone (Representational Image)
Phone (Representational Image)
Photo by Julian Hochgesang on Unsplash

விவசாயிகளுக்குள்ள ஒற்றுமை இல்லாம போனதால்தான் இந்த கவர்மென்ட் மதிக்க மாட்டுது. உலகத்துல இருக்குறவங்களுக்கு உணவு கொடுக்கிறவன் விவசாயி. உயிரைக் காக்கும் விவசாயியும். மானத்தைக் காக்கும் நெசவாளியும் இங்கு வாழமுடியல" என்றார் ஆதங்கமாக.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க, விவசாயியிடம் தனியார் நிறுவன ஊழியர் எனப் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசிய அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை.