Published:Updated:

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 13 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 13 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... குறுக்கெழுத்துப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `இந்த கொரோனா சூழலில், கடந்த 15 நாள்களில் உங்களுக்கு மிகவும் பாசிட்டிவிட்டி தந்த ஒரு மீடியா செய்தி' பற்றி ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

இடமிருந்து வலம்:

1. வைட்டமின் சி நிறைந்த பழம். வெயிலுக்கு இதமாக இருக்கும். ஊறுகாயும் போட முடியும் (5).

5. வலை பின்னி இரையைப் பிடிக்கும் உயிரினம் (4).

7. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் செல்ல இது அவசியம் (4).

8. விருந்தினர்களை ---- யுடன் உபசரிக்க வேண்டும் (4).

10. மகேந்திரவர்மனின் --- நரசிம்மவர்மன் (3).

11. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பானம் (4).

12. நிறங்களில் ஒன்று (2).

13. தமிழ் மாதங்களில் ஒன்று (4).

வலமிருந்து இடம்:

3. ஓர் உயிரைக் காப்பாற்ற இந்த தானம் அவசியம் (4).

4. பானி பூரி, சேவ் பூரி போன்ற உணவுகளை இப்படி அழைக்கிறோம் (2).

6. மைதானம் என்பதை இப்படியும் அழைக்கலாம் (3).

15. கொடியில் காய்க்கும் பழம், கோடைக்கு ஏற்ற பழம் (5).

மேலிருந்து கீழ்:

1. சுறுசுறுப்புக்கு உதாரணமாக இந்தக் கூட்டத்தைச் சொல்வார்கள் (4).

2. வானில் தோன்றும் ஒளி (4).

3. விலைமதிப்பு மிக்க கற்களில் ஒன்று. சிவப்பாக இருக்கும் (5).

9. செம்பருத்தி, சுண்டைக்காய் போன்றவை --- தாவரங்கள் (3).

10. இந்த இலைகள் கைகளுக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கும் (4).

கீழிருந்து மேல்:

6. நரியார், சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்ற பழம் (4).

7. ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்றவரின் சுருக்கமான பெயர் (3).

13. மனிதனுக்கு நெருக்கமான குரங்கு இனம் (5).

14. இந்த நாட்டின் தலைநகர் திம்பு (4).

15. ஆபரணம் செய்யும் உலோகம் (4).

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 13 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 11 முடிவுகள் - விடைகள்...

1. உங்கள் முதல் உள்ளுணர்வு 60 நாள்களைப் பாதியாகப் பிரித்து 30-வது நாள் என விடை கண்டிருக்கும். ஆனால், ஒவ்வொரு நாளும் நீர் மட்டம் இரட்டிப்பாவதால், எந்த நாளிலும் நீர்த்தேக்கம் முந்தைய நாளின் பாதி அளவைத்தானே கொண்டிருக்கும்.

60-வது நாளில் நீர்த்தேக்கம் நிரம்பிவிடுவதாக இருந்தால், அது 59-வது நாள் அன்றுதான் பாதியாக நிரம்பியிருக்கும். ஆகவே, 59-வது நாள் என்பதே விடை.

2. ஒன்பது பேர். பெற்றோர் இருவர் (அம்மா-அப்பா), ஆறு மகன்கள், ஒரு மகள்.

3. 40 சதுரங்கள்

4. உங்கள் தலைமுடியின் நிறம்தான் விடை. நீங்கள்தானே பஸ் டிரைவர்.

சரியான விடையுடன், `ஒருநாள் உங்களுக்கு லீவு கொடுத்தால் அந்த ஒருநாளை உங்களுக்கே உங்களுக்காக எப்படி அமைத்துக்கொள்வீர்கள்?' நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஆர்த்தி, சென்னை-107.

இல்லாதவர்களைத் தேடிச் சென்று உதவ நினைப்பேன்.

2. என்.விசாலாட்சி, மும்பை.

உயிர்த்தோழியுடன் ஆயுர்வேத ஆயில் மசாஜ், ஆரோக்கிய உணவுகள்.

3. எஸ்.நித்யலட்சுமி, கும்பகோணம்.

உறக்கம், உணவு, உறக்கம், உணவு, உறக்கம்...

4. ஏ.காருண்யா, சென்னை-110.

மொழி தெரியாத இடங்களில் இருக்கும் புண்ணியத்தலங்கள்...

5. கே.பி. ஜெயந்தி, மதுரை.

பழைய போட்டோ ஆல்பங்களைப் பிரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வாஸ்ட்அப் பகிர்தல்.

6. தீபிகா ராஜேந்திரன், ஃபுளோரிடா, USA.

விடியலில் எழுந்து, பிடித்ததை சமைத்து, ஓவியங்கள் வரைந்து, பசிக்கும்போது சாப்பிட்டு, மாலையில் வாக்கிங் சென்று... மனத்துக்கினிய பாடல்களுடன் இரவு அழைக்க வேண்டும்.

7. வி.அனுராதா, சென்னை-33.

பகுதிநேர மாடித்தோட்டப் பணிகள், முழு நாள் பணியாக அமையும்.

8. பவானி சங்கர், சென்னை-47.

வெயில் காலம்... மொட்டை மாடியில் வத்தல், வடகம் பிழிந்து அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு... ஓரமாய் குட்டித் தூக்கம்... ஆஹா!

9. மாலதி நாராயணன், சென்னை-87.

நீண்ட நாள்களாகப் படிக்க வேண்டும் வாங்கி வைத்த புத்தகம் என் கைக்கு வந்துவிடும்.

10. சி.சாந்தி, ஸ்ரீபெரும்புதூர்.

விடியற்காலையிலேயே பிறந்த வீட்டுக்குச் சென்று விட வேண்டும். இருட்டிய பிறகு என் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்.