Published:Updated:

மறுபக்கம்: பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ், நடிகர் ஜார்ஜ் விஜய் ஷேரிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜார்ஜ் விஜய்  - பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்
ஜார்ஜ் விஜய் - பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்

திருவெற்றியூர்ல ஒரு மனநலக் காப்பகத்தில் உள்ள 48 குழந்தைகளுக்கு நான் அரவணைப்பா இருக்கேன்

பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்... பழங்குடி சமூகத்தில் பிறந்து, தடைகளையெல்லாம் கடந்து ஜார்க்கண்ட் மாநிலம், டும்கா பகுதியில் அமைந்துள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக் கழகத்தின் (எஸ்.கே.எம்.யூ) துணைவேந்தராக உயர்ந்திருக்கிறார்.

டெல்லி ஜே.என்.யுவில் உள்ள கணினி மற்றும் கணினி அறிவியல் துறையில் 28 வருடங்கள் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜே.என்.யூ-வின் ஆசிரியர் சங்கத்தின் (JNUTA) தலைவராகச் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஆதிவாசி இன மக்களின் உரிமைக்குரலாக ஒலிப்பவர். ஒரு மாலையில் அவரின் பயணம் குறித்து உரையாடினேன்.

பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்
பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்

"பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரி பற்றிய பேச்சு வந்தபோது, 'ஒப்பீட்டளவில் வடஇந்தியாவைவிடத் தென்னிந்தியாவில் பாகுபாடு பார்க்கும் மனோபாவம் குறைவு' என்று என் அப்பா சொன்னார். 'வடஇந்தியாவில் உன் திராவிடத் தோற்றத்தை வைத்து கேலி செய்வார்கள். தென்னிந்தியா சென்று படி... நிறைய கற்றுக்கொள்வாய்... பாகுபாடும் இருக்காது' என்று அறிவுறுத்தினார். இப்போதுகூட என் தோற்றத்தை வைத்து கேலி செய்வார்கள். ஒரு முறை என் மகளை அழைக்க அவள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது அவள் தோழி என்னைப் பார்த்து, 'யார் இது, உங்கள் வீட்டு வேலைக்காரியா?' எனக் கேட்டாள்.

வீட்டில் பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும் எல்லோரும் படித்தவர்கள். என் அப்பா நண்பர் ஒருவரின் தயவில் ஸ்காலர்ஷிப்பில் சென்னை வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் (WCC) இளங்கலையும், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் (MCC) முதுகலையும் முடித்தேன். தென்னிந்தியாவில் சாதிப்பாகுபாடு இருந்தாலும் என் கல்லூரிகளில் படிக்க நல்ல சூழலே அமைந்தது.

நான் ஒரு ஆதிவாசிப் பெண் என்பதைக் கல்லூரியிலும் சரி, பொது வெளியிலும் சரி... சொல்லிக்கொண்டதே இல்லை. துணைவேந்தர் அறிவிப்பு வந்தபின்புதான் நான் ஆதிவாசி இனப் பெண் என்பது என் கல்லூரி நண்பர்களுக்கே தெரியும்." என்ற சோனாஜரியா மின்ஸ்,

நம்மிடம் பகிர்ந்தவை ஏராளம். அவற்றை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > "தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது!" https://bit.ly/2YanWpG

அந்தக் குழந்தைகளுக்காகத்தான் எல்லாம்!

பார்த்த உடனே பளீரென உள்ளத்தைப் பிரதிபலிக்கும் சிரிப்புதான் ஜார்ஜ் விஜய் நெல்சனின் அடையாளம். சின்னத்திரையில் 'ஒத்த ரோசாவாக'வும், 'ஹல்க்'காகவும் வலம்வந்து, குட்டீஸ்களின் மனதில் இடம் பிடித்தவர்.

வெள்ளித்திரையில் விக்ரம் வேதா, மாரி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நடிகராக நம் மனதில் இருக்கும் ஜார்ஜ் விஜய், மனநலம் குன்றிய 48 குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்திராத மறுபக்கம். அவருடனான மனசுக்கு நெருக்கமான உரையாடலிலிருந்து...

"ஒரு பாட்டுல ஓஹோன்னு வந்திடலை. நிறைய புறக்கணிப்புகள், கேலி, கிண்டல்களைப் பார்த்துட்டேன். 'அது இது எது' பண்ணும்போது என் மனைவிக்கே அதில் உடன்பாடு இல்ல. என் பையன், 'அப்பா நீ இப்படியெல்லாம் வேஷம் போடாதே'ன்னு சொன்னான்...

ஜார்ஜ் விஜய்
ஜார்ஜ் விஜய்

திருவெற்றியூர்ல ஒரு மனநலக் காப்பகத்தில் உள்ள 48 குழந்தைகளுக்கு நான் அரவணைப்பா இருக்கேன். தன்னைச் சுத்தி என்ன நடக்குதுங்கிறதைக்கூட உணரமுடியாமல், பாசத்துக்காக ஏங்கும் மனநலம் குன்றிய குழந்தைகளோடு இயங்குகிறதுதான் மனசுக்கு நெருக்கமா இருக்கு. அவங்க அன்பைத் தவிர எதையும் கொடுக்கவும் கேட்கவும் தெரியாதவங்க. அவங்களைப் பொறுத்தவரை அன்பு காட்டுற எல்லோரும் அம்மாதான்!"

- புன்னகையோடு சொல்லும் ஜார்ஜ், நம்மிடம் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவற்றை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > அந்தக் குழந்தைகளுக்காகத்தான் எல்லாம்! https://bit.ly/2UVYWQZ

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு