Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 21 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 21 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ `ஆத்திசூடி புதிர்' போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `சென்டிமென்ட்டாக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஒரு பொருள் எது... ஏன்?’ என்பதை கட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் நச்சென்று இரண்டே வரிகளில் எழுதுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

ஆத்திசூடி புதிர்

கீழே எட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக் கான விடைகளை வட்டங்களுக்குள் எழுதுங்கள். சிவப்பு வண்ணமிட்ட வட்டங்களில் உள்ள எழுத்துகளை மட்டும் எடுத்து எழுதினால், ஓர் ஆத்திசூடி கிடைத்துவிடும்.

கேள்விகள்

1. பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பும் விளையாட்டு.

2. சர்க்கரை இந்தத் தாவரத்திலிருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

3. கல்லூரிப் படிப்பை முடித்தால் இது கிடைக்கும்.

4. விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம்.

5. கூப்பாடு என்பதை இப்படியும் சொல்லலாம்.

6. உள்ளதை உள்ளபடியே காட்டுவது.

7. யானையின் மற்றொரு பெயர்.

8. நல்ல விஷயங்களுக்கு மகிழ்ச்சியாகச் சொல்வது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 21 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 21 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், ``உனக்கு/உங்களுக்கு என்ன வேணும்’ என்று சமீபத்தில் உங்களிடம் கேட்டது யார்? நீங்கள் கேட்டது என்ன... ஏன்?’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. டி.மணிமேகலை, சேலம்-8. ``என்ன வேண்டும்?” என்று கேட்டாள் தோழி... ``சீக்கிரம் நம் பள்ளியைத் திறக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளைப் பார்க்காமல் இருப்பது பைத்தியம் பிடித்தமாதிரி உள்ளது’’ என்றேன்.

2. ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி. வீட்டுக்குள் உம்மென்று நுழைந்த கணவர் கேட்டார், ``என்ன வேணும்... ஏன் ஒரு மாதிரியா இருக்கே?’’ - சட்டென்று சொன்னேன்... ``உங்க முகத்திலே கொஞ்சம் சிரிப்பு.’’

3. எம்.ருக்மணி, சென்னை-113. ``என்ன வேண்டும்?’’ என்று கேட்டது என் தோழி. ``கொரோனாவால வேலை போயிடுச்சு. ஒரு வேலை வாங்கிக் கொடு’’ என்றது நான்.

4. எம்.வசந்தா, சென்னை-64. பக்கத்து வீட்டம்மாளிடம், ‘`கேஸ் தீர்ந்துடுச்சு... உங்ககிட்டே இருக்குமா... வந்ததும் கொடுத்துடறேன்’’ என்றேன். என் வயோதிக நிலைமையை உணர்ந்து அவசரத்துக்கு அவர் கொடுத்தது பசிக்கான உணவு.

5. பி.அமுதா, சேலம்-4. ``உனக்கு என்ன வேண்டும்?” - அமைதியாக அமர்ந்திருந்த என்னிடம் கேட்டார் அண்ணன். “எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கித் தருவீங்களா? என்றேன். இப்ப... ஐயம் ஹேப்பி வித் பப்பி!

6. ஆர்.மேரி, திருச்சி-18. என் சகோதரர் தன் அறுபதாவது பிறந்த நாளுக்கு என்ன வேண்டுமென்று கேட்க, ``உன் ஆசீர்வாதம் போதும்” என்றேன். அவர் பட்டுப்புடவையுடன், அரை பவுன் தோடு வாங்கிக்கொடுத்து ஆசீர்வதித்தார், தன்னுடைய ஆறு சகோதரிகளுக்கும்.

7. என்.பிருந்தா, சென்னை-5. வெளிநாட்டிலிருக்கும் என் மூன்றரை வயது பேரனிடம் ``என்னப்பா வேண்டும்?'' என்று கேட்டதும் ‘‘சீக்கிரம் வாங்க பாட்டி. எனக்கு கதை சொல்லுங்க” என்று அவன் பதில் சொன்னதும் கலங்கிவிட்டேன்.

8. மயூ கிருஷ்ணமுராரி, சென்னை-115. கொரோனா காலத்தில் 20 நாள்கள் என் குடும்பமே பாதிக்கப்பட்டபோது காப்பாற்றிய என் தோழி, “வேறு என்ன வேண்டும்?” என்றாள். “நம் நட்பு இப்படியே தொடரட்டும்” என்றேன்.

9. ஏ.செளமியா, சேலம்-3. “என்ன வேண்டும்?” என்று கேட்டது என் தந்தை. `மாடித் தோட்டம் அமைக்க அனுமதி' கேட்டேன். `ஓகே' சொன்னவர்... அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்தார்.

10. இவான் பெர்னாண்டோ, சென்னை-92. உயர்ந்த பதவியில் இருக்கும் என் மகன் கேட்டான், “அம்மா உங்களுக்கு என்ன வேண்டும்?” பதில் சொன்னேன்... “சிரமப்படுபவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உன் கம்பெனியில் வேலை வாங்கிக் கொடு.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism