Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 19 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 19 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ `இந்திய சுதந்திரம் 75' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `உனக்கு/உங்களுக்கு என்ன வேணும்’ என்று சமீபத்தில் உங்களிடம் கேட்டது யார்? நீங்கள் கேட்டது என்ன... ஏன்? இரண்டு வரிகளில் ப்ளீஸ்... சரியான விடையுடன் `நச்’ வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 19 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 19 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 17 முடிவுகள்...

சரியான விடையுடன், `வொர்க் ஃப்ரம் ஹோம் - உங்களுடைய பார்வையில்...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. எஸ்.லட்சுமி, கரூர்

அலுவலகத்தின் பணிச்சுமையும் மன அழுத்தமும் வீட்டுக் குள்ளே ஆட்சி செய்ய, பெற்றோரும் பிள்ளைகளும் அருகி லிருந்தும் அந்நியராகிப் போகிறார்கள்.

2. பி.சுமதி, சேலம்-3

இந்த அனுபவம் புதுமை; ஏனோ மனதில் வெறுமை.

3. இரா.சுந்தரவல்லி, சேலம்-4

ஆரம்பத்தில் கொண்டாட்டம்; போகப் போக திண்டாட்டம். கழுத்துவலி, முதுகுவலி Etc... Etc...

4. மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பதற்கேற்ப... அலுவலக நாள்களில் விடுமுறைக்கு ஏங்கியது போக... வீட்டிலிருந்து எப்போது அலுவலகம் செல்வோம் என்றாகிவிட்டது.

5. சாரநாயகி சிவராமன், சென்னை-71

என்னதான் சிக்கனம், ஆரோக்கியம் பற்றி பெரியவர்கள் அறிவுரைகள் கூறிக்கொண்டே இருந்தாலும், அதைப் பற்றி அறிந்து, புரிந்துகொண்டு நடக்க வழிவகுத்த நாள்கள்.

6. அ.ஆமினா பர்வீன், திருநெல்வேலி-11

எட்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய பணியை, இருபத்து நான்கு மணி நேரமும் செய்ய வைத்தது வொர்க் ஃப்ரம் ஹோம்.

7. உஷா ராஜகோபாலன், ஹைதராபாத்

பலருக்கு வரம். சிலருக்கு துயரம். ஆனால், வீட்டில் உள்ள அனைவரும் நலம்.

8. என்.பிரமிதா, சேலம்-30

பெட்ரோல் செலவு குறைந்தது. மின்சார செலவு உயர்ந்தது.

9. சுஜா மெளலி, சென்னை-91

குழந்தைகளைச் சரியாகக் கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து கிடைத்த விடுதலை.

10. வி.வளர்செல்வி, சென்னை-60.

வீட்டில் சும்மா இருப்பவளாக நினைத்த கணவருக்கு, இவளுக்கு இத்தனை வேலைகளா என்று புரியவைத்தது வொர்க் ஃப்ரம் ஹோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism