Published:Updated:

`சாக்பீஸால் தினம் 300 ரூபாய் வருமானம்!' - உழைப்பால் முன்னேறிய புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி!

Abdullah
Abdullah ( ஆர்.வெங்கடேஷ் )

நாம, மாற்றுத்திறனாளி. நம்மால ஏதும் செய்ய முடியாது என்று உழைக்காம சோம்பேறியா வீட்டுல முடங்கி இருந்திருந்தா, சந்தோஷமான இந்த வாழ்க்கையைத் தொலைச்சிருப்பேன்."

புதுக்கோட்டையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சாலைகளில், புதிய பேருந்து நிலைய சாலையும் ஒன்று. தினமும் இந்தச் சாலையில், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையச் சாலையையொட்டி, தற்காலிகமாகக் கடைகளைப் போட்டு பலரும் பிழைத்து வருகின்றனர். அப்படி, சாலையோரம் பிழைப்பு நடத்துபவர்களில் மாற்றுத் திறனாளி அப்துல்லாவும் ஒருவர். போலியோ நோய் அவரை, பிறவியிலேயே முடமாக்கிவிட்டது என்றாலும், அவர் வேலைக்குச் செல்லாமல் சோம்பேறியாக ஒருநாள்கூட வீட்டிலேயே முடங்கியதில்லை.

Abdullah
Abdullah

மதியம் 12 மணி. உச்சிவெயில் உச்சந்தலையைப் பிளக்கிறது. சாலையின் ஓரத்தில் அமர்ந்தபடி, மும்முரமாக எறும்பு சாக்பீஸ் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார், அப்துல்லா. உச்சி வெயிலை எல்லாம் அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. எறும்பு சாக்பீஸ்களை விற்பனை செய்வதில் மட்டும்தான் அவரது கவனம் இருக்கிறது. டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர், அப்துல்லாவிடம் எறும்பு சாக்பீஸ் வாங்கிச் செல்கிறார்.

அந்தச் சமயத்தில் சாலையைக் கடந்த முதியவர் ஒருவர், "நிழலில் அமர்ந்து வியாபாரம் பண்ணுங்க தம்பி" என்று அப்துல்லாவிடம் அன்போடு கூறிவிட்டு நகர்கிறார். 40 வயது இருக்கும் அந்த வாலிபர், அப்துல்லாவைத் தூரத்திலிருந்து கண் இமைக்காமல் பார்த்தபடியே வருகிறார். "சாக்பீஸ் வேண்டாம்" என்று கூறி, பரிதாபப்பட்டு அப்துல்லாவின் கையில் ரூ.50-ஐத் திணிக்கிறார். அப்துல்லாவோ அதை வாங்க மறுக்கிறார். "என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா" என்று கூறி அந்த வாலிபரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

Abdullah
Abdullah

இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்துல்லாவிடம் பேசினோம். "புதுக்கோட்டை பக்கத்துல அடப்பன்வயல்தான் எனக்குச் சொந்த ஊரு. நான் பிறந்து 6 மாச பிள்ளையாக இருக்கும்போதே இளம்பிள்ளை வாதம் பாதிப்பு வந்திடுச்சு. அப்பவே, என்னோட கை கால்கள் எல்லாம் முடங்கிடுச்சு. எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே அம்மாவும் தவறிட்டாங்க.

என்னோட சித்தி, அவங்க பிள்ளையைப்போல என்னை அன்போடுதான் பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும், அவங்களை நான் தொடர்ந்து கஷ்டப்படுத்த விரும்பலை. எனக்கு 12 வயசு ஆரம்பிச்சபோதே வேலைபார்க்க வீட்டைவிட்டு வெளியே கிளம்பி வந்துட்டேன். மொதல்ல, வேலை கேட்டுப் போற இடத்துல எல்லாம் என்னை அடிச்சி விரட்டிடுவாங்க.

உழைச்சி சாப்பிடவே சாலையோரத்தில் வியாபாரம் செய்றேன். என்னைப் பிச்சைக்காரனாக்கிவிடாதீர்கள்.
மாற்றுத்திறனாளி அப்துல்லா
மாற்றுத்திறனாளி அப்துல்லா
மாற்றுத்திறனாளி அப்துல்லா

அந்த நேரத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்புறம் அதையெல்லாம் மறந்துடுவேன். மாற்றுத்திறனாளிங்கிறதால, எனக்கு மொதல்ல எங்கேயும் வேலை கிடைக்கலை. அப்பத்தான் நம்ம சொந்தமா ஏதாவது தொழில் செஞ்சு பிழைக்கலாம்னு முடிவுசெஞ்சேன். சொந்தத் தொழில் செய்ய, பணம் ஏதும் கையில் இல்லை.

வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோம் என்று தெரியாத நேரத்துலதான் லாட்டரிச் சீட்டு வேலை தேடி வந்துச்சு. வேற வழியில்லாம, அதைக் கொஞ்ச நாள் பார்த்தேன். என்னோட ஆர்வத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷாகுல் ஹமீது பணம் கொடுத்து உதவினாரு.

என்கிட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிப் படித்த பலரும் இன்று அரசு வேலையில் இருக்காங்க. அதை அவங்களே நேரடியாக வந்துசொல்லி வாழ்த்திட்டும் போயிருக்காங்க.
மாற்றுத்திறனாளி அப்துல்லா
`தங்கம் வெல்வேன்; புதிய ரெக்கார்டு படைப்பேன்!'- மாற்றுத்திறனாளி வீராங்கனையின் பாரா ஒலிம்பிக் சபதம்

பிறகு அதைவெச்சு, மதுரையில பொது அறிவு, சமையல் குறிப்பு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள வாங்கிவந்து மக்கள் கூடுற இடங்கள்ல எல்லாம் சாலையோரக் கடை போட்டு வியாபாரம் செஞ்சேன். எனக்கு எழுதப் படிக்க எல்லாம் தெரியாது. புத்தகங்கள விற்பனை செய்யும்போது கிடைக்கிற கொஞ்ச நேரத்துல புத்தகத்த புரட்டிப் பார்ப்பேன். அப்படித்தான் எழுத, படிக்கக் கத்துக்கிட்டேன். போட்டித் தேர்வு புத்தகங்களையும் வாங்கி விற்க ஆரம்பிச்சேன்.

அந்த நேரம் எனக்கு எதையோ சாதிச்சிட்டதைப்போல ஓர் உணர்வு வரும். வீண் செலவு ஏதும் செய்யமாட்டேன். செலவுபோக பணத்தைச் சேமித்து வச்சிடுவேன். மதுரை, திண்டுக்கல்லில் மட்டும் 15 வருஷமாக வேலைசெஞ்சு பிழைப்பு நடத்தினேன். அண்ணன் மாதிரி பார்த்துக்கிட்ட ஷாகுல் ஹமீது இப்ப இறந்து போயிட்டாரு. அவருதான், எனக்குத் திருமணமே செஞ்சு வச்சாரு.

மாற்றுத்திறனாளி அப்துல்லா
மாற்றுத்திறனாளி அப்துல்லா

அவளுக்கு எந்தக் குறையும் இல்லை. எனக்குக் குறை இருந்தாலும் என்னை விரும்பி ஏத்துக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் என்மேல அன்பாகத்தான் இருக்கிறா. நானும் அவளை நல்லபடியா பார்த்துக்கிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் புதுக்கோட்டையில் குடியேறிட்டோம். பையன், பொண்ணு என ரெண்டு பிள்ளைங்க. பொம்பள பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டேன். பையன் டிரைவர் வேலை பார்க்கிறான். ஆரம்பித்துல கொஞ்ச நாள் புத்தக வியாபாரம் செஞ்சேன்.

தொடர்ந்து, பழையபடி, மதுரைக்குப் போயிட்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து விற்க முடியலை. அதுக்கப்புறம்தான் இந்த எறும்பு சாக்பீஸ் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன்.

நாணயத்தின் இரு பக்கங்களைப்போல், என்னுடைய வாழ்க்கையில் ஒருபக்கம் நான் என்றால், மறுபக்கம் என்னுடைய மனைவி.
மாற்றுத்திறனாளி அப்துல்லா
மாற்றுத் திறனாளி அப்துல்லா
மாற்றுத் திறனாளி அப்துல்லா

வியாபாரத்துக்குத் தோதுவா பஸ் ஸ்டாண்ட் ரோட்டுல ஒரு 4 இடத்தை வச்சுக்குவேன். தினமும் 300 ரூபாய் கிடைக்கும். உழைக்காம யார்கிட்டேயும் ஒரு ரூபாகூடக் கைநீட்டி வாங்கமாட்டேன். காலையில 9 மணிக்கு வந்தா, சாப்பிடறதுக்கு ஒரு தரம் வீட்டுக்குப் போவேன்.

அதுக்கப்புறம் இரவு 7 மணி ஆகிடும். அன்று நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு உழைக்க ஆரம்பிச்சதால, இன்று வீடு, வாசல், மனைவி, பிள்ளைகள் என என்னோட வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி இருக்குது. நாம மாற்றுத்திறனாளி. நம்மால ஏதும் செய்ய முடியாது என்று உழைக்காம சோம்பேறியா வீட்டுல முடங்கி இருந்திருந்தா, இன்று சந்தோஷமான இந்த வாழ்க்கையைத் தொலைச்சிருப்பேன்.

மாற்றுத் திறனாளி அப்துல்லா
மாற்றுத் திறனாளி அப்துல்லா

படித்த இளைஞர்கள், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கலைனு சொல்லி புலம்புறாங்க. இளைஞர்கள் யாரும் கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்வரை, சுண்டல் விற்கும் வேலை என்றாலும், விரும்பி ஏற்றுக்கொண்டு செய்யணும்.

முடியாது என்ற வார்த்தையே நம்ம மனசுல இருக்கக் கூடாது. அத, நான் கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கேன். மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சில சலுகைகள் கிடைக்கிறது. ஆனாலும், ஒரு சில சலுகைகள் நாம் கோரிக்கைவைத்து வலியுறுத்திப் பெறும் சூழல்தான் உள்ளது.

மாற்றுத் திறனாளி அப்துல்லா
மாற்றுத் திறனாளி அப்துல்லா

அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் எல்லாம் என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிட்டு எனக்கு மாற்றுத்திறனாளிக்கான ஸ்கூட்டர், சைக்கிள் எல்லாம் கொடுத்திருக்காங்க. உதவி செஞ்சவங்களை என்னைக்கும் மறக்க மாட்டேன். ஸ்கூட்டரவிட, சைக்கிள்ல போயிட்டு வர்றதுதான் எனக்கு ரொம்பவே பிடிக்கும்" என்றவரிடம் பணத்தைக் கொடுத்து எறும்பு சாக்பீஸ் பெற்றுக்கொண்டோம்.

பின் செல்ல