Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 23 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 23 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த மழைப் பாடல் எது? அது குறித்த இரண்டு வரி நினைவுகளுடன் பகிருங்கள்...’ என்பதை கட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் நச்சென்று இரண்டே வரிகளில் எழுதுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கீழே உள்ள கேள்விகளுக்கான விடைகள் கட்டங்களில் ஒளிந்திருக்கின்றன. சரியான விடைகளைக் கண்டுபிடித்து, கட்டத்திலேயே குறிப்பிட்டு அனுப்புங்கள்.

1. ஒரு காலத்தில் மாடுகளுக்குப் புகழ்பெற்ற மணப் பாறையில், இப்போது இந்தத் தின்பண்டம் புகழ்பெற்றது.

2. தியாகராஜர் ஆராதனைக்குப் புகழ்பெற்ற திருவை யாற்றில் கிடைக்கும் தனித்துவமான இனிப்பு இது.

3. கி.ராஜநாராயணன் பிறந்த கோவில்பட்டி .......... சுவையைச் சொல்லவும் வேண்டுமோ!

4. பொரித்த பரோட்டாவுக்குப் புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் இந்தக் காரம் சிறப்பு வாய்ந்தது.

5. விருதுநகரில் சாத்தூர் காரத்துக்கு ஏற்ற ஜோடி இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் இனிப்பு.

6. ஜவுளிக்குப் புகழ்பெற்ற ஈரோட்டில் இந்தக் கிழங்கு அதிகம் விளைகிறது. முகத்துக்குப் பூசவும் சமையலுக்கும் இது பயன்படும்.

7. முந்திரிக்குப் பெயர் பெற்ற பண்ருட்டியில் இந்தப் பழத்தின் சுவைக்கு ஈடு இல்லை.

8. பொள்ளாச்சியில் சந்தை பிரபலமானது என்றாலும் அதைவிடச் சிறப்பானது இதுதான்.

9. நாமக்கல்லில் சோளம், மரவள்ளிக்கிழங்கு அதிகமாக விளைந்தாலும் புகழ்பெற்றது என்னவோ இதுவே.

10. மாப்பிள்ளை சொதிக்குப் புகழ்பெற்ற திருநெல்வேலியில் உலகமே கொண்டாடும் இனிப்பு இது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 23 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 23 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `சென்டிமென்ட்டாக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஒரு பொருள் எது... ஏன்?’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. எஸ்.ரம்யா, தர்மபுரி: 15 வருடங்களுக்கு முன்பு என் மகள் எனக்கு எழுதிய மழலை மொழி மன்னிப்புக்கடிதத்தை இப்போது சென்டிமென்ட்டாக எடுத்துப் படிக்கும் போது அவளுக்கு வெட்கம் வருகிறது. எனக்கு சிரிப்பு வருகிறது.

2. என்.ரத்னா நாகராஜ், சென்னை-15: என் தம்பி வாங்கித் தந்த அஞ்சறைப் பெட்டி. இன்று அவன் இல்லை. ஆனாலும், அதைப் பயன்படுத்தும்போது அவன் நினைவு களைச் சுமக்கிறேன்.

3. எஸ்.லெட்சுமி, திருநெல்வேலி: `ஸ்ரீராமஜெயம்’ எழுதி ஸ்ரீஜயேந்திர சுவாமிகள் ஆசியுடன் வழங்கிய டாலர், சென்டிமென்ட்டாக 34 வருடங்கள் என்னிடம் உள்ளது.

4. அனுஸ்ரீ, சேலம்-4: தனித்துப் பிறந்த எனக்கு கணவர், மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார், கொழுந்தனர் என அனைத்து உறவுகளும் ஒரே நாளில் கிடைத்த திருமணப் பத்திரிகையே 30 வருட சென்டிமென்ட் பொக்கிஷம்.

5. சங்கரி வெங்கட், சென்னை-63: 40 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை எனக்கு எழுதிய கடைசி கடிதம். அந்தக் கடிதம் எனக்குக் கிடைப்பதற்கு முன்பே அவர் இறந்த (தந்தி) செய்தி வந்துவிட்டது.

6. என்.உஷாதேவி, மதுரை-9: புது வீடு கட்டிய கையோடு சமயபுரத்தாளை தரிசித்துவிட்டு அம்மன் படம் வாங்கி வந்தேன். மறுநாள் பக்கத்து வீட்டினர் வேளாங்கண்ணி சென்று வந்து சின்ன மாதா சிலை ஒன்று கொடுத்தார்கள். மாரியும் நானே, மேரியும் நானே என்று சொல்வதுபோல் ஒரு சென்டிமென்ட்டாக இன்றைக்கும் பூஜையில் வைத்து வணங்குகிறேன்.

7. எ.சுகுணா, சேலம்-3: ஆசிரியர் தினத்தன்று மாணவி ஒருத்தி கொடுத்த நெயில் கட்டர். என்னை வியப்பில் ஆழ்த்திய, இன்றும் பயன்படுத்தக்கூடிய பொருளாக சென்டி மென்ட்டாக என்னிடம் உள்ளது.

8. எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி: `பாபா’ படத்துக்கு பன்ச் டயலாக் எழுதி 10,000 ரூபாய் பரிசுடன் சூப்பர் ஸ்டாரின் கையெழுத்துடன்கூடிய கடிதம்.

9. ஆர்.ஜெயலெட்சுமி, நெல்லை: முதன்முதலில் நான் எழுதிய டிப்ஸுக்கு `அவள் விகடன்' அனுப்பிய 50 ரூபாய். அதன் பிறகு, இன்றுவரை பத்திரிகைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

10. அன்புக்கரசி பாலசுப்ரமணியன், மன்னார்குடி: 60 வருடங்களுக்கு முன்பு அம்மா வாங்கிய சிங்கர் தையல் மெஷினை இப்போதும் பயன்படுத்துகிறேன். என் பேத்திக்காக வைத்திருக்கிறேன்.