புதுச்சேரி மாநிலத்தில் நிலவிவரும் நிதித் தட்டுப்பாடு, அரசுப்பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தையும் கேள்விக்குறி யாக்கியுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலம் வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடி யில் சிக்கித் தவிப்பது குறித்து, 22.12.19 தேதியிட்ட ஜூ.வி இதழில் `திவால் ஆகிறதா புதுச்சேரி அரசு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந் தோம். அடுத்தடுத்த நாட் களில் நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது.

அரசிடமிருந்து கோடிக் கணக்கில் வரவேண்டிய நிலுவைத் தொகை வராததால், பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் பங்கு கள் அனைத்தும் மூடப் பட்டன. இந்த நிலையில், அமுதசுரபி பெட்ரோல் நிலையம் மட்டுமே இயங்கி வந்தது. அதிலும் சமீபத்தில் சிக்கல்.

அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை வாகனங் களுக்கு கடந்த நான்கு மாதங்களாக டீசல் நிரப்பப் பட்ட நிலுவைத் தொகை 2.3 கோடி ரூபாய் வராததால், ‘அமைச்சர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாது’ எனக் கைவிரித்துவிட்டது அமுதசுரபி. கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனத்துக்கு டீசல் நிரப்பாமல் திருப்பி அனுப்பியதால், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அவர் பேருந்தில் வந்தார்.

புதுச்சேரியில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் என 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கிவருகின்றன. அவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவுத்திட்டத்தின்கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுச்சேரியில் மட்டும் பத்து மத்திய சமையற்கூடங்கள் இயங்கிவருகின்றன. ‘இங்கு தயாரிக்கப்படும் உணவு, பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் செல்வதில்லை. மாணவர்களுக்கு மதியம் வழங்க வேண்டிய உணவு, மாலைதான் வழங்கப்படுகிறது’ என்று கடந்த சில மாதங்களாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் இருக்கும் குமாரபாளையம் அரசுத் தொடக்கப் பள்ளியில் மதிய உணவை மாலை 3 மணிக்கு மேல் வழங்கப் படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

வீடியோவை வெளியிட்ட குமாரபாளை யத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஜெய்சங்கரிடம் பேசினோம்.

‘‘இந்தப் பள்ளியையும் சேர்த்து மொத்தம் 25 பள்ளிகளுக்கும் டீசலில் இயங்கிவந்த தொண்டமாநத்தம் சமையல் கூடத்திலிருந்து தான் மதிய உணவு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே டீசல் பற்றாக்குறை காரணமாக அந்தச் சமையற்கூடம் மூடப் பட்டது. அதையடுத்து, வில்லியனூர் மற்றும் சண்முகாபுரம் சமையல் கூடங்களி லிருந்து உணவு வழங்கப் பட்டுவந்தது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, சண்முகாபுரத்தி லிருந்து `அனுப்ப முடியாது’ என்று கூறிவிட்டதால், இப்போது வில்லியனூரில் இருந்து தான் உணவு வழங்கப்படுகிறது.

ஆதலால், மதிய உணவு மாலை 3 மணிக்கு மேல்தான் வழங்கப்படுகிறது. சிறிய பிள்ளைகள் பட்டினிக் கிடப்பதைப் பார்க்க முடியாத ஆசிரியர்கள், தங்கள் சொந்தப் பணத்தில் பிஸ்கட், பிரட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் எங்கள் குழந்தைகள் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்ல ஆரம்பித்தவுடன்தான், இந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. ஓரளவுக்கு வசதியுள்ள குழந்தைகள், சாப்பாடு எடுத்துச் சென்று விடுவார்கள். அதுகூட இல்லாத குழந்தைகள் என்ன செய்வார்கள்?

எனக்குத் தெரிந்து, இந்தப் பள்ளியில் மட்டுமே செங்கல்சூளையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் 17 பேர் படிக்கிறார்கள். ‘பள்ளியில் மதிய உணவு கிடைக் கும் என்பதற்காகத்தான் விடுப்பு எடுக்காமல் படிக்க வருகிறோம்’ என்று வெள்ளந்தியாகக் கூறும் அந்தக் குழந்தைகள், நன்றாகப் படிப்பவர்கள். அதிகாரிகளிடம் எத்தனையோ முறை புகார் அளித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ள வேயில்லை. புதுச்சேரியின் பெரும்பாலான பள்ளிகளில் இதுதான் இன்றைய நிலை’’ என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து விளக்கம் கேட்க, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனைத் தொடர்பு கொண்டோம். ‘‘கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசினேன். அனைத்து சமையற்கூடங்களுக்கும் எரிவாயுக்குழாய்கள் பொருத்தப்பட்டுவிட்டன. வில்லியனூர் சமையற்கூடம் இன்னும் டீசல் முறையில்தான் இயங்கிவருகிறது என்றும், அதனால்தான் தாமதமானது என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும், நானே நேரில் சென்று அதுகுறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை யெடுக்கிறேன்’’ என்று உறுதியளித்தார்.

மூன்று வேளை உணவைக்கூட உறுதிப்படுத்த முடியாமல் பள்ளிக்கு வரும் அந்தப் பிஞ்சுக் குழந்தை களுக்கு, அரசே சிரமத்தைத் தரலாமா?