Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 33 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 33 - பரிசு ரூ.5,000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `பிளாக் அண்ட் வொயிட் திரை ஜோடிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஜோடி எது? ஏன்?' சில வார்த்தைகளில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

யார் இவர்?

மகளிர் தினத்தை முன்னிட்டு இங்கே 8 முன்னோடி பெண்களைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் யாரென்று சரியாகக் கண்டுபிடித்து, கீழேயுள்ள சக்கரத்தில் விடுபட்ட எழுத்துகளை நிரப்பினால், விடை கிடைத்துவிடும்.

1. தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில், கலந்துகொண்டவர். தனக்கு விடுதலையுணர்வு ஊட்டியவர் என்று காந்தியால் புகழப்பட்டவர். 16 வயதில் உயிரிழந்தவர். இவர் பெற்றோர் தமிழ்நாட்டின் தில்லையாடியைச் சேர்ந்தவர்கள்.

2. சிவகங்கையின் ராணி. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்டக் காரர். பல மொழிகளைக் கற்றவர். ஆங்கிலேயர்களின் படையெடுப்பைச் சமாளிக்க, திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியிடம் உதவி கேட்டவர்.

3. பெண் மருத்துவர். சமூக போராட்டக்காரர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். 1926-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போன்ற பெருமைகளைப் பெற்றவர்.

4. தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதி. எழுத்தாளர். தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். தேவதாசி ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமிக்கு உறுதுணையாக நின்றவர். இவர் பெயரில் திருமண உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது.

5. பெண் புலவர். குழந்தைகளுக்கும் அறிமுகமானவர். அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தவர்.

6. துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர். சமூக ஆர்வலர். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றவர். `நாவல் ராணி', `கதா மோகினி' என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். 115 புதினங்களை எழுதியிருக்கிறார்.

7. சுதந்திரப் போராட்ட வீராங்கனை. பெண்ணியவாதி. தீண்டாமை எதிர்ப்பாளர். பண்ணை அடிமை முறையை எதிர்த்தவர். கூந்தலை வெட்டிக்கொண்டார். வேட்டி, ஜிப்பா அணிந்தார். விவசாயப் போராட்டங்களில் பங்கேற்றார்.

8. மருத்துவர். இவர் பெயருக்கு முன்னால் கரந்தை என்ற ஊரின் பெயர் அடைமொழியாக இருக்கும். நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் செயல்பட்டார். சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை போன்றவற்றில் அதிக அக்கறை காட்டியவர். தமிழாசிரியர்களுக்குக் குறைவான சம்பளம் வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடியவர்.

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 33 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 33 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், `உங்கள் இணையுடன் நீங்கள் சென்ற சுற்றுலாக்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்?’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. ராஜேஸ்வரி, பெங்களூரு-67: கணவருடன் அந்தமான் தீவுகளுக்குச் சென்றது இன்னும் மனதை விட்டு அகலவில்லை. சுற்றி கடலும் கடலுக்கடியில் சென்ற பிரயாணமும், அங்குள்ள மீன்களின் அழகும் ஆஹா... அற்புதம்.

2. எம்.நிர்மலா, புதுச்சேரி.: மூலிகைகள் நிறைந்த கொல்லிமலையின் கொண்டை ஊசி வளைவுகளில் இணையுடன் பயணித்தது தனி சுகம். அழகிய ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழ்ந்த சிலிர்ப்பான அனுபவத்தை மறக்கவே முடியாது.

3. பானு பெரியதம்பி, சேலம்-30: மேகாலயாவுக்கு கணவருடன் செல்லும் முன்பே, பள்ளியில் படித்த, இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடத்தைக் காணப் போகும் குதூகலம் வந்துவிட்டது. சுற்றிலும் மலைகள், பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி என்ற இயற்கையின் பொக்கிஷங் களை நேரில் பார்த்ததும் உடலும் மனதும் சிலிர்த்தன.

4. சம்பகலக்ஷ்மி பாலாஜி, சென்னை-28: கர்நாடகாவில் உள்ள கூர்குக்கு என்னவருடன் சென்றபோது குடகுமலைக் காற்றின் இடையே ஊற்றெடுத்துக் கிளம்பும் தலைக்காவிரியைக் கண்டதும் அங்கேயே இருந்துவிடலாம் என்ற ஆசை வந்தது.

5. பிரபா டாக்கர், ஹைதராபாத்: கடந்த ஆண்டு கணவருடன் பூடான் சென்றிருந்தேன். அவ்விடத்தின் சீதோஷ்ண நிலை, தூய்மை, அங்குள்ள பெண்களின் அழகு... அவர்கள் நிர்வாகத்தில் நடக்கும் விடுதிகள் என ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை.

6. இரா.சுந்தரவல்லி, சேலம்-4: என் கணவருடன் 2004 மே மாதம் பத்ரிநாத் யாத்திரைக்குச் சென்றதை என்னால் மறக்க முடியாது. ராணுவக் கட்டுப்பாடுகளுடன் வெடவெட குளிரில் பயணம் செய்த அந்த அனுபவம் இன்றுவரை நினைவில் இருக்கிறது.

7. கே.தமிழரசி, சென்னை-116: திருமணமான புதிதில் என் கணவருடன் பெங்களூரு சென்றேன். லேசான குளிரில் கப்பன் பார்க்கில் கைகோத்தபடி நடந்த பரவசத்தை இன்னும் ஒருமுறை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்திவிட்டது உங்கள் புதிர்ப் போட்டி.

8. ரா.தமிழமுது, புதுக்கோட்டை: திருமணம் முடிந்ததும் புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்ன வாசலுக்கு கணவருடன் சென்றேன். குகையில் இருந்த சித்திரங்கள் அழகு என்றால், அங்கு வசித்த மலைவாழ் மக்களின் இயற்கையான வாழ்க்கைமுறை அழகோ, அழகு!

9. சுகுணா, சேலம்-3: கணவருடன் சென்றதில் எனக்குப் பிடித்த சுற்றுலா ஸ்பாட் சிங்கார சென்னைதான். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் சமாதிகள், மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோயில், அருங்காட்சியம், சைதாப்பேட்டை வடகறி அனைத்தும் நினைவைவிட்டு நீங்காதவை.

10. சி.சுபா, சென்னை-40: மத்தியப்பிரதேசம் - ஜபல்பூர் அருகில் உள்ள ‘பேடாகாட்’ என்ற சுற்றுலா தலத்தில் சலவைக்கல் பாறைகளுக்கிடையே பாயும் நர்மதை நதியில் இணையுடன் செய்த படகு சவாரி என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism