Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 27 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `நோயின்றி வாழ, உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பயனுள்ள உபாயம்' ஒன்றை `நச்'சென்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

எழுதியவர் யார்?

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 27 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 27 - பரிசு ரூ.5,000

கடைசி தேதி: 21.12.2021

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் விகடன், புதிர்ப் போட்டி - 27

757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

புதிர்ப்போட்டி-25 விடைகள்...

1. அங்குசம்

2. தில்லையாடி

3. திங்கள்

4. ஓநாய்

5. வசந்தம்

6. பந்தி

7. செங்கல்

8. பூமாலை

திரைப்படத்தின் பெயர்: அலைகள் ஓய்வதில்லை

சரியான விடையுடன், `இந்தத் தீபாவளிக்கு நீங்கள் யாருக்காவது பரிசு கொடுத்திருப்பீர்கள்தானே... அது என்ன பரிசு? எதற்காகக் கொடுத்தீர்கள்?’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. பேபி சகிலா, சென்னை-24

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் தாயாருக்கு மூட்டுவலி பிரச்னையால் பிடிமானம் இல்லாமல் நடக்க முடியாத நிலை. அவர் சிரமமின்றி நடக்க ‘வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை தீபாவளிப் பரிசாக அளித்தேன்.

2. ச.சபானா, தூத்துக்குடி

என்னிடம் டியூஷன் படிக்க வரும் ஏழை மாணவர்களின் சொல்லாற்றலை விசாலப்படுத்த ‘ஆங்கிலம் - தமிழ் அகராதி’யை தீபாவளிப் பரிசாகக் கொடுத்தேன்.

3. அனு, சேலம்-4

பணியாரம் சுட்டு, பிழைப்பை நடத்துகிறார் எங்கள் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர். கரன்ட் இல்லாத நேரத்தில் அவர் சிரமப்படுவதைப் பார்த்து ‘எமர்ஜென்சி லைட்’ ஒன்றைப் பரிசளித்தேன்.

4. எஸ்.பிரியம்வதா, சென்னை-28

இந்த ஆண்டு உறவினர் இறப்பால் தீபாவளியைக் கொண்டாட முடியவில்லை. வழக்கமாக எங்கள் குடும்பத் துக்கு எடுக்கும் புத்தாடைகளை எங்கள் பகுதியில் இருக்கும் வசதி குறைந்த மூன்று தம்பதியருக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தோம்.

5. ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி.

தீபாவளிப் பரிசாக என் மாமனாரையும் மாமியாரையும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றேன். `விமானத்தில் பயணம் செய்ததே இல்லை’ என்ற ஏக்கத்தைப் போக்கினேன்.

6. ஜெயலக்ஷ்மி, சென்னை-42

வருமானமே இல்லாத எங்கள் கிராமத்துக் குலதெய்வக் கோயில் பூசாரிக்கு 3,000 ரூபாய் அனுப்பி அவருக்கு மகிழ்ச்சியைப் பரிசாகக் கொடுத்தேன்.

7. பி.கீதா, சேலம்-3

சைனஸ் பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு கற்பூரவல்லி செடியைத் தொட்டியுடன் பரிசளித்தேன்.

8. அமுதா அசோக்ராஜா, திருச்சி-15

ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளோருக்கு வீட்டில் செய்த பலகாரங்களைக் கொண்டுபோய் கொடுத்தேன். அப்போது ஒருவர் ‘போட்டுக்க ஜட்டி இல்லை...’ என்றார். உடனே வாங்கிக்கொடுத்தேன்.

9. ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

இருசக்கர வாகனத்தில் என் கணவர் வந்தபோது குறுக்கே சீறிப்பாய்ந்து வந்த காளையை ‘ஹேய்’ என்று குரலெழுப் பித் தடுத்து நிறுத்திய நடைபாதை பிச்சைக்காரருக்கு நன்றிக்கடனாகப் புத்தாடை பரிசளித்தேன்.

10. என்.உஷா, சென்னை-4

அடாது மழையிலும் நாள் தவறாமல் பால் பாக்கெட் போடும் பெண்ணுக்கு `ரெயின்கோட்' வாங்கிக் கொடுத்தேன்.