Published:Updated:

2018-ல் விசிட்.. 2019-ல் பிளான்.. பயங்கரவாதியால் வெளிவந்த புல்வாமா தாக்குதல் விவரங்கள்!

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள ஷகீர் பஷீர் மாக்ரோ பல்வேறு தகவல்களை என்.ஐ.ஏ-விடம் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஷகீர் பஷீர் மாக்ரோவை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கடந்தாண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவருக்கு ஷகீர் பஷீர் மாக்ரோ அடைக்கலம் கொடுத்ததாகத் தகவல் தெரிவிக்கிறது.

ஷகீர் பஷீர் மாக்ரோ
ஷகீர் பஷீர் மாக்ரோ

என்.ஐ.ஏ விசாரணையில் புல்வாமா தாக்குதலுக்குத் திட்டமிட்டது, அதற்கான பணிகளை மேற்கொண்டது தொடர்பாக பல்வேறு தகவல்களை ஷகீர் பஷீர் கூறியுள்ளார். ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பஷீர் மறைமுகமாக உதவி செய்துவந்துள்ளார். பஷீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர். இவர் அங்கு பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார். ராணுவ வீரர்களின் நடமாட்டம் போன்ற தகவல்களை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்கும் பணியை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள பஷீரின் கடை புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் உள்ளது. பஷீரின் செல்போனை ஆய்வு செய்ததில் வெடிகுண்டுகள் எப்படி தயார் செய்வது போன்ற வீடியோக்கள் இருந்ததாகவும் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசி எண்களும் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மொபைல் போன்
மொபைல் போன்

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் முகமது உமர் பரூக் மற்றும் அடில் அகமது தார் இருவருக்கும் 2018-ம் ஆண்டிலிருந்து தன்னுடைய இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார். புல்வாமா தாக்குதல் நடந்த பிப்ரவரி 14-ம் தேதி வரை இருவரும் இந்தியாவில்தான் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் இங்கிருந்தபடியே தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராணுவ வீரர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஷகீர் பஷீருக்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து, பிப்ரவரியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

``ஸ்டேஷன்ல என் பையன் பாதி உசுரோடுதான் இருந்தான்!'' - டெல்லி வன்முறையில் மகனை பறிகொடுத்த தாய் கதறல்

காஷ்மீரில் பதுங்கியிருக்கும் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், பணம், வெடிமருந்துகள் போன்றவை கிடைப்பதற்கு ஷகீர் உதவியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு வெடிபொருள்களைத் தயார் செய்வதிலும் பயங்கரவாதிகளுக்கு இவர் உதவி செய்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மாற்றியமைத்து அதில் வெடிபொருள்களை நிரப்புவதற்கும் உதவி செய்தது என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஷகீரை ஜம்மு-வில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

புல்வாமா தாக்குதல்...
புல்வாமா தாக்குதல்...

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளான அகமது கான், சாஜ்ஜாத் பாட் இருவரும் கடந்தாண்டு பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் சாஜ்ஜாத் என்பவரின் கார்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது.

ஐ.இ.டி குண்டுகளை செய்வதில் நிபுணரான கம்ரான் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது உமர் ஃபரூக் கடந்தாண்டு மார்ச் 29-ம் தேதி கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத்தின் கமாண்டர் இந்தாண்டு ஜனவரி 25-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு