Published:Updated:

``நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும்!" - வறுமையிலும் போராடும் கயல்விழி

கயல்விழி

10-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. குடும்ப வறுமை காரணமாக கயல்விழியால் தற்போது ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க முடியாத நிலை. மருத்துவக் கனவை மனதில் சுமந்துகொண்டு, சாப்பாட்டுக்காகத் தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

``நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும்!" - வறுமையிலும் போராடும் கயல்விழி

10-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. குடும்ப வறுமை காரணமாக கயல்விழியால் தற்போது ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க முடியாத நிலை. மருத்துவக் கனவை மனதில் சுமந்துகொண்டு, சாப்பாட்டுக்காகத் தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

Published:Updated:
கயல்விழி

புதுக்கோட்டை மாவட்டம் வலக்கொண்டான்விடுதியில் வசிக்கிறது கயல்விழியின் குடும்பம். கயல்விழி பதினொன்றாம் வகுப்பு முடித்து இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்கிறார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. குடும்ப வறுமை, கையில் ஆண்ட்ராய்டு போனும் இல்லை என்பதால், கயல்விழியால் தற்போது ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க முடியாத நிலை. மருத்துவக் கனவை மனதில் சுமந்துகொண்டு, சாப்பாட்டுக்காகத் தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

கயல்விழியின் தம்பி கலைவாணன், அவர் படிக்கும் பள்ளியில்தான் படிக்கிறான். அக்காவின் பாரத்தைக் குறைக்கத் தம்பியும் வேலைக்குச் செல்கிறான். அக்காவுக்குக் கூலி வேலை, தம்பிக்கு பெயின்டர் வேலை. பள்ளிப் புத்தகங்களைச் சுமக்கும் வயதில் இந்தப் பிஞ்சுகள் குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர்.

கயல்விழியிடம் பேசினோம். ``அன்னைக்கு, கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போறதா சொல்லிட்டு அப்பா வீட்ட விட்டுப் போனாரு. போற வழியில திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திருச்சுன்னு சொன்னாங்க. சடலமாதான் வீட்டுக்கு வந்தாரு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பாவோட இறப்பு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிலைகுலைய வெச்சிருச்சு. அப்பாவும் அம்மாவும் விரும்பி கல்யாணம் கட்டிக்கிட்டவங்க. பெருசா சம்பாதிச்சுக் கொடுக்கலாட்டியும் அப்பா மேல அம்மாவுக்கு அவ்வளவு பாசம். அதனாலதான், அம்மாவும் சீக்கிரமா அப்பாகூடவே போயிட்டாங்க.

அப்பா இறந்ததிலிருந்து விரக்தியில் இருந்த அம்மா கொஞ்ச நாள்ல மனநலம் பாதிக்கப்பட்டு, எங்களைப் பத்தி கொஞ்சம்கூட யோசிக்காம தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. நாங்க இருக்கிறதுக்கு இந்த வீட்டை மட்டும்தான் விட்டுட்டுப் போனாங்க எங்க அப்பாவும் அம்மாவும்.

பாட்டி, தம்பியுடன் கயல்விழி
பாட்டி, தம்பியுடன் கயல்விழி

மூணு வருஷமா, பாட்டி, தாத்தாதான் எங்களைப் பார்த்துக்கிறாங்க. அவங்களும் வயசானவங்க பாவம். இப்போ தாத்தாவுக்கு உடம்பு சரியில்ல. அவங்களால வேலைவெட்டி செஞ்சு எங்களைக் காப்பாத்த முடியாது. சொந்தக்காரங்க கொஞ்சம் உதவிக்கிட்டு இருந்தாங்க. கொரோனா ஊரடங்கால இப்போ எல்லாருக்குமே கஷ்டம். எங்களுக்குச் சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப்படுற நிலை. ரேஷன் அரிசி கிடைக்குது சோறு வடிச்சிடலாம். குழம்பு, கறி வேணுமே என்ன செய்யுறது..? அதனாலதான் நான் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வேலைக்குப் போறதுல, பாட்டிக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்ல. ஆனா, வேற வழி தெரியல. என் தம்பியும் அடம்பிடிச்சு பெயின்டர் வேலைக்குப் போறான். ஏதோ ரெண்டு பேரும் தினசரி சம்பாதிக்கிறதை வெச்சு இப்போதைக்கு சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாம ஒட்டிக்கிட்டு இருக்கோம். மிச்சமாகுற பணத்தைப் படிப்புக்காக உண்டியல்ல போட்டு வைப்போம். ஆனா, தாத்தா, பாட்டி யாருக்காவது ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமப் போயிடும். அந்தப் பணத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்துடும்.

அப்பா, அம்மா எங்களை விட்டுட்டுப் போயிட்டாலும், கஷ்டப்பட்டாவது எங்களக் காப்பத்தின தாத்தா, பாட்டியை நாங்க பாத்துக்கணும்ல.

ரெண்டு பேரும் சம்பாதிக்கிறது சின்ன வருமானம்தான். ஒரு நாள் வேலையில்லாம போச்சுன்னாலும், நிலைமை அதோகதிதான். இப்போ, தொடர்ச்சியா வேலை கிடைக்கிறதில்ல. டாக்டர் ஆகணும்ங்கிறது என் கனவு. தம்பியை கலெக்டராக்கிப் பார்க்கணும். ஆனா, எங்க படிக்க முடியாமலேயே போயிடுமோன்னு ஒரு பயம் மனசுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கு. எங்க கஷ்டம் எல்லாம் எப்போ தீரப்போகுதோ தெரியல. ஆனாலும், நாங்களும் நாளைக்கு நல்லா வருவோம்ங்கிற நம்பிக்கை இருக்கு."

வறுமைக்கு இடையிலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கயல்விழி.

Note:

இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை கயல்விழிக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism