Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 24 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு குறுக்கெழுத்துப் புதிர். விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `சமீபத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட புதிய விஷயம் ஒன்று...’ எது என்பதை கட்ட மிடப்பட்டிருக்கும் இடத்தில் நச்சென்று இரண்டே வரிகளில் எழுதுங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. வற்றல் குழம்புக்கு இது நல்ல காம்பினேஷன். விருந்தில் கண்டிப்பாக இருக்கும் (5)

4. ஒரு வாய் உணவு (4)

5. இந்தியாவின் தேசிய விலங்கு (2)

7. வாணலியில் இதைச் சுடுவார்கள் (4)

9. மகிழ்ச்சியை இது வெளிக்காட்டிவிடும் (4)

11. இது வந்தால் பத்தும் பறந்து போகும் (2)

13. தலையில் முடி இல்லாவிட்டால் இப்படிச் சொல்

வார்கள் (4)

14. இறைவனின் அபிஷேக, ஆராதனையில் முக்கிய இடம்பிடிக்கும் வாசனைப் பொருள் (4)

வலமிருந்து இடம்

3. மாதங்களில் ஒன்று (4)

16. நரியை இதற்கு உதாரணமாகச் சொல்வார்கள் (5)

மேலிருந்து கீழ்

1. உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் ---- இல்லை (4)

2. பத்மா சுப்ரமணியம் இந்தக் கலையில் சிறந்தவர் (4)

3. தமிழர் கலைகளில் ஒன்று (5)

6. விறகை எரித்தால் இது கிடைக்கும் (2)

7. ---- பட்டம் தேடி விதை (2)

8. பாம்பு என்றால் ----யும் நடுங்கும் (2)

12. காட்டு ராஜா (4)

கீழிருந்து மேல்

5. பருப்பில் இருக்கும் சத்து (4)

10. கரும்பு இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் (2)

14. பாயசத்தில் போடப்படும் ஒரு பொருள் (5)

15. மலைக்கோட்டை இந்த மாவட்டத்தில் இருக்கிறது (4)

16. யானையின் நீண்ட பற்கள் (4)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 24 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 24 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `பெண்ணியம்’ உங்கள் பார்வையில்... - நச் வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. அபர்ணா மதுசூதனன், சென்னை-87

உயர்கல்வி முதல் அனைத்துத் துறை வேலைகள்வரை, ஆண்களுக்கு இணையாக இன்று பெண்களுக்கும் சாத்தியமாகியிருக்கிறது. அந்த மாற்றமே முழுமையான பெண்ணியத்துக்கான வித்து.

2. மு.சிபானா ஜாஸ்மின், திண்டுக்கல்

முழுமையான அங்கீகாரம் என்பது இன்றும் முடக்கப்பட்டுத்தான் கிடக்கிறது. ஆண் - பெண் சம உரிமை முழுமையாக சாத்தியமாகும் போதுதான் பெண்ணியம் பெருமை பெறும்.

3. ஷாலினி ஜெரால்டு, சென்னை-92

பெண்களின் மீதான அடக்குமுறைகள் அறவே முற்றுப்பெறுவதுதான் நிஜமான பெண்ணியம்.

4. எம்.அருணா, வேலூர்-9

அனைத்து துறைகளிலும் ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பது நிரூபணமாகிவிட்டநிலையில், இன்னமும் பெண்களை, பிள்ளைபெறும் எந்திரமாகப் பார்க்கும் பார்வை மாறவும், பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கவும் பெண்ணியம் உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

5. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

பெண் உரிமை மற்றும் பெண் சுதந்திரம் போன்றவை இந்தத் தலைமுறை பெண்களுக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது. அந்த உரிமைகள் எல்லை மீறப்படாமலிருப்பதே பெண்ணியம்.

6. அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

பூவாய், பூமியாய், காக்கும் சாமியாய் திகழ்வதே பெண்ணியம்.

7. ப.பூங்கோதை, புதுக்கோட்டை

பெண்களுக்குப் பெண்களே எதிரியாக இல்லாமல், கைதூக்கிவிடும் சிநேகிதியாக, கற்றுத்தரும் ஆசானாக, வழிகாட்டும் விளக்காக இருப்பதே உண்மையான பெண்ணியம்.

8. ஜி.பரமேஸ்வரி, விளாத்திகுளம்

சமத்துவமில்லாத ஆணாதிக்க சமூகத்திலும், பெண்கள் தங்கள் சமத்துவத்தை அடைவதற்கான வழிகளைக் கட்டமைப்பதே பெண்ணியம்.

9. எஸ்.செளமினி, ஜோலார்பேட்டை

பெண்ணியம் என்பது அவளின் கனவுகள் நனவாக சுதந்திரம் கொடுப்பது, அவளின் உணர்வுக்கும் சுயமரியாதைக்கும் மதிப்பளித்து, அவளை அவளாக வாழ அனுமதிப்பது.

10. ஆர்.ஆனந்தலட்சுமி, கபிஸ்தலம்

பெண்ணியம் என்பதை முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வு பரவ ‘பெண்ணியம்’ குறித்த பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.