ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 14 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ ஒரு சுவாரஸ்யப் புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `லாக்டௌனில் நீங்கள் மிகவும் மிஸ் செய்த... மிஸ் செய்யும் ஒரு விஷயம்' பற்றி ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

கொரோனாவை வெல்லும் சுவாரஸ்யப் புதிர்!

இங்குள்ள கட்டங்களுக்குள் இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்கிற வகையில் வார்த்தைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றில் 12 வார்த்தை களைக் கண்டுபிடித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் சரியாக எழுதுங்கள். இந்த வார்த்தைகளில் மஞ்சள் கட்டத்துக் குள் இடம்பிடிக்கும் எழுத்துகளை மட்டும் ஒன்று சேர்த்தால், கொரோனாவை வெல்ல ஒரு வாக்கியம் கிடைக்கும் கண்டுபிடியுங்கள். பரிசை வெல்லுங்கள்.

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 14 - பரிசு ரூ.5,000
அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 14 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `உங்களுடைய நீண்ட நாள் நிறைவேறா ஆசை...' -

நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும்

10 பேர்...

1. கு.ஆனந்தவல்லி, விளாம்பட்டி.

விழுந்து எழுந்தாவது மிதிவண்டி ஓட்ட வேண்டும் என்பது நிராசையாகிவிட்டது.

2. எஸ்.திலகவதி, கும்பகோணம்.

சபரிமலை செல்ல வேண்டும். இந்த ஆசை நிறைவேறுமா?

3. லக்ஷ்மி ராமச்சந்திரன், சேலம்-4.

வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை 73 வயதுக்குப் பிறகு நடக்குமா?

4. எஸ்.அங்கிதா, திருவள்ளூர்.

படகில் கடல் நடுவே நள்ளிரவில் பயணிக்க வேண்டும்.

5. ஆர்.பி.லயா, காரைக்கால்.

ஆள் உயர டெடிபியருடன் உறங்க ஆசை.

6. இந்துமதி தியாகராஜன், கோவை-25.

சிறுவயதில் ஆசைப்பட்ட பால் கறக்கும் ஆசை, நிராசையாகவே இருக்கிறது.

7. எஸ். காஞ்சனா, சென்னை-99.

டிவியில் செய்தி வாசிக்கும் வாய்ப்பு, கண்ணாடி அணிந்திருக்கும் இந்த வயதில் கிடைக்குமா?

8. தமிழ்ச்செல்வி, கோவை-45.

35 வருடங்களாகத் தொடர்பே இல்லாத அன்புத்தோழி உமாவுடன் சேர்ந்து ஒரு கப் காபி குடிக்க வேண்டும்.

9. டி.நித்யா தேவி, சென்னை-117.

தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஆசை. இது சென்னை மாநகரத்தில் முடியாது என்பதே நிஜம்.

10. வனஜா சந்திரசேகரன், சென்னை-17.

சமையல் போட்டியின் நடுவராக அத்தனை அயிட்டங்களையும் ருசிக்க வேண்டும்.