தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 18 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ `சூரியப் புதிர்' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது என்பதை காரணத்துடன் இரண்டு வரிகளில் நச் என்று எழுதுங்கள். அது எந்த கேரக்டராகவும் இருக்கலாம். சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

சூரியப் புதிர்

இங்கு 16 கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு பதிலும் ‘ம’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். கதிர்களில் உள்ள எண் களின்படி 16 பதில்களையும் சரியாக எழுதுங்கள்.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 18 - பரிசு ரூ.5,000

1. நவரத்தினங்களுள் ஒன்று (5)

2. விருந்தும் இதுவும் மூன்று நாள்கள் என்பார்கள் (4)

3. உரலுக்கு ஒருபக்கம் இடி; இதற்கு இரண்டு பக்கங்களும் இடி (5)

4. கைகளுக்கு அழகு சேர்க்கும். ஆனால், ஆபரணம் அல்ல (4)

5. கிழங்குகளில் ஒன்று. முருகனுக்குப் பிடித்த பெயர் கிழங்கின் பெயரில் உண்டு (5)

6. நிறங்களில் ஒன்று (4)

7. பெரிய விசேஷங்களை இங்கு நடத்துவார்கள் (5)

8. பூக்களில் ஒன்று. மதுரையில் பெயர் பெற்றது (4)

9. பீர்பால் --- நுட்பம் மிகுந்தவர் (2)

10. ஐப்பசியில் இது அதிகம் இருக்கும் (2)

11. --- திறந்த வெள்ளம் போல என்பார்கள் (2)

12. ஊட்டி --- களின் அரசி (2)

13. --- உடலுக்குக் கேடு (2)

14. --- ஓசை கேட்டு எழுந்து (2)

15. எழுத உதவும் (2)

16. அத்தை --- மெத்தையடி (2)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் 18 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 16 முடிவுகள்...

சரியான விடையுடன், `உங்களுடைய ஃபேவரைட் காமெடியனின் வசனங்களில் உங்களுடைய ஃபேவரைட் வசனம்...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. டி.நிர்மலா தேவி, மதுரை.

விவேக்: அரிசி, கோதுமை, ரவா... இதெல்லாம் விளைய வைக்கிறது அவா... மொத்தத்துல அவா இல்லேனா நமக்கெல்லாம் ஏதுங்க புவா?

2. வரலக்ஷ்மி முத்துசாமி, சென்னை-37

வடிவேலு: உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?

3. கே.விஷ்மிதா, திருநின்றவூர்

கவுண்டமணி: பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

4. உமாதேவி ஜனார்த்தனன், கோவை-12

விவேக்: உள்ளுக்குள்ளே இருக்கிற 750 பார்ட்ஸ்ல ஓடாத வண்டி, இந்த ஒரு எலுமிச்சை பழத்திலயாடா ஓடப் போகுது?

5. டி.முருகப்ரியா, மலையம்பாளையம், ஈரோடு

`கருமி’ நாகேஷ்: அவனை நம்பி புலமை போச்சு, கத்திக் கத்திக் குரலும் போச்சு. அவன் இல்லை... வர மாட்டான். நம்பாதே!

6. ஆர்.வம்சிகா, சென்னை-19

`கைப்புள்ள’ வடிவேலு: அது போன மாசம்; இது இந்த மாசம்... அது வேற வாய்; இது நாற வாய்!

7. பி.ரமணி இளங்கோ, சேலம்.

கவுண்டமணி: நாராயணா... இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலடா... மருந்தடிச்சு கொல்லுங்கடா!

8. ஈ.உச்சிமகாளி, நாகர்கோவில்

வடிவேலு: இந்தக் கோட்டதாண்டி நீயும் வரக் கூடாது. நானும் வர மாட்டேன். பேச்சு, பேச்சாதான் இருக்கணும்.

9. பானுஸ்ரீ வெங்கட், சேலம்.

`சதிலீலாவதி’ - கமலிடம் கோவை சரளா: என்னயவே புடிக்கலயாம். இதுல பிரேக் புடிக்கலேன்னா என்ன?

10. மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி-12

`சின்னதம்பி’ கவுண்டமணி: அப்பா... ஒண்ணே ஒண்ணு மிச்சம். கரன்ட் பில் நான் கட்டுனதேயில்ல.