Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 16 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ `விடுகதைகளுக்கு விடை என்ன?' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `உங்களுடைய ஃபேவரைட் காமெடியனின் வசனங்களில் உங்களுடைய ஃபேவரைட் வசனம்...' - ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

விடுகதைகளுக்கு விடை என்ன?

கீழே உள்ள விடுகதைகளுக்கான விடைகளைக் கட்டத்துக்குள் நிரப்புங்கள், பார்க்கலாம்!

1. அம்மா போட்ட சிக்கலைப் பிரிக்க முடியாது. அது என்ன?

2. இந்த வேடன் விரித்த வலையில் சிக்கினால், தப்பிக்க இயலாது. அது என்ன?

3. அடிக்காமலே அமைதியாக அழுதுகொண்டிருப்பான். அவன் யார்?

4. அடித்தால் அழுவான்; உடைத்தால் சிரிப்பான். அவன் யார்?

5. மட்டையுண்டு கட்டையில்லை; பூ உண்டு மனமில்லை. அது என்ன?

6. ஓடும் அண்ணனை மெதுவாகப் பின் தொடரும் தம்பிகள். அவர்கள் யார்?

7. அள்ள முடியும், கிள்ள முடியாது. அது என்ன?

8. இந்தக் குடைக்குக் கைப்பிடி இல்லை. அது என்ன?

9. காலுமில்லை, இறக்கையுமில்லை. ஆனாலும் வான் நோக்கிப் பறப்பான். அவன் யார்?

10. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி ஓட்டையை அடைப்பான். அவன் யார்?

11. சின்ன அறைகள் உண்டு; வீடல்ல. அழகாக இருக்கும்; சித்திரமும் அல்ல. காவலுக்கு வீரர்கள் உண்டு, கோட்டையுமில்லை. அது என்ன?

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 16 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 16 - பரிசு ரூ.5,000

விடை: தட்டான், கடுகு, கப்பல், தர்பூசணி, சித்திரம், உருளைக்கிழங்கு, மயில், மோர், காற்றாடி, சர்க்கரை, குரங்கு, சந்தனம். வாக்கியம்: தடுப்பூசி உயிர் காக்கும்

சரியான விடையுடன், `லாக்டௌனில் நீங்கள் மிகவும் மிஸ் செய்த... மிஸ் செய்யும் ஒரு விஷயம்’ - நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. தா.கலைவாணி, கும்பகோணம்

பள்ளிகளை எப்போ திறப்பாங்க... என் வகுப்பு பிள்ளைகளை எப்போ பார்ப்பேன்?

2. ஏ.சுகுணா, சேலம்-3

இரண்டு ஆண்டுகளாகக் கல்லூரிக்குச் செல்ல முடியாமல், என் தோழிகளைப் பார்க்க முடியாத நிலையை யாரிடம் சொல்வேன்?

3. பி.திலகவதி, சின்ன திருப்பதி

கொரோனாவால் இறந்த அண்ணியின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க முடியாத நிலை... அது மட்டுமல்ல... நிறைய சுப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியாத நிலை.

4. ஆர்.விஷாலி, மயிலாடுதுறை

கிராமத்தில் தனியே வசிக்கும் என் அம்மாவையும், என் கிராமத்து உறவுகளையும்.

5. என்.ஷோபனா, சென்னை-88

வருடத்துக்கு ஒருமுறை திட்டமிட்டுச் செல்லும் உறவினர்கள் இல்லங்களுக்குச் செல்லும் விசிட் இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளது.

6. எஸ்.வேலம்மாள், திருநெல்வேலி-7

மாதச் சேமிப்பில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை. சேமித்து வைத்த பணம் கரையும் சூழல்... எதைச் சொல்வது? எதை விடுவது?

7. எஸ்.ஸ்ருதி, சென்னை-33

நல்ல நிறுவனத்தில் வேலைச் சென்ற அடுத்த வாரமே லாக் டெளன். வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை பார்க்கும் நிலை... அலுவலகத்தில் இருந்த நிலைக்கு ஈடாகாது.

8. தீபா விக்ரம், மாஸ்சூஸெட்ஸ், USA

இரண்டு ஆண்டுகளாக தாய் நாடான இந்தியாவுக்கு வர முடியாத நிலை தினமும் என்னை வாட்டுகிறது.

9. லதா கிருஷ்ணசுவாமி, சேலம்-30

கே.ஜி வகுப்பு ஆசிரியரான எனக்கு, அந்தக் குழந்தைகளின் சிரிப்பு, அழுகை, கோபம், சிணுங்கல், ஸ்பரிசம்... அனைத்தும் மிஸ்ஸிங்.

10. வி.வளர்செல்வி, சென்னை-62

அப்பார்ட்மென்ட் குழந்தைகளுடன் சேர்ந்து அடிக்கும் அத்தனை லூட்டிகளும் சண்டைகளும் சச்சரவுகளும் மிஸ்ஸிங்.