Published:Updated:

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

லீடர்ஷிப்

பிரீமியம் ஸ்டோரி

ரு நிறுவனத்தின் மேனேஜர் என்பவர் போர்ப்படைத் தளபதி மாதிரி. சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்கத் தெரிந்த போர்ப்படைத் தளபதிகளால்தான் வெற்றியைத் தேடித் தரமுடியும்.

கூகுள் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறந்த மேனேஜர் களை உருவாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. ஒரு நல்ல மேனேஜர் என்பவர் யார், அவரிடம் என்னென்ன குணாம்சங்கள் இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய ‘புராஜெக்ட் ஆக்ஸிஜன்’ (Project oxygen) என்கிற திட்டத்தைத் தொடங்கியது கூகுள்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

உலகம் முழுக்க உள்ள பல ஆயிரம் பணியாளர்களிடம் நல்ல மேனேஜருக்குரிய குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டது. இந்தக் குணங்களை எல்லோரும் பெற்றுக்கொண்டதன் மூலம் மேனேஜர்களே இல்லாத ஒரு நிலையை அடைந்திருக்கிறது கூகுள்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

“ஒரு நிறுவனம் ஆள்சேர்ப்பு, நேர்காணல் மற்றும் பணியமர்த்தல் ஆகிய விஷயங்களுக்காக லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்கிறது. அந்த நிறுவனத்தின் மேனேஜர் முட்டாள்தனமாக நடந்துகொண்டால், பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும். அதனால் ஏற்படும் நஷ்டம் அந்த நிறுவனத்தின் தலையில்தான் விழும்’’ என்று இந்த புராஜெக்ட்டை தொடங்கியதின் நோக்கத்தைச் சொல்லியிருக்கிறது.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

யார் மிகச் சிறந்த மேனேஜர் என்பதற்குக் கூகுள் சொல்லும் 10 குணாம்சங்களை இனி பார்ப்போம்...

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

1. மிகச் சிறந்த பயிற்சியாளர்

ஒரு நிறுவனத்தின் மேனேஜராகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எப்போதுமே சிறந்த பயிற்சியாளர்களாக இருப்பது அவசியம். தனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பதுடன் மட்டுமல்லாமல், தன் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாத விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அந்த விஷயம் பற்றி அவருக்குத் தெரியவில்லை என்றாலும்கூட, அதை அப்டேட் செய்துகொண்டு பிறருக்குச் சொல்லிக்கொடுக்கும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

2. குழு உறுப்பினர்களின் நலன்

ஒரு தலைவன், மாற்றத்துக்கு வித்திடுபவனாக எப்போதும் இருக்க வேண்டும். ஒரு செயலைச் செய்ய, செய்துமுடிக்க மற்றவர்களுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருக்க வேண்டும். அந்தத் தூண்டுதல் அந்தக் குழுவின் வளர்ச்சிக்கும் நன்மதிப்புக்கும் வித்தாக இருக்கும். தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மற்றவர்களிடம் இருந்து சாமர்த்தியமாகப் பெற்றுக்கொள்வது மட்டும் தலைவனின் வேலை கிடையாது. அந்த எண்ணத்தில், தன் குழு உறுப்பினர் களின் நலன் குறித்த விஷயங்கள் நிரம்பி யிருக்க வேண்டும். அவர்கள் பணியாற்ற முழு சுதந்திரத்தை வழங்குவதும் தலைவனின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

3. இலக்குடன் செயல்படுவது

இலக்கில்லாதத் தலைவன் திறம்பட செயல்பட முடியாது என்பது நூறு சதவிகிதம் உண்மை. அரசியல் கட்சியாகட்டும், ஒரு நிறுவனத்தின் சிறு பிரிவாகட்டும் அல்லது குடும்பத் தலைவனாகட்டும் இலக்கில்லாதத் தலைவன், பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தில் பலவீனமாகிப் போவான். ஒரு தலைவன் தன் இலக்கை அடைவதில் அக்கறை, உறுதிப்பாடு, பேச்சு சாதுரியம், விடாமுயற்சி, தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, புதிய கோணத்தில் சிந்தித்தல் இவற்றுடன் வெற்றி பெற்றிடுவோம் என்ற தன்னம்பிக்கை மிக்கவராக இருக்க வேண்டும். இலக்கில்லாதத் தலைவர்களால் மற்றவர்களுக்கான இலக்கை ஒருபோதும் நிர்ணயிக்க முடியாது.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

4. பலம், பலவீனம் தெரிந்திருப்பது

ஒரு தலைவனுக்கு சுயதூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சொல்லாமலேயே தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு, தன்னை வெளிக்கொணர வேண்டும். ஏமாற்றத்தை எதிர்கொண்டு, ஏற்றத்துக் கான மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். ஒரு விடிவெள்ளியைப் போல, வெற்றியின் அடையாளமாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும். தலைவனுடைய பலம் என்ன என்று தலைவனுக்குத் தெரிய வேண்டும். அதேபோல, தன்னுடைய பலவீனம் எது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். போட்டியாளர்களின் பலம், பலவீனம் பற்றியும் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னுடைய குழு உறுப்பினர்களையும் வழிநடத்தும் குணம் ஒரு தலைவனுக்கு அவசியம் வேண்டும்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

5. ஒற்றுமையின் பாலமாக இருத்தல்

தலைவனுக்கு இருக்க வேண்டிய குணாம்சத்தில் மிக முக்கியமானது, சக ஊழியர்களிடத்தில் ஒற்றுமை உணர்வுகளை மேலோங்கச் செய்வது. ஒருவரைப் பற்றி மற்றொரு நபரிடம் குறை கூறுவதோ, ஒப்பிட்டுப் பேசுவதோ இருக்கக்கூடாது. இது பணியாளர் களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைத்து விடும். அப்படியில்லாமல், ஒற்றுமையை ஓர் உறவுபோல வளர்த்திட வேண்டும். விரிசல் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக எப்போதுமே அவர் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

6: தவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

தலைவனுக்குப் பேச்சாற்றல் என்பது மிக முக்கியம். தலைவனின் பேச்சுகள் மற்றவர் களைக் கவர்வது மட்டுமல்லாமல், கவலையிலிருந்து விடுவிப்பதாகவும் இருக்க வேண்டும். அவருடைய பேச்சு, பயத்தை விலக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அப்படிப்பட்ட ஆற்றலை வளர்த்துக்கொள்பவராக தலைவன் இருக்க வேண்டும். சந்தர்ப்பவாதியாக இல்லாமல், கிடைத்த சந்தர்ப்பத்தைத் தன்னைச் சார்ந்தவர்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். தலைவன், தவறு செய்யாதவன் அல்ல... ஆனால், தவற்றிலிருந்து கற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தலைவன், நம்பிக்கையை தன் குழு உறுப்பினர்களின் மனதுக்குள்ளும் செயல்பாடுகளிலும் முழுமையாக விதைக்க வேண்டும்.

அலுவலகம் சில சமயம் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால், அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள்.
யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

7. தெளிவான முடிவு எடுப்பது

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் ஆதரிக்கலாம். ஆனால் உங்களுக்குச் சரியில்லை என்றால், அதைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள்; அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டும். அலுவலக நிர்வாகமும் இதைத்தான் விரும்பும். மேலும், எடுக்கும் முடிவில் என்றைக்கும் தெளிவு இருப்பது அவசியம்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

8. புதிய உத்திகளை வகுப்பவராக இருப்பது

எல்லோரும் செய்வதையே செய்பவர் ஒரு சிறந்தத் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றைச் செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படிக் காட்டிக்கொள்ளா விட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. இதற்குப் புதிது புதிதாக யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

9. குழுவாகச் செயல்படுவது

நான் என் வேலையைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று நினைக்காமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள். ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித் தால்தான் வெற்றி கிடைக்கும். எனவே, மற்றவர்களையும் இலக்கு நோக்கி வேகமாக முன்னேற உதவுங்கள். அப்படிச் செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும் குழுவின் வேலைத்திறனும் உயரும்.

யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

10. ரிஸ்க் எடுப்பவராக இருப்பது

சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைக்கும். அதைப்பற்றிக் கவலைப்படாமல் உங்களுக்குச் சரி என்று பட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். எந்த விஷயத்தையும் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டால், தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். அது உங்கள் தலைமைப் பண்பை உயர்த்தும்.

கூகுள் சொல்லும் இந்தக் குணங்கள் உங்களிடம் உள்ளதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு