Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 32 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 32 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘இந்தப் பழக்கத்தை மட்டும் விடணும்னு நினைக்கிறேன். ஆனா, முடியல என்று நீங்கள் நினைப்பது..?' சில வார்த்தை களில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

விளையாட்டு வீராங்கனைகளைக் கண்டுபிடியுங்கள்!

கீழே 9 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பு களைக்கொண்டு, கட்டங்களுக்குள் ஒளிந்திருக்கும் விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள்!

மேலிருந்து கீழ்...

1. ஹாக்கி வீராங்கனை. 15 வயதில் இந்திய அணியில் இடம்பெற்றவர். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பைக் குழுவில் இடம்பெற்ற இளைய வீராங்கனை.

2. மல்யுத்த வீராங்கனை. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். ஹரியானாவைச் சேர்ந்தவர்.

3. இந்தியக் குத்துச்சண்டையின் அடையாளம். மணிப்பூரைச் சேர்ந்தவர். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்றவர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர்

4. இறகுப் பந்தாட்ட (பேட்மின்டன்) வீராங்கனை. உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியப் பெண். 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

இடமிருந்து வலம்...

5. இந்திய கிரிக்கெட்டின் அடையாளம். அதிக ரன்களைக் குவித்த முதல் பெண் பேட்ஸ்வுமனாகக் கருதப்படுகிறார்.

6. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து 2015-ம் ஆண்டு ஃபேமிலி கோப்பை டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார். சமீபத்தில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

கீழிருந்து மேல்...

7. ஓட்டப்பந்தய வீராங்கனை. உலக தடகள சாம் பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர். 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் சர்வதேசப் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றவர். இவருடைய பெயரின் முதல் பாதி மட்டுமே கட்டங்களில் இருக்கிறது.

8. வில்வித்தை வீராங்கனை. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றவர்.

9. ஹைதராபாத்தைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங் கனை. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி யில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 32 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி-30 விடைகள்...

இடமிருந்து வலம்: 1. வெற்றி, 4. காளான், 10. பாலம், 12. வாளி, 14. செம்பருத்தி.

வலமிருந்து இடம்: 3. திமிங்கலம், 5. ருசி, 7.மாடி, 9. படம், 11. கதை, 13. தவளை, 16. மதம்.

மேலிருந்து கீழ்: 1. வெங்காயம், 2. கிச்சடி, 11. கங்காரு.

கீழிருந்து மேல்: 6. கரகம், 8. பருத்தி, 14. செவ்வாழை, 15. திங்கள், 16. மத்தளம்.

சரியான விடையுடன், `முகக்கவசம்... கொரோனாவையும் தாண்டி பலவிதங்களிலும் உங்களுக்குக் கைகொடுத்திருக்கக் கூடும். அப்படி உங்களுக்குப் பயன்பட்ட விதம் குறித்து சில வார்த்தை களில்...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. எ.சுகுணா, சேலம்-3: பல் பிரச்னையால் முன்பக்க பற்களில் ஒன்றை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பல் எடுத்து, காயம் ஆறி, புதிய பல் வைப்பதற்கு ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர் கூறிவிட்டார். அந்த ஒரு மாத காலமும் வெளியே செல்லும்போதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசும் போதும் உதவியாக இருந்தது முகக்கவசம்.

2. வி.சுந்தரி விஸ்வநாதன், குன்றத்தூர், சென்னை-69: என் வயது 58. வயிற்றில் ஏற்படும் பிரச்னையால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதற்கு பயந்து யாரிடமும் பேசாமலே இருந்த எனக்கு உதவுவது முகக்கவசமே.

3. பி.இலக்கியா, ஆரப்பாளையம், மதுரை: எனக்கு டஸ்ட் அலர்ஜி. ஆஸ்துமா பிரச்னையை வெகுவாகக் குறைத்து இப்போது நலமாக இருப்பதற்கு காரணம் முகக்கவசம்தான்.

4. ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46: மொபைலில் ரோட்டில் செல்லும் பெண்களைப் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களிடம் தப்பிக்க மிகப் பெரிய கவசமாக இருக்கிறது.

5. இரா.ஜயலக்ஷ்மி, சென்னை-125: அடிக்கடி தும்மல் வரும் எனக்கு. குளிர்காலத்தில் காலை வேளையில் கோயிலுக்குச் செல்லும்போது எனக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பைக் கொடுத்தது முகக்கவசம்.

6. மு.ரியானா, கம்பம்: தவறான நோக்குடன் பார்க்கும் கண்களி லிருந்து முகக்கவசம் என்னை பலமுறை பாதுகாத்திருக்கிறது.

7. கே.ஆர்.சாந்தி, மதுரை-1: வீட்டில் பாத்ரூம், டாய்லெட்டை ‘ப்ளீச்சிங் பவுடர்’ போட்டு சுத்தம் செய்யும்போதும், தெருவில் கொசு மருந்து அடிக்கும் வாகனம் கடந்துபோகும்போதும் முகக்கவசம் பெரிதும் துணைபுரிகிறது.

8. சி.செல்வம், திருவையாறு: அரசு `மாஸ்க்’ அணிய அறிவுறுத்திய போது பரவலாக `மாஸ்க்’ கிடைக்காத நேரம். வீட்டில் தையல் மெஷின் இருந்ததால் மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினேன். கடைகளில் 10 ரூபாய்க்குக் கொடுத்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்தப் பணம் உதவியாக இருந்தது.

9. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2: இரவு நேர ரயில் பயணம் ஒன்றில் சக பயணிகள் விளக்கை அணைக்காமல் அரட்டையடித்துக் கொண்டே இருந்தனர். பையில் இருந்த எக்ஸ்ட்ரா மாஸ்க்கால் கண்களை மறைத்து நிம்மதியாகத் தூங்கினேன்.

10. அபூர்வம், திருவள்ளூர்: அரவை மெஷின் வைத்து தொழில் செய்யும் எங்களுக்கு மிளகாய், சீயக்காய் அரைக்கும்போது நெடி தாங்க முடியாமல் அவதிப்படுவோம். இப்போது முகக்கவசம் புழக்கத்துக்கு வந்தபிறகு பாதுகாப்பாக உணர்கிறோம்.