Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 30 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 30 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், முகக்கவசம்... கொரோனாவையும் தாண்டி பலவிதங்களிலும் உங்களுக்குக் கைகொடுத்திருக்கக் கூடும். அப்படி உங்களுக்குப் பயன்பட்ட விதம் குறித்து சில வார்த்தைகளில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 30 - பரிசு ரூ.5,000

இடமிருந்து வலம்

1. தேர்வோ, போட்டியோ எல்லோரும் விரும்புவது (3)

4. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த -------- (3)

10. நீர்நிலைகளை வாகனங்கள் கடக்க இது உதவும் (3)

12. கிணற்றிலிருந்து நீரை எடுக்க இது அவசியம் (2)

14. பூக்களில் ஒன்று. பல வண்ணங்களில் காணப் படும் (6)

வலமிருந்து இடம்

3. நீரில் வாழும் மிகப் பெரிய உயிரினம் (6)

5. பசி ---- அறியாது (2)

7. வீட்டின் மேல் தளம் (2)

9. பாம்பு இது எடுக்கும் (3)

11. ------- கேட்டு வளராதவர்கள் உண்டோ? (2)

13. இது தன் வாயால் கெடும் என்பார்கள் (3)

16. யானைக்கு இது பிடித்தால் ஆபத்து (3)

மேலிருந்து கீழ்

1. உணவுக்குச் சுவையூட்டும். அடிக்கடி விலையேறும் (5)

2. ரவையில் செய்யப்படும் உணவு. உப்புமா அல்ல. (4)

11. ஆஸ்திரேலிய விலங்கு. வயிற்றில் பை இருக்கும் (4)

கீழிருந்து மேல்

6. தமிழ்நாட்டு பாரம்பர்யக் கலைகளில் ஒன்று (4)

8. வெயிலுக்கு ஏற்ற ஆடை (4)

14. முக்கனிகளில் ஒன்று. பழத்தின் தோல் சிவப்பாக இருக்கும் (4)

15. வேலை நாள்களில் முதல் கிழமை (4)

16. இதற்கு இருபக்கங்களிலும் இடி (5)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 30 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி-28 விடைகள்...

சரியான விடையுடன், `சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படம் (எந்த மொழியாகவும் இருக்கலாம்), உங்களை பாதித்திருந்தால் அதைப்பற்றி...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஜெ.சியாமளா, சென்னை-92: சமீபத்தில் பார்த்த ‘வினோதய சித்தம்’ படம், வித்தியாசமான அணுகுமுறையில் வாழ்க்கையில் எல்லாமே முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருக்கும்வரை நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தைச் சொன்னது.

2. ச.சஹானியா, திருநாகேஸ்வரம்: ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ - மலையாளத் திரைப்படம் பெண் சுதந்திரம், பெண்ணின் புரிந்து கொள்ள முடியாத வலிகள் பற்றிய சிறந்த படம். ஆண்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

3. ஜனனி ராம், சென்னை-78: ‘டேக் ஆஃப்’ மலையாளத் திரைப்படம்... தீண்டத்தகாத சமூகத்தினர், விவாகரத்தானவர், குடும்பக் கடனை அடைக்க - வெளிநாடு சென்று மறுவிவாகம் செய்து கர்ப்பிணியாகி - அதை பிள்ளையிடம் சொல்ல அஞ்சி - எல்லா சவால்களையும் ஏற்று, எதிலும் வெற்றிபெற முடியாமல் ஒடுக்கப்படும் பெண்ணின் வாழ்க்கை குறித்த இந்தப் படம் நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது.

4. கி.மகாலெட்சுமி, தூத்துக்குடி: ‘ஜெய் பீம்’ படத்தில் ‘பெண்ணின் பாவாடைய அவுத்துதான் உண்மையைக் கண்டுப்பிடிப்பீங்களா?’ என்று சிறப்பு புலனாய்வு அதிகாரியே காவல் ஆய்வாளரைக் கேள்வி கேட்கும் அளவுக்கு அதிகார வர்க்கத்தின் உச்சக்கட்ட கொடூரங்களைப் பார்த்து அதிர்ந்தேன்.

5. காவேரி, சென்னை-33: ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண் களும்’ படத்தைப் பார்த்ததும் குனிந்து உட்காரும் நான் நிமிர்ந்து உட்கார வேண்டும் என்று உணர்ந்தேன். சரஸ்வதியின் கதை என் சிறுவயது நினைவுகளைக் கிளறியது. புகைபோல நினைவுகளைக் கலைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், என் அம்மா அப்படி ஒரு நாற்காலியில் உட்காரவேயில்லை. வாழ்க்கை அப்படித்தான்.

6. நிர்மலா சிங்காரவேல், தூத்துக்குடி: ‘ஆன்டி இண்டியனி’ல் மதத்தை வைத்து அரசியல் செய்யும் மத அரசியலைத் தோலுரித்துக் காட்டியிருந்தது. குடும்பமாகக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு. பிணத்தை அடக்கம் செய்யும் காட்சிகளைக் காண வைப்பதுதான் நெருடலாக இருந்தது.

7. கே.தமிழரசி, சென்னை-116: ‘ஃபில்டர் கோல்டு’ என்ற தமிழ்ப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், வலிகள், அவமானங்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப் படுதல், பிறரின் கேலிக்குள்ளாதல் என அனைத்தும் அறிந்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன்.

8. என்.லதா, போரூர்: காவல் துறையில் ‘ரைட்டர்’ என்பவரின் வேலை... அவர்களுக்குப் பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தம், நெருக்கடிகள், பிரச்னைகளை உண்மைக்கு மிக அருகில் பார்த்தது போல் இருந்தது. அன்றைய தினம் என்னால் தூங்க முடியவில்லை.

9. அதித்ரி பாலாஜி, சென்னை-28: `மாநாடு' - டைம் லூப் கருத்துருவின் அடிப்படையில் அமைந்த அரசியல் களத்தில்

பல திருப்பங்கள்... அவை அனைத்தையும் சரியாக இணைக்கப்

பட்ட நிகழ்வுகள் என்று காண்பவர் நினைவுத்திறனுக்கு சவாலாக அமைந்தது.

10. ஜெ.சங்கரி, பெருங்களத்தூர்: ‘போட்டோ ஃப்ரேம்’ என்னும் மராத்தியத் திரைப்படத்தைப் பார்த்ததும் அரை நூற்றாண்டுக்கு முன் என் தந்தை இறந்தபோது அவரின் நினைவாக ஒரு போட்டோ கூட இல்லாமல், நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணத்தில் கூட்டத் தோடு அவர் இருப்பதைப் பார்த்து, அதை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்து அவரை மட்டும் தனியாகக் கறுப்பு வெள்ளைப் படமாக நகல் எடுத்தது நினைவுக்கு வந்தது. சின்ன விஷயத்தைச் சிறப்பாக எடுத்த அந்தப் படம் சூப்பர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism