Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 17 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ `புதிருக்குள் புதிர்' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `வொர்க் ஃப்ரம் ஹோம் - உங்களுடைய பார்வையில்...' - ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடித்து இடமிருந்து வலமாக முக்கோணத்தில் எழுதுங்கள்.

1. பாண்டுவின் புதல்வர்கள் (10)

2. ஆப்பிரிக்க விலங்கு. மிக உயரமானது (9)

3. இளங்கோவடிகளால் எழுதப்பட்டது (8)

4. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. சிவகங்கையின் ராணி (7)

5. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்ட நகரம் (6)

6. லட்சுமிபாயின் சிறப்புப் பெயர் (5)

7. பழத்துக்கு வெளியே இருக்கும் விதை (4)

8. குடகில் தோன்றும் தமிழகத்தின் முக்கியமான நதிகளில் ஒன்று (3)

9. நீரைத் தேக்கி வைக்கும் இடம் (2)

10. நெருப்பு (1)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 17 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 17 - பரிசு ரூ.5,000

கடைசித் தேதி: 3.8.2021

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், புதிர்ப் போட்டி - 17 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

புதிர்ப்போட்டி - 15 விடைகள் - முடிவுகள்...

சரியான விடையுடன், `கொரோனாவும் ஒன்றரை வருட ஊரடங்கு வாழ்க்கையும் உங்களுக்குக் கற்றுத்தந்த பாடம் என்ன?’ - நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

உறவுகளின் உன்னதம் உணர்ந்தேன். வீட்டுப்பணியாளர்களின் உழைப்பை அறிந்தேன்.

2. அன்னா மேரி இவான், சென்னை-92

கொரோனாவால் எரிக்கப்பட்ட உடல்களில் ஏழை - பணக்காரர் எந்த பேதமில்லை. வாழும்போது மட்டும் ஏன் இந்த அவலம்?

3. இரா.சந்திரிகா, குன்னூர்.

உள்ளதைக்கொண்டே குடும்பம் நடத்த இயலுமென்று உணர்த்திய நாள்கள் அவை.

4. ஆர்.பிருந்தா ரமணி, மதுரை-9

போன் செய்யும்போதெல்லாம் கொரோனா பற்றி வரும் வாசகங்கள் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்தது.

5. இரா.மரகதம் இளவரசன், தர்மபுரி.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீதான அக்கறை எனக்கு அதிகமானது. மற்றவர்களுக்கும் இதைப் போதிக்கச் சொன்னது.

6. ஈ.உச்சிமகாளி, நாகர்கோவில்.

வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலிருந்த என் கணவர், என் பணிகளை உணர்ந்தார். வீட்டிலேயே அடைந்திருந்த அவர் கடமைகளை நான் உணர்ந்தேன்.

7. எஸ். பிரியதர்ஷினி, நெல்லை-7

வீட்டு முதியோருக்குக் கனிவுடன் சேவை செய்யும் பழக்கம் என்னோடு ஒட்டிக்கொண்டது.

8. டி.முத்துமாரி, விருதுநகர்.

துரித உணவுகள், தியேட்டர், அவுட்டிங் என்று நண்பர்களோடு சுற்றுத் திரிந்த நாள்களைத் தடுத்து, குடும்பத்தினருடன் ஆரோக்கியத்துக்கும் அன்புக்கும் வழிகாட்டிய நாள்கள் இது.

9. ரு.ஜெகதீஸ்வரி, கிருஷ்ணகிரி.

வாழ்க்கைக்குத் தேவை சத்தான உணவு, சுத்தமான ஆடை, தூய்மையான இருப்பிடம் மட்டுமே என்பதை உணர்ந்தேன்.

10. வித்யா வாசன், சென்னை-78

நாளை என்பது நிச்சயமல்ல... இன்றைய நம்பிக்கையான, பாதுகாப்பான வாழ்க்கையே நிஜம்.