Published:Updated:

“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்!”

பிரபாத் பட்நாயக்
பிரீமியம் ஸ்டோரி
பிரபாத் பட்நாயக்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.

“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்!”

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.

Published:Updated:
பிரபாத் பட்நாயக்
பிரீமியம் ஸ்டோரி
பிரபாத் பட்நாயக்

வர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரப் பாடம் போதித்தவர். மார்க்சியப் பொருளாதார அறிஞரான பிரபாத் பட்நாயக், கேரள மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருந்து பல முன்னோடித் திட்டங் களைச் செயல்படுத்து வதற்குக் காரணமாக இருந்தவர். ‘மாற்றுக் கல்விக்கொள்கை’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக் காகச் சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.

பிரபாத் பட்நாயக்
பிரபாத் பட்நாயக்

“உங்கள் மாணவர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் நிர்மலா சீதாராமனைப் பற்றிச் சொல்லுங்கள்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அபிஜித் ஒரு மிகச்சிறந்த மாணவர். ஜே.என்.யூ-வில் மாணவர் அரசியலிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். நாங்கள் இருவரும் அவ்வப் போது சந்தித்துக்கொள்வது வழக்கம். நோபல் பரிசு பெற்ற பிறகு இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. நிர்மலா சீதாராமனை ஜே.என்.யூ-வில் அவர் படித்த காலத்தில் பார்த்த நினைவிருக்கிறது. மற்றபடி அவரைப் பற்றிய வேறு எதுவும் என் நினைவில் இல்லை.”

“ ‘அபிஜித் பானர்ஜி ஓர் இடதுசாரி’ என்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?”

“கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வரிச்சலுகைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல கருத்துகளை அபிஜித் முன்வைக்கிறார். இடதுசாரி என்பதற்கு அமைச்சர் பியூஷ் கோயலின் வரையறை என்ன என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, அபிஜித் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட மனிதர்.”

பிரபாத் பட்நாயக்
பிரபாத் பட்நாயக்

“இன்றைக்கு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக விவாதங்கள் நடக்கின்றன. தொழிற்கூடங்கள் மூடுவதாக, கம்பெனிகள் விடுமுறை விடுவதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்களே?”

“உண்மையை யாராலும் ஒருபோதும் மறைக்க முடியாது. மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கிறார்கள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன... இவற்றை யெல்லாம் எப்படி மறைக்க முடியும்? அரசு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தொழில்துறை தேக்கநிலையில் இருக்கிறது. வேலையின்மை விகிதம், 1973-க்குப்பின் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உட்பட உலகில் பல நாடுகள் பொருளாதாரப் பிரச்னை களைச் சந்தித்துவருகின்றன. வித்தியாசம் என்னவென்றால், மத்திய மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளன; சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“திராவிடக் கொள்கைகள் வேரூன்றியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. மாநில சுயாட்சி போன்ற விஷயங்களில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு இருந்துவருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்தியாவில் இரட்டை தேசிய உணர்வு இருக்கிறது. இந்தியன் என்பது ஒரு தேசிய உணர்வு. தமிழன், மலையாளி, தெலுங்கர், மராத்தியர் என்ற தேசிய உணர்வு மற்றொன்று. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு முறையில், இந்த இரண்டு உணர்வுகளும் சரிசமமாக பாவிக்கப்பட வேண்டும். இவற்றில் எது ஒன்றையும் நீங்கள் அதீதமாக வலியுறுத்தினால், அங்கு பிரச்னை வெடிக்கும். அது தேச ஒற்றுமையை பாதிக்கும். பா.ஜ.க-வுக்கு இந்தக் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர்கள் இந்து தேசிய உணர்வை அதீதமாக வலியுறுத்திவருகிறார்கள். இந்தப் போக்கானது, சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசுகளின் உரிமைகளுக்கும் எதிரானது. திராவிடச் சிந்தனைகள் வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில், தமிழ் உணர்வு மிகவும் வலுவாக இருக்கிறது. ஆகவே, மாநில உரிமைகளுக் காகத் தமிழ்நாட்டு மக்கள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமானது. இந்தப் போராட்டம், ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியமானது. மாநிலத்தின் உரிமைகளும், மக்களின் உரிமைகளும் வேறுவேறானவை அல்ல. அவை ஒன்றோடொன்று இணைந்தவை.”

பிரபாத் பட்நாயக்
பிரபாத் பட்நாயக்

“பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘#GoBackModi’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டு ஆகிறது. டெல்லியில் வசிக்கும் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்த எதிர்ப்பு என்பது தமிழக மக்களின் ஜனநாயக உரிமை. இதை நான் வரவேற்கிறேன்.”

“கல்வி நிறுவனங்கள்மீது மோடி அரசு தாக்குதல் நடத்துவதாகப் பேசியும், எழுதியும் வருகிறீர்களே?”

“டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புனே திரைப்படப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களையெல்லாம் பா.ஜ.க ஆட்சியாளர்கள் அழித்தொழித்துவிட்டார்கள். சிந்திக்கக்கூடியவர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், சுதந்திரமான சிந்தனையை அவர்கள் விரும்பவில்லை. கேள்வி கேட்பவர்களையும் விமர்சனங்களை முன்வைப் பவர்களையும் அச்சுறுத்து கிறார்கள். இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது!”