Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 28 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படம் (எந்த மொழியாகவும் இருக்கலாம்), உங்களை பாதித்திருந்தால்...' அதைப் பற்றி `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

முக்கோணத்தை நிரப்புங்கள்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 28 - பரிசு ரூ.5,000

கீழே 10 கேள்விகள் கேட்கப்பட்டிருக் கின்றன. அவற்றுக்கான பதில்களை முக் கோணத்தில் உள்ள கட்டங்களில் கீழிருந்து மேலாக நிரப்புங்கள்.

1. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு (10)

2. சாணக்கியர் எழுதிய நூல் (9)

3. ராமனின் வரலாற்றைக் கூறும் நூல் களில் ஒன்று (8)

4. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய மன்னர் (7)

5. திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகை மலையிலிருந்து உருவாகும் நதி (6)

6. அமுதசுரபி உணவுக் கிண்ணம் மூலம் ஏழைகளின் பசி தீர்த்தவர் (5)

7. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று கூறியவர் (4)

8. பாதாளம் வரை பாயும் (3)

9. தோட்டத்துக்குப் பாதுகாப்பு (2)

10. நெருப்பை இப்படியும் சொல்லலாம் (1)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 28 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `உங்கள் குடும்பம், உறவினர்கள் என்றல்லாது, முன் பின் அறியாத ஒருவருக்காக நீங்கள் குரல்கொடுத்த ஒரு தருணம்...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. பி.பானுமதி, சேலம்-30 பேருந்துப் பயணத்தில் திருநங்கை ஒருவர் காலியான சீட்டில் அமர்ந்தபோது பக்கத்தில் இருந்த பெண் அவருடன் விவாதம் செய்தார். ஏன் அமரக் கூடாது என்று கேட்டு அவருக்குப் பக்கத்திலேயே அமர வைத்தேன்.

2. லக்ஷ்மி வாசன், சென்னை-33 என் தோழி தன் மருமகளை தேவையில்லாமல் குற்றம் சொல்லிக்கொண்டிருந்ததைப் பார்த் தேன். தோழியிடம், இளைய தலைமுறையினரின் அணுகுமுறை குறித்து எடுத்துச் சொன்னேன். இப்போது அவர்கள் தாய் - மகள்!

3. எஸ்.ராஜம், ரங்கம். எங்கள் ஊர் அஞ்சல் நிலையத்தில் முதியோர் பென்ஷன் வாங்கும் ஒருவரை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஊழியரை நேரில் பார்த்து, ‘உங்க அப்பாவா இருந்தால் இப்படிச் செய்வீங்களா?’ என்று கேட்டேன். விரைவில் பெரியவருக்கு பென்ஷன் கிடைத்தது.

4. அபூர்வம், திருவள்ளூர் கணவனை இழந்த பெண் ஒருவர் வீதியில் செல்லும்போதெல்லாம் எங்கள் எதிர்வீட்டு அம்மா, ஏதாவது, சொல்லிக்கொண்டிருப்பார். ஒருநாள் அந்தம்மாவிடம் இதுகுறித்து பேசினேன். இப்போது வாயைத் திறப்பதில்லை.

5. சு.நிர்மலா ராஜ், செங்கல்பட்டு பக்கத்து வீட்டுக்காரர் மரத்தை வெட்ட... அது பக்கத்தில் இருந்த மின் இணைப்பில் சாய... டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்தது. பயந்து வீட்டுக்குள் ஒளிந்த அவரை வெளியே அழைத்து வந்து போன் போடச் சொல்லி நிலைமையைச் சீராக்கச் செய்தேன்.

6. உமாதேவி, தாதம்பட்டி, சேலம் நான் பணியாற்றும் வங்கிக் கிளையின் ஏடிஎம் காவலாளிக்கு ஏஜென்சி மாறிவிட்டதால் வேலை போனது. அவரது நிலைமையை எடுத்துச் சொல்லி ஏஜென்சி ஆட்களிடம் பேசி, வேலையைத் தொடர உதவினேன்.

7. மரகதம் ரமேஷ், கோயம்புத்தூர்-46 ஏழுமலையான் தரிசனத்துக்கு வரிசையில் நின்றிருந்த இளம் பெண்ணை அருகில் இருந்த ஒருவர் சீண்டிக்கொண்டிருந்தார். நான் ‘போலீஸ்’ என்று கத்த அடுத்த நிமிடம் அந்த ஆளைக் காணோம்.

8. என். சாந்தினி, மதுரை-9 மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்தில் துணிகள் நிறைந்த கட்டைப்பை ஒன்றை வைத்திருந்த வயதான பெண்மணியிடம் நடத்துநர், ‘லக்கேஜ் சீட்’ வாங்க வற்புறுத்தினார். நான் தட்டிக்கேட்டதும் அடங்கிவிட்டார்.

9. பியோனா வால்ட்டர், சென்னை-92 சென்னையில் ஒரு கல்லூரியில் கல்வித் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தும் வறுமையால் கட்டணம் கட்ட இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டவர்களை விரட்டினார் கல்லூரி ஊழியர். அவர்களை கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி இடம் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

10. அனு, சேலம்-4 பெரியவர் ஒருவரிடம், ஷேர் ஆட்டோ ஓட்டும் டிரைவர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக பணத்தைக் கேட்க, அவர் மறுக்க... அருகில் இருந்த நான், ‘உங்கள் ஆட்டோ எண்ணை நோட் பண்ணிட்டேன். உங்க பெயரைச் சொல்லுங்க’ என்றதும் பெரியவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.