லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 15 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ பழமொழிப் புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `கொரோனாவும் ஒன்றரை வருட ஊரடங்கு வாழ்க்கையும் உங்களுக்குக் கற்றுத்தந்த பாடம் என்ன?' - ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

பழமொழிப் புதிர்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 15 - பரிசு ரூ.5,000

இந்த வட்டத்துக்குள் 13 பெயர்கள் இருக்கின்றன. கீழே அந்தப் பெயர்களுக்கான குறிப்புகள் இருக்கின்றன. 13 பெயர்களையும் கண்டுபிடித்து வட்டத்துக்குள் எழுதுங்கள். ஒவ்வொரு பெயரிலும் ஓர் எழுத்து வட்டமிடப் பட்டிருக்கிறது. அந்த எழுத்துகளை வரிசையாகச் சேர்த்தால் ஒரு பழமொழி கிடைக்கும்.

மேலிருந்து கீழ்...

1. பொருள்கள் விற்கப்படும் இடம்.

2. உலோகங்களில் ஒன்று. பாத்திரங்கள் செய்யப் பயன்படும்.

3. அல்ஸைமர் என்பது -------- நோய்.

4. போர்ட் பிளேர் இங்குள்ளது.

5. ஒய்யாரக் கொண்டையிலே இந்தப் பூ.

6. அரசக் குடும்பத்தினரை இதில் வைத்து தூக்கிச் செல்வர்.

7. கைகளில் அணியும் ஆபரணம்.

8. பிளாஸ்டிக் என்பதை தமிழில் இப்படி அழைப்பர்.

9. கைத்தடி இதில் செய்யப்படும்.

10. முற்றும் துறந்தவர்.

11. வெற்றிலைக்கு இது அவசியம்.

12. குல்லா கதையில் வரும் விலங்கு.

13. வில்லில் இருந்து புறப்படுவது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 15 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `இந்த கொரோனா சூழலில், உங்களுக்கு மிகவும் பாசிட்டிவிட்டி தந்த மீடியா செய்தி...' - நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஆர்.பாரதி ராஜேந்திரன், சென்னை-19

40 வயது சக நோயாளிக்கு, மருத்துவமனையில் தன்னுடைய ஆக்ஸிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரைவிட்ட 85 வயது நாக்பூர் முதியவர் நாராயண் தபோல்கரின் மனிதநேயம்.

2. அ.திவ்யா, தஞ்சாவூர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தின் பகவான் டீக்கடை உரிமையாளர் நடத்திய ‘டீ மொய்' விருந்தும், அந்த நம்பிக்கை மனிதரின் நல்லெண்ணமும்.

3. எம்.பார்வதி மோகன், சேலம்-15

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் வைப்பு நிதியாக ரூபாய் ஐந்து லட்சம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு.

4. சுகந்தி, திண்டுக்கல்

கொரோனாவில் இறந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பெண் களின் குழந்தைகளுக்கு தாமாக முன்வந்து தாய்ப்பால் கொடுத்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோனிதா கிருஷ்ணா.

5. ஷீலா ரவிச்சந்திரன், கோவை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கர ராவுக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக

20 லட்ச ரூபாய் நிதி திரட்டிய கிராம மக்கள்.

6. சி.நாகலட்சுமி, திண்டிவனம்

தஞ்சாவூர் மாவட்டம், ஆழியவாய்க்கால் கிராமத்தின் விழிச்சவால் மாற்றுத்திறனாளி மற்றும் சமூக சேவகர் ரவிச்சந்திரன், மகனின் கல்லூரிப் படிப்புக்காக வளர்த்துவந்த இரண்டு கன்றுக்குட்டிகளை விற்று வழங்கிய கொரோனா நிவாரண நிதி.

7. கே.மேகலை, சின்னமனூர்

கொரோனா பாதித்த அம்மா, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறக்க... அதே நிலை பிறருக்கு வரக்கூடாது என்று ஆட்டோவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் மருத்துவமனை வாசலில் காத்திருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சென்னையைச் சேர்ந்த சீதா.

8. எல்.விஜயலட்சுமி, சென்னை-116

கொரோனா தொற்று பாதித்த தன் மாமனாரை மருத்துவமனையில் சேர்க்க வாகனம் கிடைக்காததால்... முதுகில் சுமந்துசென்ற அசாம் `மறு'மகள் நிஹாரிகா.

9. எம்.அனிதா, விழுப்புரம்

உ.பி மாநிலம், மதுராவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்,

13 கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்குக்கொண்டு சென்ற நேரம் அவரின் அம்மா இறந்துவிட்ட தகவல் வர, நோயாளிகளின் உயிரே முக்கியம் என கடமையை முடித்துவிட்டு, தாயின் இறுதி காரியங்களுக்குத் திரும்பியது.

10. கே.புஷ்பா, திருவள்ளூர்

திருவண்ணாமலை மாவட்டம், கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனாவால் இறக்க, அவருடைய உடலை அடக்கம் செய்ய யாருமே முன்வரவில்லை. தாமாக முன்வந்து அடக்கம் செய்த தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரின் மகத்தான சேவை.