Published:Updated:

“தமிழ்நாடு மட்டுமே நீட் பிரச்னையை புரிந்துவைத்திருக்கிறது!”

அனில் சட்கோபால்
பிரீமியம் ஸ்டோரி
அனில் சட்கோபால்

அனுபவத்தைச் சொல்கிறார் அனில் சட்கோபால்

“தமிழ்நாடு மட்டுமே நீட் பிரச்னையை புரிந்துவைத்திருக்கிறது!”

அனுபவத்தைச் சொல்கிறார் அனில் சட்கோபால்

Published:Updated:
அனில் சட்கோபால்
பிரீமியம் ஸ்டோரி
அனில் சட்கோபால்

அனில் சட்கோபால், கல்விச் செயற்பாட்டாளர்; டெல்லி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர்; நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புஉணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்பவர். புத்தக வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கல்விக்கொள்கை வரைவு, நீட், யூ.ஜி.சி கமிட்டியைத் திரும்பப் பெறுதல் என மத்திய அரசு பல மாற்றங்களைச் செய்துவருகிறது. எதை நோக்கிப் பயணிக்கிறது இந்த அரசு?”

“கல்விக்கொள்கை வரைவு வெளியாவதற்கு முன்பு, கடந்த ஆட்சிக்காலத்தில் 2017-2020க்கான மூன்றாண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது நிதி ஆயோக். அதில், ‘கடந்த எழுபது ஆண்டுகளாக கல்வித்துறை தவறான பாதையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டியது காலத்தின் தேவை’ எனக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தபோது, ‘No child left Behind’ என்கிற கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். ‘அந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அது அமெரிக்கக் குழந்தைகளுக்குப் பயன் தராது’ என்று சொல்லி அமெரிக்காவின் பல மாகாணங்கள் அதை ஏற்கவில்லை. அவருக்குப் பிறகு அதிபராக வந்த ஒபாமா, ‘அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம்’ என்றார். ஆனால், சொன்ன வார்த்தையை அவர் காப்பாற்ற வில்லை. அங்கே அதை அமல்படுத்தினார். அதே திட்டத்தைத்தான் இந்தியாவில் தங்களது மூன்றாண்டு இலக்காக நம்முடைய நிதி ஆயோக் அளித்தது.

இது செயல்படுத்தப்பட்டால், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பின்தங்கிய கிராமங்களிலும் மலைக்கிராமங்களிலும் இருக்கும் பள்ளிகள், செயல்திறன் இல்லாதவையாகக் கருதப்படும். நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படும். தமிழக அரசு ஏற்கெனவே இதைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டது. சரியாக இயங்காத பள்ளிகள் மூடப் படுகின்றன அல்லது அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதுவும் மூடப்படுவதற்கு சமம்தான். இதன்மூலம் அரசுப் பள்ளிகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. அதை நோக்கியே பயணிக்கிறது மத்திய அரசு.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதன் தாக்கம் எப்படியிருக்கும்?”

“கல்வியை வெறும் திறன் அறியும் பண்டமாக மட்டுமே அணுகி, அதன் பயனைக் குறைக்கப் பார்க்கிறார்கள். கேட்டால், ‘காந்தி கொண்டுவந்த கல்விமுறை இது’ என்கிறார்கள். காந்தி, திறன் மேம்பாட்டை கல்வியின் ஆதாரங்களில் ஒன்றாக மட்டுமே வலியுறுத்தினார். சாதிக்கு ஒரு கல்வி என்று அவர் சொல்லவில்லை. தவிர, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆறாம் வகுப்புக்குச் செல்ல, தேர்வு எழுத வேண்டும். இரு வாய்ப்புகள் மட்டுமே. இரண்டாவது முறையும் அவர் தகுதி பெறவில்லையெனில், பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார். இதனால், ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கல்வியிலிருந்து வெளியேறும் ஆபத்து ஏற்படும். அவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என்பதுதான் வேதனை.”

“தேசிய கல்விக்கொள்கை, தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு என அத்தனையும் ‘தேசிய’ப் பார்வையிலேயே அணுகப்படுவது சரியா?”

“அத்தனை திட்டங்களையும் தேசிய கல்வி ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதன் தலைவர் பிரதமர். அரசியல் சாசனப் பிரிவு 1-ன்படி இந்தியா பல மாநிலங்களின் ஒருங்கிணைக்கப் பட்ட கட்டமைப்பு. ஆக, பிரதமர் தலைமை ஏற்கும் இந்த ஆணையம், அரசியல் சாசனத்துக்கே எதிரானது.”

“நீட் திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”

“நவீன தாராளமய முதலாளித் துவத்தின் வெளிப்பாடுதான் நீட் தேர்வு. இதை அரசு திரும்பப் பெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக நமக்கு வலிமையான எதிர்க்கட்சிகளும் அமையவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவும் செயலற்றதாக இருக்கிறது. மாணவர் இயக்கங்கள், ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த தொடர் போராட்டங்களின் வழியாகவே இதைத் திரும்பப் பெறவைக்க முடியும்.”

“நீட் தேர்வை எதிர்த்து இந்தியா முழுவதும் பயணம் செய்கிறீர்கள். பிற மாநிலங்களில் இது தொடர்பான நிலைப்பாடு என்ன?”

“தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வின் பிரச்னைகளை சரியாகப் புரிந்துவைத்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் நீட் தொடர்பாகப் பேச, அந்த மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்னை அழைத்திருந்தது. நான் பேசியதைக் கேட்ட அந்த மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், ‘நீங்கள் பேசிய பிறகுதான் நீட் தேர்வில் இத்தனை சிக்கல்கள் இருப்பது தெரிந்தது. நாங்கள் இதை மற்றுமொரு தேர்வாகத்தான் நினைத்திருந்தோம்’ என்றார். இது தான் மற்ற மாநிலங்களின் நிலை.”

அனில் சட்கோபால்
அனில் சட்கோபால்

“சேவை வணிகத்துக்கான பொது உடன்படிக்கையில் (GATS) இந்தியா கையெழுத்திட்டதுதான் இந்தப் பிரச்னை களுக்கு மூலக்காரணமா?”

“இந்திய சாதிய கட்டமைப்புதான் இதன் மூலக்காரணம். 1991-ல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை யாக அறிமுகப்படுத்தப் பட்ட ‘கட்ட மைப்பு ஒழுங்குபடுத்துதல் திட்டம்’ இதை வலுப்படுத்தியது. சாதிய கட்டமைப்பின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட சேவைகளுக்கான நிதி குறைக்கப்பட்டது. இதுவே கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைத் துறைகளில் தனியார் நுழைய காரணமாகவும் அமைந்தது. இதற்குப் பிறகுதான் `GATS’ வந்தது. இப்படி கல்வித் துறையில் தனியார் நுழைய 90-களி லேயே வழிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக, சாதிதான் இங்கு முதன்மையான பிரச்னை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism