Published:Updated:

நெல்லை: `தமிழகத்தில் முதல் முறை!' - காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்

காணொலி மூலம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டம்
காணொலி மூலம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், வெளியிடங்களில் இருந்து தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையிலும் தமிழகத்திலேயே முதல் முறையாக மக்கள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நடந்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வாரம்தோறும் சுமார் 500 பேர் வந்து மனு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

புத்தகத் திருவிழா 2020: 4,700 மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்த நெல்லை மாவட்ட ஆட்சியர்!

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கிராமப் பகுதிகளில் இருந்து வரக்கூடியவர்கள் மனு அளிக்க முடியாத நிலை இருந்தது. சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்களால் மட்டுமே மனு அளிக்க முடிந்தது.

அனைத்து மக்களும் மனு அளிக்க வசதியாகக் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்திருந்தார். வீட்டில் இருந்தபடியே மக்கள் தங்கள் கோரிக்கைகளைத்  தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். 

இணையத்தின் வழியாக நடந்த மக்கள் குறைதீர் கூட்டம்
இணையத்தின் வழியாக நடந்த மக்கள் குறைதீர் கூட்டம்

அதன்படி, தேசிய தகவல் மையம் (nic) உதவியுடன் நெல்லை மாவட்ட இணையத்தளத்தின் மூலமாக (https://tirinelveli.nic.in) கானொலிக் காட்சியில் பொதுமக்கள் பங்கேற்க வழி செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததால் மக்களின் குறைகளுக்கும் உடனுக்குடன்  தீர்வுகள் சொல்லப்பட்டன. சில புகார்கள் தொடர்பாக அதிகாரிகளை விசாரணை நடத்தித் தீர்வு காண உத்தரவிடப்பட்டது. 

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்

காணொலிக் காட்சியின் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக மக்கள் குறைதீர் கூட்டம் நெல்லை மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இதில், மிகக் குறைவான நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். கிராமத்து மக்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பான்மையான மக்களால் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. எனினும் இனி வரும் நாள்களில் அதுவும் களையப்படும் என நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு