மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `விதியை முயற்சியால் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்' பற்றி சில வார்த்தைகளில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
1. மலைக்கோட்டை இந்த மாவட்டத்தில் இருக்கிறது (4)
4. ..... அனைவரும் இந்தியர்கள் (2)
6. தமிழ்நாட்டின் மரம் (2)
8. கெஜ்ரிவாலின் கட்சி பெயரின் முதல் பாதி (2)
11. துன்பம் நேர்கையில் ..... இசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா? (2)
14. பொட்டு போல் இலையிருக்கும், குச்சி போல் காய் காய்க்கும் (4)
வலமிருந்து இடம்
3. உயிர்த் திரவம் (4)
5. உணவுக்கு முன்பு சாப்பிடும் திரவ உணவு (2)
9. குதிரையை இப்படியும் அழைக்கலாம் (2)
12. தயிருடன் இனிப்புச் சேர்த்து அருந்தும் பானம் (2) நடு எழுத்து மிஸ்ஸிங்
13. சரும நோய்களில் ஒன்று (2)
16. ஆஸ்திரேலிய விலங்கு. வயிற்றில் பை இருக்கும் (4)
மேலிருந்து கீழ்
2. கண்ணகியின் காலில் இருந்தது .... (4)
3. மரத்தை அறுக்கும் கருவி (4)
10. நடனமாடுபவர்கள் காலில் அணியும் ஆபரணம் (4)
கீழிருந்து மேல்
6. வெயில் காலத்துக்கு ஏற்ற துணி (4)
7. மிதவை என்பதை இப்படியும்
அழைக்கலாம் (4)
14. பழத்துக்கு வெளியே விதை இருக்கும். (4)
15. இந்த நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் (4)
16. கடல் பயணத்துக்கு ஏற்ற வாகனம் (4)


சரியான விடையுடன், ‘இந்தப் பழக்கத்தை மட்டும் விடணும்னு நினைக்கிறேன். ஆனா, முடியல என்று நீங்கள் நினைப்பது..?' - நச் வரிகள் எழுதி ரூ. 500 பரிசு பெறும் 10 பேர்...
1. இந்திராணி தங்கவேல், சென்னை-126
மற்றவர்கள் பேசுவதை முழுமையாகக் கேட்காமல் குறுக்கே பேசும் பழக்கம் எனக்குண்டு. அதை கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், முடியாமல் தவிக்கிறேன்.
2. கார்த்திகா மூர்த்தி, திருநாகேஸ்வரம்
குழந்தைகளைத் திட்டக்கூடாது; நட்போடு பழக வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், முன்கோபம் வந்து அடிக்கடி திட்டிவிடுகிறேன்.
3. ஜி.நாராயணி, சென்னை-87
தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், வீட்டு வாசலுக்கு வந்து வியாபாரம் செய்வோரிடம் பேரம் பேசுவதை விட்டுவிட நினைப்பேன்... முடியவில்லை.
4. எஸ்.திரிபுரசுந்தரி, கோயம்புத்தூர்-8
என்னிடம் யார் பணம் வேண்டும் என்று கேட்டாலும் கொடுத்துவிட்டு திரும்ப வாங்குவதற்குள் திண்டாடி விடுகிறேன். இந்தப் பழக்கத்தை கைவிட நினைத்தாலும் முடியவில்லை.
5. கே.தமிழரசி, சென்னை-116
தினமும் நள்ளிரவு வரை மொபைலை பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் 'அடிக்ட்' ஆகி தவிக்கிறேன்.
6. பி.அமுதா, சேலம்-16
பொது இடங்களில் மொபைலில் பேசும்போது என்னையும் அறியாமல் எப்போதும் ரொம்ப சத்தமாகப் பேசுகிறேன். இதனால் பலர் எரிச்சலடைவதை நான் உணர்ந்தாலும் என்னால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
7. கே.லதா, திருநின்றவூர்
தள்ளுபடி, ஆஃபர் என ஏதாவது அறிவிப்பு வந்தால் அது தேவையா, அவசியம்தானா என்று யோசிக்காமல் உடனே ஆர்டர் செய்து ஆன்லைனில் வாங்கிவிடுகிறேன். இந்தப் பழக்கத்தை தடுக்க நினைத்தாலும் முடியவில்லை.
8. உமாதேவி பலராமன், திருவண்ணாமலை
என் நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் முகநூலில் இருந்து விடுபட நினைத்துக்கொண்டே இருக்கிறேன். முடியவில்லை.
9. ஜி.நிஷா, சென்னை-87
கோபம் வந்தால் டென்ஷனாகி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகிறேன். இதனால் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க நினைக்கிறேன்.
10. க.சவுந்தர்யா, புதுச்சேரி-4
நகங்களை வளர வளர பல்லால் கடித்துத் துப்பும் பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறேன். ஆனால், இன்னும் தொடர்கிறது.