Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 20 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 20 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ `தாயைக் கண்டுபிடியுங்கள்' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், 'கால எந்திரம் கையில் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையின் எந்தப் பருவத்துக்குச் செல்ல விரும்புவீர்கள்... ஏன்?’ என்பதை கட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் நச்சென்று இரண்டே வரிகளில் எழுதுங்கள். சரியான விடையுடன் 'நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

தாயைக் கண்டுபிடியுங்கள்!

இங்கே புகழ்பெற்ற ஆறு பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களைப் பெற்ற தாயின் பெயர்கள் கட்டத்துக்குள் இருக் கின்றன. தாயையும் சேயையும் சரியாக எழுதி அனுப்புங்கள்.

1. காந்தியின் தாய் --------------------

2. நேருவின் தாய் ---------------------

3. புத்தரின் தாய் ----------------------

4. அம்பேத்கரின் தாய் ----------------

5. பாரதியின் தாய் --------------------

6. பெரியாரின் தாய் ------------------

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 20 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 20 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 18 முடிவுகள்... சரியான விடையுடன், `தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது?’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1.ஆர்.கீதா, சென்னை 41 - சன் டிவி - ‘ரோஜா’ சீரியலில் நடிக்கும் அன்னபூரணி (வடிவுக்கரசி)யின் அத்தை கேரக்டரை மறக்க முடியுமா?

2. தி.அமிர்தவர்ஷினி, கோவை 25 - சன் டிவி - `அபியும் நானும்' சீரியலில் வரும் மீனா (வித்தியா வினு மோகன்). உதடு பிரியாத அழகு சிரிப்பு, வசன உச்சரிப்பு, அமைதி நடிப்பு... என அனைத்தும் அசத்தல்.

3. சீதா சங்கர், நெல்லை 7 - சன் டிவி - ‘அன்பே வா’ சீரியலில் ‘பூமிகா’ (டெல்னா டேவிஸ்). அவரின் பொறுமை, தன்னம்பிக்கை, முயற்சி, பணிவு என்னைக் கவர்ந்தவை.

4. கே.ராஜேஸ்வரி, திருநெல்வேலி 7 - சொலவடையால் கருத்தையும் உருட்டும் விழியால் உள்ளத்தையும் அள்ளும் சன் டிவி - ‘சுந்தரி’ சீரியல் அப்பாத்தாவே (வரலட்சுமி) எனது சாய்ஸ்.

5. பி.திரிபுரசுந்தரி, ஈரோடு - ஒல்லியான உடல்வாகு இருந்தால்தான் நாயகியாக ஜொலிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தனது அமைதி முகத்தாலும், அசத்தலான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வரும் சன் டிவி `ராசாத்தி’ (அஸ்வினி ராதாகிருஷ்ணன்) சூப்பர் கேரக்டர்.

6. இரா.கலாராணி, சென்னை 41 - விஜய் டிவி - ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் காதல், கடமை, காமெடி என்று நடித்து அசத்திவரும் மாயன் (செந்தில்) எனக்கு பிடித்த கேரக்டர் மட்டுமா... அசத்தல் ஆளும்கூட!

7. என்.மகாலட்சுமி, சிதம்பரம் - விஜய் டிவி - ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் சரஸ்வதி (நட்சத்திரா) காட்டும் யதார்த்தம் அருமை.

8. ஜி.ஸ்ரீவர்ஷினி, திருவண்ணாமலை - விஜய் டிவி - ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரின் நாயகி வெண்ணிலா (பிரியங்கா குமார்) ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொள்ளும் மனோதிடம் பாராட்டத்தக்கது.

9. கீதா கங்காதரன், சென்னை 64 - விஜய் டிவி - ‘பாக்ய லட்சுமி’ தொடரின் பாக்யா (சுசித்ரா), வீட்டில் பலர் மட்டம் தட்டினாலும் எழுந்து நிற்கும் துணிச்சல்காரி என்பதை மறக்க முடியாது.

10. எஸ்.தனலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் - ஜி தமிழ் - `செம் பருத்தி' - பார்வதி (ஷபானா) தொடரின் பல்வேறு கட்டங்களி லும் என்னை நெகிழ வைத்துக்கொண்டே இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism