Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 26 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

பிரீமியம் ஸ்டோரி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `உங்கள் குடும்பம், உறவினர்கள் என்றல்லாது, முன் பின் அறியாத ஒருவருக்காக நீங்கள் குரல்கொடுத்த ஒரு தருணம்' பற்றிப் பகிருங்கள், நச்சென்று சில வரிகளில். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

ஊர்களைக் கண்டுபிடியுங்கள்!

ஸ்பெஷல் தின்பண்டங்கள் எந்த ஊருக்குச் சொந்தமானவை என்பதைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுங்கள்.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 26 - பரிசு ரூ.5,000

1. ஸ்பெஷல் இட்லிக்குப் புகழ்பெற்ற ஊர்.

2. இந்த ஊரின் பெருமைகளில் ஒன்று கந்தரப்பம்.

3. நாவில் நீர் ஊறச் செய்யும் அசோகா வுக்குப் புகழ்பெற்ற ஊர்.

4. பஞ்சாமிர்தத்துக்கு ----

5. மாப்பிள்ளை சொதி இல்லாமல் மண மக்கள் விருந்து இங்கே இருக்காது.

6. மொறுமொறு வர்க்கி இங்கே பிரபலம்.

7. வாயில் போட்டவுடன் கரையும் மக்ரூனுக்குப் புகழ்பெற்ற ஊர்.

8. ஜில்லென்ற ஜிகர்தண்டாவுக்கு ----

9. கோயில்களுக்குப் புகழ்பெற்ற இந்த ஊர், கடப்பாவுக்கும் பெயர் பெற்றது.

10. இட்லி, தோசைக்கு சரியான ஜோடி வடகறி என்று இந்த ஊரில் சொல்வார்கள்.

11. தட்டுவடை செட் என்றால் இங்கேதான் சாப்பிட வேண்டும்.

12. மக்கன்பேடாவுக்கும் பிரியாணிக்கும் புகழ்பெற்றது.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 26 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `சமீபத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயம் ஒன்று...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. எம்.உமா மகேஸ்வரி, திருச்சி-3 - வெளியே செல்லும்போது செல்போன் சார்ஜ் இன்றி ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டால், அவசர தேவைக்கு, வேண்டியவர்களின் எண்களுக்குத் தொடர்பு கொள்வது சிரமம். தொலைபேசி எண்கள் கொண்ட முகவரி புத்தகம் வைத்துக்கொள்வதை சமீபத்தில் கற்றுக்கொண்டேன்

2. புஷ்கலா ஜெயகுமார், சென்னை-24 - நம்முடன் வாழும் மூத்த குடிமக்களுக்குக் குடும்பத்தில் முக்கியப் பொறுப்பும் முடிவெடுக்கும் வாய்ப்புகளும் அளித்து அவர்களை அலட்சியப் படுத்தாமல் அவர்களோடு மனம்விட்டுப் பேசினால் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இது நான் சமீபத்தில் கற்றுக்கொண்ட புதிய விஷயம்.

3. வி.சித்ரா, கோபிசெட்டிபாளையம் - கொரோனா தொற்று குறைந்த நிலையிலும் மாஸ்க் அணிவதையும் சானிடைசர் உபயோகிப்பதையும் எப்போதும் கடைப்பிடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது என்பதைக் கற்றுக்கொண்டேன்.

4. எஸ்.மணிமேகலை, மைசூரு-26- என்னதான் நமக்கு தலைபோகிற அளவுக்கு வேலையிருந்தாலும், வயதானவர்கள் பேசும்போது, அது நமக்கு சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சிறிது நேரம் காதுகொடுத்துக் கேட்டால், அது அவர்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும் என்பது நான் சமீபத்தில் கற்றுணர்ந்தது.

5. ஜானகி ரங்கநாதன், சென்னை-4 - பத்திரிகைகளுக்கு கட்டுரை, விமர்சனம் போன்றவற்றை கார்டு, கவரில் எழுதுவதைத் தவிர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப என் மருமகள் மூலம் கற்றுக்கொண்டேன்.

6. கே.சி.செளந்திரம், கொடுமுடி- எல்லாரும் எழுதுவதைப் பார்த்து எனக்கும் ஆசை. என் வயது 70. இப்போது சில பத்திரிகை களில் எழுதி வருகிறேன். எழுதுவதற்கு வயது தடையில்லை என்பதை உணர்கிறேன்.

7. இவான் தார்சி, சென்னை-92 - பிளம்பிங் வேலை பார்க்க ஆட்டோ ஓட்டும் இளைஞர் வந்தார். இவருக்கு இந்த வேலை தெரியுமா என்று சந்தேகப்பட்டேன். வேலையைச் சரியாக முடித்த பிறகு, அவருக்கு போன் வந்தது. சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். தான் பட்டதாரி என்றும் கொரோனாவால் பணி போய் விட்டது என்றும் சொன்னார். தோற்றத்தை வைத்து ஆளை மதிப்பிடக் கூடாது என்று கற்றுக்கொண்டேன்.

8. என்.கிரகலெட்சுமி, மதுரை-17 - சமீபத்தில் அவள் விகடனில்  எழுதிய நிறவெறிக்கு எதிரான வார்த்தைகள் என்னை திருத்தின, கறுப்பு என்பது ஒதுக்கப்பட வேண்டியதில்லை என்பதைக் கற்றுக்கொடுத்தன.

9. ஆர்.சுந்தரி, சென்னை-28 - மனதை ரிலாக்ஸ் செய்யும் `மண்டலா ஆர்ட்'டை சமீபத்தில் கற்றேன்.

10. அனுஷா ராம்மோகன், ஈரோடு - வீட்டுக்குப் புதிதாக ஏதா வது வாங்க விரும்பினால் வீட்டிலுள்ள அனைவரிடமும் பேசி ஆலோசித்து வாங்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு