Published:Updated:

கனமழை எதிரொலி: `புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்!’ - பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் இரண்டு நாள் விடுமுறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கனமழை: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்’ விடப்பட்டிருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது அந்த மாநில கல்வித்துறை.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை முழுமையாகத் திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வுகளும் நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8-ம் தேதி முதல் சுழற்சி முறையில் அரை நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது கல்வித்துறை.

புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்
புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

ஆனால் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால், பெய்துவரும் கனமழை காரணமாக நவம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றிருப்பதால் புதுச்சேரிக்கு ’ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்திருக்கிறது கல்வித்துறை. செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், "தொடர் கனமழை வாய்ப்பிருப்பதால் நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகளுக்கு) அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்படுகிறது" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு