Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 31 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 31 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `உங்கள் இணையுடன் நீங்கள் சென்ற சுற்றுலாக்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்?' சில வார்த்தைகளில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்!

கீழே இருக்கும் விடுகதைகளுக்கான விடைகளைக் கட்டத்துக்குள் நிரப்புங்கள். அந்த விடைகளில் வட்ட மிட்டுள்ள எழுத்துகளை இணைத்தால் 5 வார்த்தைகள் கிடைக்கும். விடைகளையும் 5 வார்த்தைகளையும் சரியாகக் கண்டுபிடித்து எழுதி அனுப்புங்கள்.

1. பிறந்த அன்றே மடிவான். அவன் யார்?

2. மழையில் நனைந்தாலும் கவலைப்பட மாட்டான்; வெயிலில் அலைந்தாலும் கவலைப்பட மாட்டான். அவன் யார்?

3. கடல் நீரில் பிறந்து மழை நீரில் மடியும். அது என்ன?

4. கண்ணால் பார்க்க முடியாத கல்; காதால் கேட்கக் கூடிய கல். அது என்ன கல்?

5. மண்ணுக்குள் இருக்கும் மாயாண்டி... உரிக்க உரிக்க தோலாண்டி. அவன் யார்?

6. வாயிலிருந்து நூலெடுப்பான்... மந்திரவாதியில்லை; வலைவிரித்துக் காத்திருப்பான் வேடனும் இல்லை. அவன் யார்?

7. வெட்டிக்கொள்வான். ஆனாலும் ஒட்டிக்கொள்வான். அவன் யார்?

8. சாவியில்லாக் கதவுகள், தொட்டால் மூடிக்கொள்ளும்.அது என்ன?

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 31 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 31 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `சொந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்றால், அங்கே நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் விஷயம் எதுவாக இருக் கும்... ஏன்? ’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. ரத்னா நாகராஜ், சென்னை-15: நான் படித்த பள்ளிக்கூடம் இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கும். தோழிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு படித்தது, சினிமா கதைகளை விவாதித்தது, ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய கவனிப்பு, மதிப்பெண்ணுக்காகக் காத்திருந்தது என அது ஈடுசெய்ய முடியாத கனாக்காலம்.

2. என்.பாக்யலக்ஷ்மி, மதுரை-9: என் சொந்த ஊர் சின்ன கிராமம். அந்த ஊர் குழந்தைகள் ஆவலோடு என்னைப் பார்க்க ஓடி வருவதை ரொம்பவே எதிர்பார்த்து, அவர்களுக்கான விளை யாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள் வாங்கிச் செல்வது என் வாடிக்கை. அவர்களது மகிழ்ச்சி, என் மனநிறைவு.

3. ஆர்.சுந்தரவல்லி, சேலம்-4: சொந்த ஊருக்குச் சென்றால் சிறு வயதில் இருந்து அங்கேயே வசிக்கும் ஒருவர் ஓடிவந்து என் பெயரைச் சொல்லி, கைகளைப் பிடித்து, `வா எப்படி இருக்கே’ என்று கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். காரணம், அவருக்கு என்னை அடையாளம் தெரிகிற மாதிரி என் உருவம் மாறாமல் இருக்க வேண்டும் என்கிற ஆசை.

4. கோமதி உலகநாதன், சென்னை-76: எப்போதோ ஒருமுறை சென்றாலும், எதிர்ப்படும் அனைவரும் `நல்லா இருக்கியா... எப்ப வந்தே...’ எனத் தொடங்கி பேசும் வட்டார வழக்கு மொழியைக் கேட்பதில் உள்ள ஆனந்தத்தை அனுபவித்தால்தான் புரியும்.

5. ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி: தலைவாசலில் நிற்கும் அம்மா விடம் தெருவாசி ஒருவர், ` மகள் வந்திருக்காளா?’ என்று கேட்ட தும், ‘ஆமா... மகாலெட்சுமி வந்துட்டாள்ல’ என்று உணர்ச்சிப் பொங்க மகிழ்ச்சியுடன் கூறுவதை வீட்டினுள் இருந்தவாறு காதில் கேட்டதும் மனதினில் பொங்குமே ஓர் உணர்வு... அது சந்தோஷத் தின் உச்சக்கட்டம்.

6. பி.ரமணி இளங்கோ, அழகாபுரம், சேலம்: மூட்டுவலி பிரச்னையால் வெளியே போக முடியாமல் முடங்கிக்கிடக்கும் என் பாட்டியுடன் பல்லாங்குழி, பரமபதம் விளையாடியும், கோயில், ஹோட்டல், உறவினர் வீடு என ஸ்கூட்டியில் அழைத்துச் சென்று குஷிப்படுத்தி பாட்டியின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுக்க சொந்த ஊருக்குச் செல்வேன்.

7. அன்னா மேரி இவான், சென்னை-92: எங்கள் சொந்த ஊர் மணப்பாட்டில் வீடுகளில் விசேஷமாகச் செய்யப்படும் வாழைப்பழ இனிப்பு (அல்வா) மிகவும் பிரபலமானது. உறவினர்கள் செய்து தரும் அந்த அல்வாவே சொந்த ஊரில் நான் எதிர்பார்க்கும் விஷயம்.

8. எஸ்.சுகந்தி சுந்தர், திருவாரூர்: என் சொந்தங்களின் அன்பு விசாரிப்புகள்; விருந்தோம்பல்... பெளர்ணமி நிலவில் மாடியில் நிலாச்சோறு சாப்பிடுவது போன்றவை நெஞ்சில் பசுமையாக இருக்கும் தெவிட்டாத இன்பம்.

9. எஸ்.எம்.அட்சயா கலைவாணி, மைசூரு: பாட்டி வைத்துத்தரும் வத்தக்குழம்பு - சுட்ட அப்பளம் மற்றும் பருப்புத் துவையல்... தாத்தா கடையில் வாங்கித்தரும் குழிப்பணியாரம், இனிப்பு போளி... அக்கம்பக்கத்தினரின் குசல விசாரிப்புகள்... சொல்லிக் கொண்டே போகலாம். கொரோனாவால் தடைப்பட்டுள்ள

இந்தப் பயணம்... மீண்டும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

10. எம்.மீராபாய், தஞ்சாவூர்: தாய்மடி... மனதின் பாரங்களை இறக்கி வைக்க சொந்த ஊருக்குச் செல்வேன். அங்கே தலைவருடும் தாயின் ஸ்பரிசத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism